பாடம் 3.1 கல்வியைப் போற்று
Samacheer Kalvi Solutions for Class 6 Tamil Term 1 Chapter 3.1 கல்வியைப் போற்று Lesson are available here.
கல்வி > கல்வியைப் போற்று
நூல் வெளி
கா.ப.செய்குதம்பிப் பாவலர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர். அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி, சதாவதானி என்னும் பட்டம் பெற்றவர். இவர் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருமதினத்து அந்தாதி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். நீதி வெண்பா என்னும் நூலில் இருந்து ஒரு பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது. |
சொல்லும் பொருளும்
- பெருக்கி – வளர்த்து
- திருத்தி – சீராக்கி
- மருளை – மயக்கத்தை
- அருத்துவதும் – தருவதும்
- திருத்தி – சீராக்கி
- மதி – அறிவு
- ஆவி – உயிர்
- பொருத்துவதும் – சேர்ப்பதும்
எதுகை
- அருளை – மருளை
- அருத்துவதும் – பொருத்துவதும்
ஆகிய சொற்களில் இரண்டாம் எழுத்து ஒரே எழுத்தாக உள்ளது. முதலெழுத்து அளவொத்து (குறிலாக) உள்ளது. இவ்வாறு முதலெழுத்து அளவொத்ததாக இருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கல்வியானது நமது ______ துணையாய் அமைகிறது
- ஆவிக்குத்
- கண்ணுக்குத்
- உடலுக்குத்
- செவிக்குத்
விடை: ஆவிக்குத்
2. அருந்துணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- அருந்து + துணை
- அருமை + துணை
- அரு + துணை
- அருந் + துணை
விடை: அருமை + துணை
3. கல்வி + என்றே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- கல்விஎன்றே
- கல்வியன்றே
- கல்வின்றே
- கல்வியென்றே
விடை: கல்வியென்றே
குறுவினா
கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
அருளினை வளர்த்து, அறிவைச் சீராக்கி, மயக்கத்தினை அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வி ஆகும். எனவே கல்வியை போற்றி கற்க வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கா.ப.செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்
- செவல்குடி
- இடையன்குளம்
- இடலாக்குடி
- பனையன்குளம்
விடை: இடலாக்குடி
2. சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
- பாரதிதாசன்
- கா.ப.செய்குதம்பிப் பாவலர்
- பாரதியார்
- கண்ணதாசன்
விடை: கா.ப.செய்குதம்பிப் பாவலர்
3. நீதி வெண்பா என்ற நூலின் ஆசிரியர்
- கா.ப.செய்குதம்பிப் பாவலர்
- பாரதிதாசன்
- பாரதியார்
- கண்ணதாசன்
விடை: கா.ப.செய்குதம்பிப் பாவலர்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. சதாவதானி என்னும் பட்டம் பெற்றவர் யார்?
- அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டியவர் சதாவதானி எனப்படுவார்.
- சதாவதானி என்னும் பட்டத்தினை பெற்றவர் கா.ப.செய்குதம்பிப் பாவலர்
2. கா.ப.செய்குதம்பிப் பாவலர் எழுதிய நூல்கள்?
- நபிகள் நாயக மான்மிய மஞ்சரி
- திருமதினத்து அந்தாதி