7th Std Science Term 1 Solution | Lesson.6 உடல் நலமும் சுகாதாரமும்

பாடம்.6 உடல் நலமும் சுகாதாரமும்

உடல் நலமும் சுகாதாரமும் பாட விடைகள்

பாடம்.6 உடல் நலமும் சுகாதாரமும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.

 1. சுகாதாரம்
 2. உடல்நலம்
 3. சுத்தம்
 4. செல்வம்

விடை : உடல்நலம்

2. தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லதுதான்.

 1. மகிழ்ச்சி
 2. ஓய்வு
 3. மனம்
 4. சுற்றுச்சூழல்

விடை : மனம்

3. நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்

 1. திறந்த
 2. மூடியது
 3. சுத்தமான
 4. அசுத்தமான

விடை : சுத்தமான

4. புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது

 1. இரத்த சோகை
 2. பற்குழிகள்
 3. காசநோய்
 4. நிமோனியா

விடை : பற்குழிகள்

5. முதலுதவி என்பதன் நோக்கம்

 1. பணம் சேமிக்க
 2. வடுக்களைத் தடுக்க
 3. மருத்துவப் பராமரிப்பு தடுக்க
 4. வலி நிவாரணம்

விடை : வலி நிவாரணம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை ___________  என அழைக்கிறோம். 

விடை : சமூகம்

2. நான் பச்சை நிறத்தில் குப்பைகளோடு இருக்கக்கூடிய பெட்டி. .நான் யார்? ___________

விடை : மக்கும் குப்பைத் தொட்டி

3. கண் உலகினைக் காணப் பயன்படும் ___________ கருதப்படுகின்றன.

விடை :சாளரங்களாக

4. மயிர்க்கால்கள் முடியை மென்மையாக வைத்திருக்க ___________ உற்பத்தி செய்கிறது.

விடை : எண்ணெய்

5. காசநோய் என்பது _________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

விடை : மைக்கோபாக்டீரியம் டீயூபர்குலே

III. பொருத்துக

1. ராபிஸ்சால்மோனெல்லா
2. காலராமஞ்சள்நிற சிறுநீர்
3. காசநோய்கால் தசை
4. ஹெபடைடிஸ்ஹைட்ரோபோபியா
5. டைபாயிடுமைக்கோபாக்டீரியம்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – ஆ, 5 – அ

IV. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக

1. அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

விடை : சரி

2. சின்னம்மை லுகோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது

விடை : தவறு

சரியான விடை : சின்னம்மை வேரிசெல்லா என்றும் அழைக்கப்படுகிறது

3. வயிற்றுப்புண் ஒரு தொற்றாநோய்.

விடை : சரி

4. ரேபிஸ் இறப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாயகரமான நோயாகும்.

விடை : சரி

5. முதல்நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.

விடை : தவறு

சரியான விடை : முதல்நிலை தீக்காயத்தில் மேல்புறத்தோல் சேதமடைகிறது

V. ஒப்புமை வினா.

1. முதல்நிலைத் தீக்காயம் : மேற்புறத்தோல் :: இரண்டாம்நிலைத் தீக்காயம் : _________ .

விடை : உட்தோல்

2. டைபாய்டு : பாக்டீரியா :: ஹெபடைடிஸ் : _________

விடை : வைரஸ்

3. காசநோய்: காற்று :: காலரா : _________

விடை : நீர்

VI. பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி.

 1. A மற்றும் R இரண்டும் சரியானவை
 2. A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை
 3. A சரி ஆனால் R தவறானவை.
 4. A தவறு ஆனால் R சரியானவை.

1. உறுதிப்படுத்துதல் A : வாய் சுகாதாராம் நன்றாக உள்ளது.

காரணம் R : நல்ல பற்கள் மற்றும் ஆரோக்கியமான திசுக்களால் சூழப்பட்ட ஈறுகள்.

விடை : A மற்றும் R இரண்டும் சரியானவை

2. உறுதிப்படுத்துதல் A : சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.

காரணம் R : உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன..

விடை : A மற்றும் R இரண்டும் சரியானவை

VIII. மிக குறுகிய விடையளிக்கவும்.

1. சுகாதாரம் என்றால் என்ன?

சுகாதாரம் என்பது உடல் நலத்தின் வகையை சேர்ந்தது. “இது ஒருவர் தனது உடலியல் தேவைகளான உடல் மற்றும் மனம் இவற்றினை சரிசெய்து கொண்டு அதிபட்ச உடல் நலத்தை அடைவதாகும்.

2. கண்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி எழுது.

 • கண்களைக் கசக்குதல் கூடாது
 • நீண்டநேரமாகத் தொலைக்ககாட்சி பார்த்தல் / கணினி பயன்படுத்துதல் கூடாது
 • குளிர்ந்த நீரில் கண்களைச் சுத்தம் செய்ய வேண்டும்
 • கேரட் போன்ற காய்கறிகளையும், ஆரஞ்சு, லெமன் மற்றும் சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்.

3. உங்கள் முடியைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் எவ்வாறு பேணுவாய்?

