பாடம் 1. பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் : சங்க காலம்

பாடம் 1. பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் : சங்க காலம்
கலைச்சொற்கள்
| கடும் முயற்சி | strove | tried hard |
| ராஜ வம்சம் | dynasty | a line of hereditary rulers |
| கெளரவிப்பதற்காக | commemorate | to honour the memory of |
| அரச சின்னம் | royal insignia | symbols of power |
| ஆதரவு | patronage | support given by a patron |
| வெளிக்காட்டுதல் | blazoned | displayed vividly |
| விடுதலை | acquitted | released |
| புலவர்கள் | bards | poets singing in praise of princes and brave men |
| சேமிப்புக் கிடங்கு | warehouses | a large building for keeping goods |
| சித்தரிக்கப்பட்டுள்ளது | portrayed | described elaborately |
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- சேரன் செங்குட்டுவன்
- இளங்கோ அடிகள்
- முடத்திருமாறன்
விடை : சேரன் செங்குட்டுவன்
2. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
- பாண்டியர்
- சோழர்
- பல்லவர்
- சேரர்
விடை : பல்லவர்
3. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________ ஆவர்.
- சாதவாகனர்கள்
- சோழர்கள்
- களப்பிரர்கள்
- பல்லவர்கள்
விடை : மத்திய ஆசியா
4. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு ________
- மண்டலம்
- நாடு
- ஊர்
- பட்டினம்
விடை : ஊர்
5. குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
- கொள்ளையடித்தல்
- ஆநிரை மேய்த்தல்
- வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
- வேளாண்மை
விடை : வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
கூற்றை வாசிக்கவும், சரியான விடையை (✓) செய்யவும்
1. கூற்று : புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
- கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
- கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று சரி; காரணம் தவறு.
- கூற்றும் காரணமும் தவறானவை.
விடை : கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
2. கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்.
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
- ‘1’ மட்டும்
- ‘1 மற்றும் 3’ மட்டும்
- ‘2’ மட்டும்
விடை : ‘1 மற்றும் 3’ மட்டும்
3. பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது
- ஊர் < நாடு < கூற்றம் < மண்டலம்
- ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
- ஊர் < மண்டலம்< கூற்றம் < நாடு
- நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
விடை : ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
4. அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
| 1. சேரர் | மீன் |
| 2. சோழர் | புலி |
| 3. பாண்டியர் | வில், அம்பு |
| விடை : 1 – இ, 2 – ஆ, 3 – அ | |
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வெண்ணி போரில் வெற்றி பெற்றது ________
விடை: கரிகாலன்
2. சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ________
விடை: தொல்காப்பியம்
3. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ________ கட்டினார்
விடை: கரிகாலன்
4. படைத் தலைவர் ________ என அழைக்கப்பட்டார்
விடை: தானைத் தலைவன்
5. நில வரி ________ என அழைக்கப்பட்டது
விடை: இறை
சரியா? தவறா?
1. சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர்
விடை: தவறு
2. சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது
விடை: தவறு
3. கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்
விடை: சரி
4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்
விடை: தவறு
5. கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன
விடை: தவறு
பொருத்துக
| 1. தென்னர் | சேரர் |
| 2. வானவர் | சோழர் |
| 3. சென்னி | வேளிர் |
| 4. அதியமான் | பாண்டியர் |
| விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ | |
ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. பண்டைக்காலத் தமிழகத்தின் வரலாற்றை மறுகட்டுமானம் செய்ய உதவும் இரு இலக்கியச் சான்றுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- தொல்காப்பியம்
- எட்டுத்தொகை
- பட்டினப்பாலை
- பதிணெண்கீழ்கணக்கு
2. நடுகல் அல்லது வீரக்கல் என்றால் என்ன?
பண்டைக்காலத் தமிழர்கள் போர்க்களத்தில் மரணமுற்ற வீரர்கள்மேல் பெரும்மரியாதை கொண்டிருந்தனர். போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடுகற்கள் நடப்பட்டன.
3. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து திணைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
4. சங்க காலத்தோடு தொடர்புடைய இரு தொல்லியல் ஆய்விடங்களைக் குறிப்பிடுக.
ஆதிச்சநல்லூர், உறையூர்
5. கடையேழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
- பாரி
- காரி
- ஓரி
- பேகன்
- ஆய்
- அதியமான்
- நள்ளி
6. களப்பிரர் காலத்தைச் சேர்ந்த ஏதேனும் மூன்று தமிழ் இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
- பெரியபுராணம்
- சீவசிந்தாமணி
- குண்டலகேசி
கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்
1. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
- சமூக வாழ்வில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை.
- கற்றறிந்த, அறிவுக் கூர்மையுடைய பெண்கள் இருந்தனர்.
- நாற்பது பெண்புலவர்கள் வாழ்ந்து அரியநூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர்.
- சங்க காலப் பெண்பாற்புலவர்கள் : அவ்வையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார், ஆதி மந்தியார், பொன்முடியார்.
- திருமணம் சொந்த விருப்பத்தை சார்ந்து அமைந்திருந்தது.
- இருந்தபோதிலும் ‘கற்பு’ பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது.
- பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றிருந்தனர்.
உயர் சிந்தனை வினாக்கள்
1. கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்படுகிறான் நிறுவுக
- கரிகாலன் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர் தலைவர்களின் கூட்டுப்படைகளை வெண்ணி போரில் தோற்கடித்தார்.
- காடுகளை விளைநிலங்களாக மாற்றினார்.
- வேளாண்மை மேம்பாட்டிற்காக காவிரியில் கல்லணை கட்டினார். புகார் துறைமுகம் மூலம் நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பட்டினப்பாலை நூல் மூலம் தெரிகிறது. எனவே கரிகாலன் சோழர்களின் மிகச்சிறந்த அரசனாகக் கருதப்படுகிறான்.
2. களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல காரணங்கள் தருக
- தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரிய புராணம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கியச் சான்றுகள் களப்பிரர்கள் ஆட்சி குறித்தவை. சீவகசிந்தாமணி, குண்டலகேசி, இரண்டும் களப்பிரர்கள் காலத்தவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டன. இக்காலத்தில்தான் சமணமும், பௌத்தமும் முக்கியத்துவம் பெற்றன.
- சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து முறை உருவானது.
- வணிகமும் வர்த்தகமும் செழித்தோங்கின. எனவே களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் அல்ல.
கட்டக வினாக்கள்
| பழந்தமிழ்க் காப்பியங்கள் இரண்டினைக் குறிப்பிடுக. விடை: சிலப்பதிகாரம், மணிமேகலை | அரசருக்கு உதவிய இரண்டு குழுக்களின் பெயர்களைக் குறிப்பிடுக. விடை: ஐம்பெருங்குழு, எண்பேராயம். | சங்க காலத்து பெண்பாற் புலவர்கள் இருவரின் பெயர்களைக் கூறு. விடை: அவ்வையார், பொன்முடியார் |
| சங்ககாலத்து மூன்று முக்கியத் துறைமுகங்களின் பெயர்களை எழுதுக. விடை: முசிறி, தொண்டி, கொற்கை | முத்தமிழில் எவை எல்லாம் அடங்கும்? விடை: இயல், இசை, நாடகம் | சிலப்பதிகாரம் ________ ஆல் எழுதப்பட்டது. விடை: இளங்கோவடிகள் |
| எந்தப் பாண்டிய அரசனோடு தலையாலங்கானம் தொடர்புடையது? விடை: நெடுஞ்செழியன் | எந்தத்திணை மென்புலம் என்றழைக்கப்பட்டது? விடை: மருத நிலம் | துறைமுகங்களில் இருந்த ஒளிவிளக்குக் கோபுரங்கள் ……………….. என அழைக்கப்பட்டன. விடை: கலங்கரை இலங்குசுடர் |
6th Science Book Link – Download
சில பயனுள்ள பக்கங்கள்