பாடம் 2.5 திருக்குறள்
Samacheer Kalvi Solutions for Class 6 Tamil Term 1 Chapter 2.5 திருக்குறள் Lesson are available here.
இயற்கை இன்பம் > திருக்குறள்
நூல் வெளி
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. |
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது
- ஊக்கமின்மை
- அறிவுடைய மக்கட்பேறு
- வன்சொல்
- சிறிய செயல்
விடை : அறிவுடைய மக்கட்பேறு
2. ஒருவருக்குச் சிறந்த அணி
- மாலை
- காதணி
- இன்சொல்
- வன்சொல்
விடை : இன்சொல்
பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. இனிய __________ இன்னாத கூறல்
கனியிருப்பக் _______ கவர்ந் தற்று
விடை : உளவாக, காய்
2. அன்பிலார் __________ தமக்குரியர் அன்புடையார்
_______ உரியர் பிறர்க்கு
விடை : எல்லாம், என்பும்
நயம் அறிக.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
எதுகைச் சொற்கள் | மோனைச் சொற்கள் |
செயற்கரிய – செய்வார் | செயற்கரிய – செய்வார் |
செயற்கரிய – செய்கலா | செயற்கரிய – செய்கலா |
பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.
2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்து கொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர் . “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
இ) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
விடை:-
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
குறு வினா
1. உயிருள்ள உடல் எது?
அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.
2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?
அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைகிறது
3. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை?
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.
கூடுதல் வினாக்கள்
1. திருவள்ளுவர் ________ ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
- 1000
- 1500
- 2000
- 1750
விடை: 2000
2. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியவர்.
- பாரதியார்
- திருவள்ளுவர்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
விடை: திருவள்ளுவர்
3. திருவள்ளுவருக்கு வழங்கப்படும் பெயர்களில் பொருந்தாதது.
- வான்புகழ் வள்ளுவர்
- தெய்வப்புலவர்
- பொய்யில் புலவர்
- முக்கால அறிஞன்
விடை: முக்கால அறிஞன்
4. திருக்குறளின் உட்பிரிவுகளில் பொருந்தாதது
- அறத்துப்பால்
- துன்பத்துபால்
- பொருட்பால்
- இன்பத்துப்பால்
விடை: துன்பத்துபால்
5. திருக்குறளில் _______ அதிகாரங்கள் உள்ளன.
- 133
- 100
- 101
- 132
விடை: 133
6. திருக்குறளில் _______ பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
- 1330
- 1000
- 1010
- 1320
விடை: 1330
7. முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர்
- சிறியோர்
- பெரியோர்
- வலியோர்
- கேண்மயினோர்
விடை: பெரியோர்
7. _______ இருப்பதுதான் உயிருள்ள உடல்
- பண்பு
- பணம்
- அன்பு
- குணம்
விடை: அன்பு