Tamil Nadu 6th Standard Tamil Book Term 1 தமிழ் எழுத்துகளின் வகை தொகை Solution | Lesson 1.5

பாடம் 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை

Hello students, here are the answers to the last part of the first lesson of the 6th Standard Tamil.

We almost cover all question of the lesson தமிழ் எழுத்துகளின் வகை தொகை.

This part is Grammer’s potion of lesson 1 6th Tamil.

6ஆம் வகுப்பு தமிழ் எழுத்துகளின் வகை தொகை பாட விடைகள் 2021

தமிழ்த்தேன் > தமிழ் எழுத்துகளின் வகை தொகை

I. கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக

1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் 

விடை : அது

2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல்

விடை : தீ

3. 4 மாத்திரை அளவுள்ள வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சாெல்

விடை : கண்டேன்

4. 4 மாத்திரை அளவுள்ள மெல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங் கும் சொல்

விடை : நண்பகல்

5. 4 மாத்திரை அளவுள்ள இடையின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்

விடை : வாழ்த்து

6. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல்

விடை : அஃது

II. சிறு வினாக்கள்

1. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் யாவை?

  • எழுத்து இலக்கணம்
  • சொல் இலக்கணம்
  • பொருள் இலக்கணம்
  • யாப்பு இலக்கணம்
  • அணி இலக்கணம்

2. உயிர்மெய் எழுத்துகளை எத்தனை வகைப்படுத்தலாம்?

  • மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க்குறில் தோன்றுகிறது.
  • மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது.
  • உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இரு வகைப்படுத்தலாம்

3. எழுத்தை ஒலிக்கும் காலஅளவு வகைப்படுத்துக

குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு 2 மாத்திரை
மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு ½ மாத்திரை
ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு ½ மாத்திரை

4. தமிழ் மெய் எழுத்துகள் ஒலிக்கும் முறை கூறுக

மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்

வல்லினம் க், ச், ட், த், ப், ற்
மெல்லினம் ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம் ய், ர், ல், வ், ழ், ள்

5. உயிர்மெய் தோன்றும் விதம் பற்றி எழுதுக?

மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒலி வடிவாக எழுதப்டுவதும், வரிவடிவாக எழுதப்படுவதும் எனப் டுகிறது.

விடை : எழுத்து

2. குறுகி ஒலிக்கும் ____________ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள்.

விடை : அ, இ, உ, எ, ஒ

3. நீண்டு ஒலிக்கும் _________________ ஆகிய ஏழும் நெடில் எழுத்துகள்.

விடை : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

4. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு ________________

விடை : அரை மாத்திரை

கூடுதல் வினாக்கள்

1. ஆய்த எழுத்து பற்றிய குறிப்பு வரைக

தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்

2. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு யாது?

ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரை மாத்திரை

மொழியை ஆள்வோம்

I. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

1. பழமொழியின் சிறப்பு சொல்வது

  1. விரிவாகச்
  2. சுருங்கச்
  3. பழமையைச்
  4. பல மொழிகளில்

விடை : சுருங்கச்

2. நோயற்ற வாழ்வை த் தருவது ______________________ 

விடை : சுத்தம்

3. உடல் ஆரோக்கியமே அடிப்படை _______________________

விடை : உழைப்பு

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?

உணவு, உடை, உறைவிடம்

5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.

சுத்தம்

II. பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக

1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

விடை : எங்க பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டிப் போறாங்க,

2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க

விடை : பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னாங்க

III. திரட்டுக

“மை” என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க.

  • உண்மை
  • பொய்மை
  • பெண்மை
  • மெய்மை
  • வெண்மை
  • கருமை
  • பொறுமை
  • நேர்மை
  • மேன்மை
  • பன்மை
  • வன்மை
  • பெருமை
  • சிறுமை
  • வாய்மை
  • எருமை
  • கருமை

IV. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக

1. கரும்பு

கரு கம்பு

2. கவிதை

கவி விதை கதை

3. பதிற்றுப்பத்து

பதி பத்து
பற்று துதி

4. பரிபாடல்

பரி பாரி பல்
பால் பாடல்

V. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக

(நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்)

  1. விண்மீன்
  2. மணிமாலை
  3. நீதிநூல்
  4. விண்வெளி
  5. தமிழ்மாலை
  6. கண்மணி
  7. எழுதுகோல்
  8. தமிழ்மொழி
  1. தமிழ்நூல்
  2. நீதிமொழி
  3. விண்மீன்
  4. நீதிமணி
  5. மணிமொழி
  6. மீன்கண்
  7. நீதிமாலை
  8. தமிழ்வெளி

VI. பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக

அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, , அன்பு

1. ________________ தருவது தமிழ்

விடை : அன்பு

2. ________________ தருவது தமிழ்

விடை : ஏற்றம்

3. ________________ தருவது தமிழ்

விடை : இன்பம்

4. ________________ இல்லாதது தமிழ்

விடை : ஈடு

5. ________________ தருவது தமிழ்

விடை : ஆற்றல்

6. ________________ தருவது தமிழ்

விடை : ஊக்கம்

7. ________________ வேண்டும் தமிழ்

விடை : என்றும்

8. ________________ தருவது தமிழ்

விடை : உணர்வு

VII. கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க

பா தி தா ன்
 தா சு ம்
தி ரு ள் ளு ர்
யா பா தை ஒள வை யா ர்
ர் ன்  தா ணி வா ன்
  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. திருவள்ளளுவர்
  4. ஒளவையார்
  5. வாணிதாசன்
  6. கம்பர்

VIII. கலைச்சொல் அறிக

  1. வலஞ்சுழி – Clock wise
  2. இடஞ்சுழி – Anti Clock wise
  3. இணையம் – Internet
  4. குரல்தேடல் – Voice Search
  5. தேடுபொறி – Search Engine
  6. தொடுதிரை – Touch Screen

Lesson Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்