Tamil Nadu 6th Standard Daily Test | Class 6th Tamil Model Test – 1

Samacheer Books 6th Tamil Test 1

6th Std Tamil Model Test 1

Questions

1. பிரித்து எழுதலில் சரியான ஒன்றைத் தேர்க

  1. சீரிளமை = சீர்மை + இளமை
  2. இடப்புறம் = சீர்மை + இளமை
  3. அமுதென்று = அமுது + தென்று
  4. நிலத்தினிடையே = நிலத்து + இடையே

2. தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்- என்ற பாடல் வரிக்கு சொந்தமானவர்

  1. கவிமணி
  2. பாரதிதாசன்
  3. காசி ஆனந்தன்
  4. நெல்லை சு.முத்து

3. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது – இக்குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம் எது?

  1. நீத்தார் பெருமை
  2. மக்கட்பேறு
  3. இனியவை கூறல்
  4. அன்புடைமை

4. “கபிலர்” என்ற சொல்லின் மாத்திரை அளவு யாது?

  1. மூன்று
  2. மூன்றரை
  3. நான்கு
  4. நான்கரை

5.சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க

  1. கண்டம் – Migration
  2. வலசை – Continent
  3. தட்ப வெப்பநிலை – Weather
  4. புகலிடம் – Sanctuary

6. “ஓளடதம் + ஆம்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

  1. ஓளடதமாம்
  2. ஓளடதம்ஆம்
  3. ஒளடதாம்
  4. ஓளடதஆம்

7. பின்வரும் கூற்றுகளை கவனி

  1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்
  2. இவர் பாவலரேறு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார்.
  3. கனிச்சாறு. கொய்யாக்கனி. காவியக்கொத்து. நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்
  4. தென்மொழி, தமிழ்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்

A) 1, 2, 4 சரி 3 தவறு B) 2, 3, 4 சரி 1 தவறு

C) 3, 4 சரி 1, 2 தவறு D) அனைத்தும் சரி

8. “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” என்ற பாடல் இடம் பெற்ற நூல்?

  1. தொல்காப்பியம்
  2. புறநானூறு
  3. சிலப்பத்திகாரம்
  4. தேவாரம்

9. புதுமைகள் செயத தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது – என்ற பாடலின் ஆசிரியரின் இயற்பெயர்?

  1. சுப்பிரமணியன்
  2. தே.சி.க. விநாயனார்
  3. இராதா கிருஷ்ணன்
  4. சுப்புரத்தினம்

10. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?

  1. நாமக்கல் கவிஞர்
  2. திரு.வி.க
  3. உ.வே.சா
  4. பாரதியார்

Answers

  1. A) சீரிளமை = சீர்மை + இளமை
  2. C) காசி ஆனந்தன்
  3. B) மக்கட்பேறு
  4. B) மூன்றரை
  5. D) புகலிடம் – Sanctuary
  6. A) ஓளடதமாம்
  7. A) 1, 2, 4 சரி 3 தவறு
  8. A) தொல்காப்பியம்
  9. C) இராதா கிருஷ்ணன்
  10. C) உ.வே.சா

Some Important Links

Leave a Comment