பாடம் 2.1 ஏதிலிக்குருவிகள்
Hello students, here are the answers to the last part of the first lesson of the 6th Standard Tamil.
We almost cover all question of the lesson ஏதிலிக்குருவிகள்.
இயற்கை இன்பம் > ஏதிலிக்குருவிகள்
நூல்வெளி
|
சொல்லும் பொருளும்
- ஏதிலி – அகதி
- மறுகியது – வருந்தியது
சரியான விடையத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கூடு கட்டுவதற்கு மரம் கிடைக்காத பறவைகள் _______ வேறிடம் சென்றன.
- பதிலிகளாக
- ஏதிலிகளாக
- விருந்தாளிகளாக
- பயணிகளாக
விடை : ஏதிலிகளாக
2. முன்பென்றால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- முன் + பென்றால்
- முன்பு + அன்றால்
- முன்பு + என்றால்
- முன்பு + பென்றால்
விடை : முன்பு + என்றால்
3. சுழித்தோடும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- சுழித்து + ஓடும்
- சுழி + தோடும்
- சுழி + ஓடும்
- சுழித் + தோடும்
விடை : சுழித்து + ஓடும்
4. வழி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
- வழிஎல்லாம்
- வழியிலெல்லாம்
- வழில்லாம்
- வழியெல்லாம்
விடை : வழியெல்லாம்
குறுவினா
1. முன்பெல்லாம் மழைக்காலம் எவ்வாறு இருக்கும்?
முன்பெல்லாம் அடைமழைக் காலத்தில் நீர் புரண்டோடும். ஆற்றின் கரைகளில் உயர்ந்த மரங்கள் இருக்கும். பறவைகளின் குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். |
2. தூக்கணாங்குருவியின் கூடுகளைக் கவிஞர் ஏல் புல் வீடுகள் என்று குறிப்பிடுகிறார்?
தூக்கணாங்குருவிகள் தன் வீட்டினை புல்லினால் கட்டியுள்ளன. எனவே கவிஞர் தூக்கணாங்குருவியின் வீடுகளை புல் வீடுகள் என குறிப்பிடுகிறார். |
சிறுவினா
1. குருவிகள் ஏதிலிகளாக ஆனதற்குக் காரணம் என்ன?
மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. வான் மழை பொய்த்து விட்டது. மரங்களும் இல்லை. அவை இருப்பிடம் இழந்தன. எனவே குருவிகள் ஏதிலிகளாக ஆனது. |
சிந்தனை வினா
பறவைகள் ஏதிலிகளாகப் போகாமல் இருப்பதற்கு நாம் எள செய்யவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?
|
கூடுதல் வினாக்கள்
சரியான விடையத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. அழகிய பெரியவனின் இயற்பெயர்
- துரை மாணிக்கம்
- அரவிந்தன்
- துரைராசு
- அழகேசன்
விடை : அரவிந்தன்
2. தகப்பன் கொடி புதினம் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற ஆண்டு
- 2000
- 2001
- 2002
- 2003
விடை : 2003
3. குறடு, நெரிக்கட்டு, அரூப நஞ்சு, பெருகும் வேட்டை உள்ளிட்ட நூல்களை எழுதியவர்
- அழகிய பெரியவன்
- பெருஞ்சித்திரனார்
- முடியரசன்
- பிச்சமூர்த்தி
விடை : அழகிய பெரியவன்
4. ஏதிலி என்பதன் பொருள்
- வழிப்போக்கன்
- உறவினர்
- அகதி
- பகைவர்
விடை : அகதி
சில பயனுள்ள பக்கங்கள்