பாடம் 3.5 மொழி முதல் எழுத்துகள்
Samacheer Kalvi Solutions for Class 6 Tamil Term 1 Chapter 3.5 மொழி முதல் எழுத்துகள் Lesson are available here.
கல்வி > 3.5 மொழி முதல் எழுத்துகள்
வினாக்கள்
1. வகர வரிசையில் மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் யாவை?
வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, ஆகிய ஏழு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
2. மொழி இறுதியில் வராத மெய்கள் என்னென்ன?
க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை _______ எழுத்துகள் என்பர்.
- மொழிமுதல்
- மொழிஇறுதி
- மொழிஇடை
விடை: மொழிமுதல்
2. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் _______ வரும்.
- இறுதியில்
- இடையில்
- முதலில்
விடை: முதலில்
3. மெய்யெழுத்துகள் எழுத்துகள்
- 12
- 18
- 30
விடை: 30
குறுவினா
1. மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பற்றி எழுதுக.
- மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வராது.
- ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
- ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள்ச சொல்லின் முதலில் வராது.
2. மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?
|
மொழியை ஆள்வோம்!
தொடர்களை நீடித்துப் புதிய தொடர்களை உருவாக்கு
1. பாடம் படித்தான்
வகுப்பில் பாடம் படித்தான்
தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்
நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்
அவன் நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்
2. மழை பெய்தது
காலையில் மழை பெய்தது
நேற்று காலையில் மழை பெய்தது
இடியுடன் நேற்று காலையில் மழைபெய்தது
ஊரில் இடியுடன் நேற்று காலையில் மழைபெய்தது
இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை அமையுங்கள்.
(நூல், மாலை, ஆறு, படி)
1. நூல்
விடை: ஆடை தைக்க உதவுவது நூல் / மூதுரை அற நூல்
2. மாலை
விடை: இரத்தின மாலை விலைமதிப்பற்றது / சூரியன் மாலை நேரத்தில் மறைகிறது
3. ஆறு
விடை: ராமு ஆறு மாதம் கழித்த பின் ஊருக்கு வந்தான் / தாமிரபரணி ஆறு வற்றாத ஆறு
4. படி
விடை: தேர்வில் வெற்றியடைய நன்றாக படி / மாணவர் வாழ்வில் முன்னேற ஆசிரியர் ஒரு ஏணிப்படி போன்று செயல்படுகிறார்கள்
கீழக்குறிப்பிட்டுள்ள நம் தலைவர்களின் பிறந்தநாளுக்குரிய விழாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தேசிய இளைஞர் தினம், கல்விவளர்ச்சி நாள்)
1. காமராஜர் பிறந்த நாள்
விடை : கல்வி வளர்ச்சி நாள்.
2. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்
விடை : ஆசிரியர் தினம்.
3. அப்துல்கலாம் பிறந்த நாள்
விடை : மாணவர் தினம்.
4. விவேகானந்தர் பிறந்த நாள்
விடை : தேசிய இளைஞர் தினம்.
5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்
விடை : குழந்தைகள் தினம்
வினாவிற்கேற்ற விடையளிக்கவும்
காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களை தடுப்பதை காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க?” என்று அன்புடன் வினவினார். ” எங்க அண்ணனுக்கு தேர்வுக்கு பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்,,,,” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் “அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுதான் எங்களை படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.
மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா தேர்வுக்கு பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்று சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்
- பெற்றோர்
- சிறுவன், சிறுமி
- மக்கள்
- ஆசிரியர்கள்
விடை : சிறுவன், சிறுமி
2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது
- ஏழ்மை
- நேர்மை
- உழைப்பு
- கல்லாமை
விடை : நேர்மை
3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் _______
விடை : நெகிழ்ந்தார்
4. சிறுவனும், சிறுமியும் எதற்காக காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
சிறுவனின் தேர்வுக்கு பணம் கட்டுவதற்கு காமராசரிடம் உதவி கேட்டு வந்தனர்
5. காமராசர் செய்த உதவி யாது?
சிறுவனின் தேர்வுக்கு பணம் கட்டுவதற்காக காமராசரிடம் பண உதவி செய்தார்.
சொற்றொடர்களை உருவாக்குங்கள்.
ஆசிரியர் மாணவண் | கவிதை பாடம் | எழுதுகிறார் எழுதுகிறான் படிக்கிறார் படிக்கிறான் கற்பிக்கிறார் |
விடை
|
|
மொழியோடு விளையாடு
கல்விக்கண் திறந்த காமராசர் இத்தொடரிலுள்ள எழுத்துகளை பயன்படுத்தி புதிய சொற்களை உருவாக்குங்கள்
கல், வில், தில், விண், கண், விண்கல், கல்வி, திறந்தகண், விக்கல், மண், காவி, காண், மதி, சதி, தந்தி, கதி
சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
1. கற்க போற்றிக் கல்வியைப் வேண்டும்
விடை : கல்வியைப் போற்றிக் கற்க வே்ண்டும்.
2. பயனை கூடாது கற்றதன் மறக்கக்
விடை : கற்றதன் மறக்கக் பயனை கூடாது.
3. ஒருவன் விழுந்தான் மாணவன் மயங்கி
விடை : மாணவன் ஒருவன் மயங்கி விழுந்தான்.
4. நூலகம் இங்கு உள்ளது மின்
விடை : இங்கு மின் நூலகம் உள்ளது.
5. சொல்லின் ஆய்தஎழுத்து வராது
விடை : சொல்லின் முதலில் ஆய்தஎழுத்து வராது.
கலைச்சொல் அறிவோம்
- கல்வி – Education
- நூலகம் – Library
- மின்தூக்கி – Lift
- மின்நூல் – E-Book
- பல்கலைக்கழகம் – University
- நகரும் படிக்கட்டு – Escalator
- மின் நூலகம் – E-Library
- மின் இதழ்கள் – E-Magazine