Tamil Nadu 6th Standard Tamil Book Term 1 கனவு பலித்தது Solution | Lesson 1.4

பாடம் 1.4 கனவு பலித்தது

In the 6th Standard Tamil book answers that we are looking at in order. Today we are going to see the answers of the Kanavu Palithathu (கனவு பலித்தது) lesson.

If you do not see the answers to the first two lessons that we have already posted, See the link below.

6ஆம் வகுப்பு கனவு பலித்தது பாட விடைகள்

தமிழ்த்தேன் > கனவு பலித்தது

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர் _______

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. ஒளவையார்
  4. தொல்காப்பியர்

விடை : தொல்காப்பியர்

2. போர்களத்தில் _______புண்படுவது இயல்பு 

  1. கழுத்தில்
  2. மார்பில்
  3. காலில்
  4. தலையில்

விடை : மார்பில்

3. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் _______

  1. கலீலியோ
  2. தாமஸ் ஆல்வா எடிசன்
  3. நியூட்டன்
  4. சார்லஸ் பாபேஜ்

விடை : கலீலியோ

4. திருவள்ளுவமாலை என்ற நூலை எழுதியவர் _______

  1. திருவள்ளூவர்
  2. திருவள்ளுவ முனுசாமி
  3. இராபி. சேதுபிள்ளை
  4. கபிலர்

விடை : கபிலர்

II. குறுவினா

1. எவையெல்லாம் கலந்தது உலகம் என தொல்காப்பியர் கூறுகிறார்?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.

2. கடல் நீர் ஆவியாதல் பற்றி குறிப்பிடும் நூல்கள் யாவை?

கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும்.

பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

3. ஒவையார் திரவப்பொருள்களை அளவை சுருக்க முடியாது என்பதை பற்ற பாடியுள்ள பாடலினை கூறுக

திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தினை

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி

என்ற பாடலின் மூலம் ஔவையார் கூறியுள்ளார்.

4. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

பதிற்றுப்பத்து

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.

5. சுறாமீன் தாக்கிய செய்தியும் பற்றி நற்றிணை கூறும் செய்தி யாது?

சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி பற்றி நற்றிணை கூறுகிறது.

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்

6. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் கபிலர் எழுதிய பாடலினை எழுதுக.

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்

– திருவள்ளுவமாலை

7. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்களை எழுதுக

  • மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல்கலாம்
  • இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
  • இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை. சிவன்.

சில பயனுள்ள பக்கங்கள்