Tamil Nadu 6th Standard Tamil Book Term 2 நூலகம் நோக்கி Solution | Lesson 1.4

பாடம் 1.4. நூலகம் நோக்கி

Samacheer Kalvi Solutions for Class 6 Tamil Term 2 Chapter 1 நூலகம் நோக்கி Lesson are available here.

These solutions are prepared by our experts to provide a proper understanding of this lesson.

After you have studied the lesson, you must be looking for answers to its questions. Here you can get complete Solutions for 6th Standard Term II Tamil.

கண்ணெனத் தகும் > 1.4. நூலகம் நோக்கி

மதிப்பீடு

அண்ணா நூற்றாணடு நூலகத்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.

முன்னுரை

ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். தரைத்தளத்தாேடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர். முனைவர் இரா. அரங்கநாதன். நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

தரைத்தளம்

தரைத் தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர். இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. படியெடுக்கும் வசதியும் உண்டு.

 முதல் தளம்

முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. பிற நாடுகளில் இருந்து திரட்டப்ப ட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.

பிற தளங்கள்

  • இரண்டாம் தளம் – தமிழ் நூல்கள்
  • மூன்றாம் தளம் – கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  • நான்காம் தளம் – பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
  • ஐந்தாம் தளம் – கணிதம், அறிவியல், மருத்துவம்
  • ஆறாம் தளம் – பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  • ஏழாம் தளம் – வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
  • எட்டாம் தளம் – கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு

முடிவுரை

நூலக நூல்களை வாசிப்பதோடு நிற்காமல், இந்நூல்களை சுவாசிக்கும் அறிஞர்களாக மாற வேண்டும்.

“நூலகம் அறிஞர்களின் ஆன்மாக்கள் உறைவிடம்”

கூடுதல் வினாக்கள்

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம்

  1. இந்தியா
  2. இலங்கை
  3. ஜப்பான்
  4. சீனா

விடை : சீனா

2. _________ கையளவு, கல்லாதது உலகளவு

  1. கற்றது
  2. அறிந்தது
  3. தெரிந்தது
  4. புரிந்தது

விடை : கற்றது

3. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு _________

  1. நான்கு ஏக்கர்
  2. ஆறு ஏக்கர்
  3. எட்டு ஏக்கர்
  4. பத்து ஏக்கர்

விடை : எட்டு ஏக்கர்

4. நூலக விதிகளை உருவாக்கியவர் _________

  1. கண்ணதாசன்
  2. சுரதா
  3. கவிமணி
  4. இரா. அரங்கநாதன்

விடை : இரா. அரங்கநாதன்

5. சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது _________

  1. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
  2. டாக்டர் இராதாகிருஷ்ணன்
  3. டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது
  4. அறிஞர் அண்ணா விருது

விடை : டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது

6. இந்திய நூலகவியலின் தந்தை

  1. கண்ணதாசன்
  2. சுரதா
  3. கவிமணி
  4. இரா. அரங்கநாதன்

விடை : இரா. அரங்கநாதன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நூலகம் _________ ஆகும்

விடை : அண்ணா நூற்றாண்டு நூலகம்

2. _________ இந்திய நூலக அறிவியலின் தந்தை ஆவார்

விடை : இரா. அரங்கநாதன்

3. பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் தொட்டு பார்த்து படிப்பதற்கான நூல்கள் _________ எனப்படும்.

விடை : பிரெய்லி நூல்கள்

4. பார்வைத்திறன் குறைபாடு உடையோர் படிப்பதற்கான _________ நூல்கள் உள்ளன.

விடை : பிரெய்லி

III. குறுவினா

1. அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றி குறிப்பு வரைக

ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும். இது தரைத்தளம் மற்றும் எட்டு அடுக்களை கொண்டது. இதன் பரப்பளவு எட்டு ஏக்கர் ஆகும்.

2. அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் உள்ள அரங்குகள் யாவை?

கூட்ட அரங்குகருத்தரங்கக் கூடம்
கலையரங்குகண்காட்சி அரங்கு

3. நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்த தலைவர்கள் யார் எனக் கூறு?

அறிஞர் அண்ணாஅண்ணல் அம்பேத்கர்
ஜவஹர்லால் நேருகாரல் மார்க்ஸ்

4. தமிழக அரசு நூலக வசதி இல்லாத ஊர்களுக்காக தமிழகஅரசு தொடங்கிய திட்டம் எது?

தமிழக அரசு நூலக வசதி இல்லாத ஊர்களுக்காக தமிழக அரசு நூலகத்திற்காக நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

5. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள தளங்கள் எத்தனை?

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எட்டு தளங்கள் உள்ளன

6. இந்திய நூலகவியலின் தந்தை யார்? அவ்வாறு அழைக்கப்பட காரணம் என்ன?

இந்திய நூலகவியலின் தந்தை முனைவர் இரா. அரங்கநாதன்.

நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian library science) என்று அழைக்கப்படுகிறார்.

III. சிறுவினா

1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைதளத்தின் பிரிவினை விளக்குக

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைதளத்தில் பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது.

அவர்கள் தொட்டு பார்த்து படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலிவடிவ நூல்கள் குறுந்தகடுகள் வடிவில் உள்ளன.

அவர்களுக்கு உதவி செய்ய பணியார்களும் உள்ளன. இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. படிக்கும் வசதியும் உண்டு.

2. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தின் சிறப்புகளை கூறு

இங்கு பழமையான ஓலைச்சுவடிகளை சேகரித்து பாதுகாத்து வைத்துள்ளனர். மேலும் வரலாறு, புவியில், சுற்றுலா நூல்களும் உள்ளன.

இங்கு அனைத்து வகைப் போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான நூல்களும், மின்நூலகமும் உள்ளது, அனைத்து துறைசார்ந்த தரமான மின்நூல்களும், மின் இதழ்களும் உள்ளன.

3. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உள்ள தளங்களை பற்றி விளக்குக

தரைத்தளம்சொந்த நூல் படிப்பகம்.  பிரெய்லி நூல்கள்
முதல் தளம்குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
மூன்றாம் தளம்கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
நான்காம் தளம்பொருளியில், சட்டம், வணிகவியல், கல்வி
ஐந்தாம் தளம் கணிதம், அறிவியல், மருத்துவம்
ஆறாம் தளம்பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
ஏழாம் தளம்வரலாறு சுற்றுலா
எட்டாம் தளம்நூலகத்தின் நிர்வாகப்பிரிவு

சில பயனுள்ள பக்கங்கள்