பாடம் 3.1. நானிலம் படைத்தவன்
Samacheer Kalvi Solutions for Class 6 Tamil Term 2 Chapter 3 நானிலம் படைத்தவன் Lesson are available here.
These solutions are prepared by our experts to provide a proper understanding of this lesson.
After you have studied the lesson, you must be looking for answers to its questions. Here you can get complete Solutions for 6th Standard Term II Tamil.
கூடித் தொழில் செய் > 3.1. நானிலம் படைத்தவன்
|
I. சொல்லும் பொருளும்
- மல்லெடுத்த – வலிமைபெற்ற
- சமர் – போர்
- நல்கும் – தரும்
- கழனி – வயல்
- மறம் – வீரம்
- எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
- கலம் – கப்பல்
- ஆழி – கடல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________
- மகிழ்ச்சி
- துன்பம்
- வீரம்
- அழுகை
விடை : வீரம்
2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கல் + அடுத்து
- கல் + எடுத்து
- கல் + லடுத்து
- கல் + லெடுத்து
விடை : கல் + எடுத்து
3. நானிலம் என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- நா + னிலம்
- நான்கு + நிலம்
- நா + நிலம்
- நான் + நிலம்
விடை : நான்கு + நிலம்
4. நாடு + என்ற என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- நாடென்ற
- நாடன்ற
- நாடுஎன்ற
- நாடுஅன்ற
விடை : நாடென்ற
5. கலம்+ ஏறி என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- கலம்ஏறி
- கலமறி
- கலன்ஏறி
- கலமேறி
விடை : கலமேறி
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மாநிலம்
- தமிழ்நாடு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும்
2. கடல்
- உலகில் பெருங்கடல்கள் ஏழு
3. பண்டங்கள்
- இனிப்பு பண்டங்கள் அனைவருக்கும் அதிகமாக பிடிக்கும்
IV. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்களை எழுதுக
- கல்லெடுத்து – மல்லெடுத்த
- ஊராக்கி – பேராக்கி
- பெருமை – மருதம்
- முக்குளித்தான் – எக்களிப்பு
- பண்டங்கள் – கண்டங்கள்
- அஞ்சாமை – அஞ்சுவதை
V. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனை சொற்களை எழுதுக
- கல்லெடுத்து – கலமேறி
- மல்லெடுத்து – மறத்தால்
- நானிலத்தை – நாகரிக
- முக்குளித்தான் – முத்தெடுத்து
- பண்டங்கள் – பயன்நல்கும்
VI. குறு வினா
1. நான்கு நிலங்கள் யாவை?
நான்கு நிலங்கள் என்பவை முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்பவை ஆகும்.
2. தமிழன் எதற்கு அஞ்சினான்?
தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
3. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான்
VII. சிறு வினா
1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினார்?
- தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான்
- தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான்
- முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் தமிழன் தான்.
2. தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன் பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களில் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றி கொடியை நாட்டினான். முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான். எதற்கும் அஞ்சுவான் ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான். |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. சமர் என்னும் சொல்லின் பொருள் _________
விடை : போர்
2. வயல் என்ற சொல்லின் வேறு பெயர் _________
விடை : கழனி
3. வீரகாவியம் படைத்தவர் _________
விடை : முடியரசன்
4. ஆழி என்பதற்கு _________ என்று பெயர்
விடை : கடல்
5. முடியரசனின் இயற்பெயர் _________
விடை : துரைராசு
6. வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியவர் _________
விடை : முடியரசன்
7. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர்
விடை : முடியரசன்
8. நானிலம் படைத்தவர் என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்
விடை : புதியதொரு விதி செய்வாேம்
9. ________ அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுவான்.
விடை : சான்றாேர்கள்
II. குறு வினா
1. நானிலம் படைத்தவன் என்ற பாடல் எந்தநூலில் இடம் பெற்றுள்ளது?
நானிலம் படைத்தவன் என்ற பாடல் முடியசரன் எழுதிய புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
2. நானிலம் படைத்தவன் பாடலில் முடியரசன் குறிப்பிட்டுள்ள நிலங்கள் யாவை?
முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல்
3. முடியரசன் – குறிப்பு வரைக
- இயற்பெயர்: துரைராசு
- நூல்கள்: பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை, புதியதொரு விதி செய்வோம்
- சிறப்பு பெயர்: திராவிட நாட்டின் வானம்பாடி, கவியரசு
சில பயனுள்ள பக்கங்கள்