Tamil Nadu 6th Standard Tamil Book Term 2 மயங்கொலிகள் Solution | Lesson 2.5

பாடம் 2.5. மயங்கொலிகள்

Samacheer Kalvi Solutions for Class 6 Tamil Term 2 Chapter 2 மயங்கொலிகள் Lesson are available here.

These solutions are prepared by our experts to provide a proper understanding of this lesson.

After you have studied the lesson, you must be looking for answers to its questions. Here you can get complete Solutions for 6th Standard Term II Tamil.

பாடறிந்து ஒழுகுதல் > 2.5. மயங்கொலிகள்

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சிரம் என்பது ________ (தலை / தளை)

விடை : தலை

2. இலைக்கு வேறு பெயர் ________ (தளை / தழை)

விடை : தழை

3. வண்டி இழுப்பது ________ (காலை / காளை)

விடை : காளை

4. கடலுக்கு வேறு பெயர் ________ (பரவை / பறவை)

விடை : பரவை

5. பறவை வானில் ________ (பரந்தது / பறந்தது)

விடை : பறந்தது

6. கதவை மெல்லத் ________ (திரந்தான் / திறந்தான்)

விடை : திறந்தான்

7. பூ ________ வீசும். (மணம் / மனம்)

விடை : மணம்

8. புலியின் ________ சிவந்து காணப்படும். (கன் / கண்)

விடை : கண்

9. குழந்தைகள் ________ விளையாடினர். (பந்து / பன்து)

விடை : பந்து

10. வீட்டு வாசலில் ________ போட்டர். (கோளம் / கோலம்)

விடை : கோலம்

II. தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளை திருத்தி எழுதுக

1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.

விடை : என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

2. தேர்த் திருவிலாவிற்கு செண்றனர்.

விடை : தேர்த் திருவிழாவிற்கு சென்றனர்.

3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.

விடை : வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது

III. பொருள் வேறுபாடறிந்து எழுதுக

  1. போரில் பயன்படுத்துவது வாள் / பூனைக்கு உள்ளது வால்
  2. வாசலில் போடுவது காேலம் / பந்தின் வடிவம் கோளம்

IV. பொருள் வேறுபாடு உணர்க

  1. ஏரி – குளம் / ஏறி – மேலே ஏறி
  2. கூரை – வீட்டின் கூரை / கூறை – புடவை
  3. வாணம் – வெடி / வானம் – ஆகாயம்
  4. பணி – வேலை / பனி – குளிர்ச்சி
  5. விலை – பொருளின் மதிப்பு / விளை – உண்டாக்குதல் / விழை – விருப்பம்
  6. இலை – செடியின் இலை / இளை – மெலிந்து போதல் / இழை – நூல் இழை

கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை ________ என்கிறாேம்.

  1. மயங்காெலிகள்
  2. இன எழுத்துக்கள்
  3. குற்றியலிகரம்
  4. அளபெடை

விடை: மயங்காெலிகள்

2. மங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை

  1. 6
  2. 7
  3. 8
  4. 9

விடை: 8

3. வானம் என்பதன் பொருள் தருக

  1. வெடி
  2. வேலை
  3. குளிர்ச்சி
  4. ஆகாயம்

விடை: ஆகாயம்

4. பணி என்பதன் பொருள் தருக

  1. வெடி
  2. ஆகாயம்
  3. வேலை
  4. குளிர்ச்சி

விடை: வேலை

II. இன எழுத்துகளை பொருத்துக

  1. ட் – ன்
  2. த் – ண்
  3. ற் – ந்

விடை: 1 – ஆ, 2 – இ, 3 – அ

III. குறுவினா

1. மயங்கொலிகள் எழுத்துகளை எழுதுக

ண, ன, ந, ல, ழ, ள, ர, ற

2. ண, ன, ந எழுத்துக்கள் பிறக்கும் முறைகளை விவரிக்க

  • ண – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.
  • ன – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.
  • ந – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

3. சொற்களில் ண, ன இடம்பெறும் வகைகளை கூறுக

ட என்னும் எழுத்துக்கு முன் ண் வரும்

  • (எ.கா.) கண்டம், வண்டி, நண்டு

ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும்

  • (எ.கா.) மன்றம், நன்றி, கன்ற

4. ர, ற எழுத்துக்கள் பிறக்கும் முறைகளை விவரி

  • ர – நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.
  • ற – நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம்
    தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.

