பாடம் 2.6 திருக்குறள்
இயற்கை > திருக்குறள்
நூல் வெளி
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. |
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ——————–
- ஊக்கமின்மை
- அறிவுடைய மக்கட்பேறு
- வன்சொல்
- சிறிய செயல்
விடை : அறிவுடைய மக்கட்பேறு
2. ஒருவர்க்குச் சிறந்த அணி ——————
- மாலை
- காதணி
- இன்சொல்
- வன்சொல்
விடை : இன்சொல்
II. பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
III. நயம் அறிக.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் – இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
எதுகைச் சொற்கள் | மோனைச் சொற்கள் |
செயற்கரிய – செய்வார் | செயற்கரிய – செய்வார் |
செயற்கரிய – செய்கலா | செயற்கரிய – செய்கலா |
IV. பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.
2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர் . “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
இ) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
விடை:-
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
V. குறு வினா
1. உயிருள்ள உடல் எது?
அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.
2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?
அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைகிறது
3. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை?
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.
மொழியை ஆள்வோம்!
I. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம் . பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த பரிசு. இயற்கையின் அழகை ரசித்தால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
1. எதனை இயற்கை என்கிறோம்?
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம் |
2. இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
இவையெல்லாம் இயற்கையை வருணிக்கும் சொற்கள். |
3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம்.
மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். |
4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக?
“இயற்கையின் கொடைகள்”
II. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் _______________ என்று பெயர். (பறவை / பரவை)
விடை : பரவை
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ________________ ஆற்றினார். (உரை / உறை)
விடை : உரை
3. முத்து தம் _______________ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
விடை : பணி
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை __________________ (அலைத்தாள் /அழைத்தாள்).
விடை : அழைத்தாள்
III. திரட்டுக.
“கடல்” என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.
நேமி | வேலம் | ஆழி |
முந்நீர் | வாரணம் | பெளவம் |
வேலம் | ஆர்கலி | பரவை |
ஆர்கலி | உததி | அத்தி |
திரை | நரலை | சமுத்திரம் |
IV. தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.
1. பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.
2. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.
விடை: கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்.
3. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
விடை: இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.
V. பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.
1. “புள்” என்பதன் வேறு பெயர்
ப | ற | வை |
2. “பறவைகள் இடம்பெயர்தல்”
வ | ல | சை | போ | த | ல் |
3. “சரணாலயம்” என்பதன் வேறு பெயர்
பு | க | லி | ட | ம் |
VI. வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
விடை: சிலப்பதிகாரம் என்றும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
விடை: பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது
3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்
விடை: சாண்டியாகோ மிகப் பெரிய மீனைப் பிடித்தார்
4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை
விடை: இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி
VII. கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.
மு | த் | த | மி | ழ் | கா |
ப் | பை | னி | மே | ம | ணி |
ப | ல் | நி | ல | வு | நி |
து | ட | லை | ர் | ப | ல |
லை | க | மே | ணி | ம | ம் |
செ | ங் | கா | ல் | நா | ரை |
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று ______________
விடை: மணிமேகலை
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை ______________
விடை : முப்பது
3. திங்கள் என்பதன் பொருள் ______________
விடை: நிலவு
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை ______________
விடை: செங்கல் நாரை
5. பாரதியார் ______________ வேண்டும் என்று பாடுகிறார்.
விடை: காணி நிலம்
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர் ______________
விடை: தனிநிலை
VIII. கவிதை படைக்க.
கீழே காணப்படும் “மழை” பற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக.
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
என்றும் இளமை சிந்திடும்
எல்லா மணமும் நிறைந்திடும்
எங்கும் வளமை பொழிந்திடும்
IX. கலைச்சொல் அறிவோம்
- கண்டம் - Continent
- தட்பவெப்பநிலை – Climate
- வானிலை – Weather
- வலசை – Migration
- புகலிடம் – Sanctuary
- புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field