மொழியை ஆள்வோம்

I. பத்தியைப் படித்து வினாக்கள் அமைத்தல்

முகிலன் பொங்கல் விழா கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்கு செவலை என்ற காளை இருந்தது. அக்காளை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்து கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்வாகப் பொங்கல் விழாவை கொண்டாடுவான்

  1. முகிலன் எதற்காக தாத்தா வீட்டிற்கு சென்றான்?
  2. தாத்தா வீட்டில் முகிலனுக்கு மிகவும் பிடித்தது எது?
  3. தாத்தா வீட்டின் பின்புறம் என்ன இருந்தது?
  4. முகிலன் தாத்தாவிற்கு என்ன உதவி செய்தான்?
  5. முகிலன் எவர்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினான்?

II. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக

  1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
  2. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
  3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
  4. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்

விடை – கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்

III. உரையாடலை நிரப்புக

செல்வன் : வாங்க மாமா, நல்மாக இருக்கின்றீர்களா?

மாமா       : நலமாக உள்ளேன். நீ எப்படி இருக்கிறாய்?

செல்வன் : நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா.

மாமா       : அப்பா, அம்மா எங்கே சென்றுள்ளார்கள்?

செல்வன் : இருவரும் கடைவீதிக்குச் சென்றுள்ளார்கள் மாமா

மாமா       : அப்படியா, நீ எப்படி படிக்கிறாய்?

செல்வன் : நன்றாக படிக்கிறேன் மாமா.

மாமா       : நாளை சுதந்திர தின விழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?

செல்வன் : ஆம் மாமா. நான் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.

மாமா       : வெற்றி பெற வாழ்த்துக்கள்

செல்வன் : நன்றி மாமா

IV. நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக

இன்பம் கொடுப்பது நட்பு
அன்பை அளிப்பது நட்பு
உறவை வளர்ப்பது நட்பு
உலகில் உயர்ந்தது நட்பு

மொழியோடு விளையாடு

I. சொற்களைச் சேர்த்து புதிய சொற்களை உருவாக்கு

உண்டுஇல்லை
கல் + ல் + உண்டு = கல்லுண்டுகல் + ல் + இல்லை = கல்லில்லை
பல் + ல் + உண்டு = பல்லுண்டுபல் + ல் + இல்லை = பல்லில்லை
மின் + ல் + உண்டு = மின்னுண்டுமின் + ல் + இல்லை = மின்னில்லை
மண் + ல் + உண்டு =மண்ணுண்டுமண் + ல் + இல்லை = மண்ணில்லை

II. கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக

ஞ்சாவூர்மா
ன்மிடுகாற்
னில்ணைல்ல்
யாமைளிருசும்
குற்றாம்டி
துரைருட்
ரிசிஞ்செம்
  1. குற்றாலம்
  2. ஊட்டி
  3. செஞ்சி
  4. கல்லணை
  5. கன்னியாகுமரி
  6. மாமல்லபுரம்
  7. மதுரை
  8. சுருளி
  9. ஏற்காடு
  10. தஞ்சாவூர்

III. தமிழ்ச்சொல் அறிவோம்

  1. நல்வரவு – Welcome
  2.  ஆயத்த ஆடை – Readymade Dress
  3. சிற்பங்கள் – Sculptures
  4. ஒப்பனை – Makeup
  5. சில்லுகள் – Chips
  6. சிற்றுண்டி – Tiffin

சில பயனுள்ள பக்கங்கள்