 • வழக்கமாக உச்சந்தலையை நன்றாகத் தேய்த்துக் குளிக்கும்போது, இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றபடுகிறது.
 • சுத்தமான தண்ணீரில் குளித்தல், நல்ல தரமான சீப்புகளைப் பயன்படுத்துதல் முடி பராமரிப்புக்கு மிக அவசியமாகக் கருதப்படுகிறது

4. தனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலில் இருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உங்கள் பரிந்துரை யாது?

கண் எரிச்சலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கண் சொட்டு மருந்தினை பயன்படுத்தலாம்

5. மழைக்காலத்தில் உங்கள் பகுதியில் பரவும் இரண்டு தொற்று நோய்களின் பெயர்களைக் கூறு.

 • காலரா
 • டைபாய்டு

6. கன்றிப்போன காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?

 • கிருமிநாசினிக் களிம்பு இட வேண்டும்.
 • காயம்பட்ட இடத்தைச் சுற்றிச் சுத்தமான ஒட்டக்கூடிய தன்மையற்ற துணி அல்லது கட்டுத்துணிகளால் சுற்ற வேண்டும்.
 • உடனடியாக மருத்தவரின் சிகிச்சைக்கு நாட வேண்டும்

7. ரவி “கங்காவிற்குச் சிறிய தீக்காயம் ஏற்பட்டதால், நான் தண்ணீர் விட்டுப் புண்ணைக் கழுவினேன்” என்றார். நீங்கள் அவருடைய கூற்றினை ஏற்றுக் கொள்கிறீகளா இல்லையா? ஏன் என்பதை விவரி?

சிறிய தீக்காயங்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட பகுதியைக் குளிர்ந்த நீரில் கழுவி, கிருமிநாசினிக் களிம்பு இட வேண்டும்.

VIII. குறுகிய விடை தருக

1. முதலுதவி அவசியம் ஏன்?

முதலுதவி என்பது மருத்துவ உதவி கிடைக்கும் முன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உடனடிச் சிகிச்சையாகும்.

முதலுதவியின் அவசியம்

 • உயிரைப் பாதுகாக்க
 • நோயாளியின் இரத்தக் கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த
 • வலி நிவாரணம் அளிக்க
 • ஆரம்பநிலைக்கான ஒரு அவசர மருத்துவச் சேவை

2. இந்தப் படம் எதை விளக்குகிறது?

உடல் நலமும் சுகாதாரமும் பாட வினா 2021 - 2022

 • குப்பைகளை எறிந்து, சுற்றுப்புறச் சூழலை அசுத்தம் பண்ணாதீர்கள்
 • நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைக்க வேண்டும்

3. பின்வருவனவற்றை வேறுபடுத்துக.

தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள்.

தொற்று நோய்கள்தொற்றா நோய்கள்.
1. தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகின்றனதொற்றா நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுவதில்லை
2. இவை நுண்ணியிரிகளால் ஏற்படும்இவை நுண்ணியிரிகளால் ஏற்படுவதில்லை
(எ.கா.) காசநோய், தட்டம்மை, இரத்தசோகை(எ.கா.) புற்றுநோய், வயிற்றுப்புண்

4. உங்கள் பற்கள் ஆரோக்கியமாக வைக்க நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

 • சிட்ரஸ் பழங்கள் சாப்பிடலாம்
 • ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் வேண்டும்
 • ஃப்ளோஸ் (Flossing) செய்தல் ஆகியவை சிதைவைத் தடுக்கின்றன
 • புகையிலை மெல்லுதல் தவிர்த்தல்.
 • சரிவிகித உணவை உண்ணுதல்.

5. தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?

தொற்று நோய்கள் காற்று, நீர், உணவு, பூச்சிகள், விலங்குகள்  மூலமாக பரவுகின்றன

6. மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டைக் குறைக்க நீங்கள் கூறும் ஆலோசனை யாது?

 • வழக்கமாக உச்சந்தலையை நன்றாகத் தேய்த்துக் குளிக்கும்போது, இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றபடுகிறது.
 • சுத்தமான தண்ணீரில் குளித்தல், நல்ல தரமான சீப்புகளைப் பயன்படுத்துதல் முடி பராமரிப்புக்கு மிக அவசியமாகக் கருதப்படுகிறது

VIII. விரிவான விடையளிக்கவும்.

1. ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுங்கள்?

காசநோய்:

 • காசநோய் எனப்படும் டி.பி. ஒரு தொற்று நோய் ஆகும். மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
 • இவை ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகக் காற்றின் மூலமாகவும் நோயாளியின் சளி, எச்சில் மற்றும் உடமைகள் மூலமும் பரவுகின்றன.
 • காய்ச்சல், எடை இழப்பு, தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே தடுப்பு மற்றும் சிகிச்சை

 • BCG தடுப்பூசி போடுதல்,
 • நோயாளிககுச் சிறப்பு கவனம் செலுத்துதல்,
 • DOT போன்றவை தொடரச்சியாக அளிககபபடும்
  மருந்துகளைப பயன்படுததுதல்.

காலரா:

 • விப்ரியோ காலரா என்ற பாக்டீரியாவால் ஏறபடும் நோயாகும். இது அசுத்தமான உணவு அல்லது நீர மூலம் பரவக் கூடியது.
 • வயிற்றுப்போக்கு, தசை வலி மற்றும் வாந்தி ஆகியன அதன் முககிய அறிகுறிகளாகும்.

தடுப்பு மற்றும் சிகிச்சை

 • சாபபிடுவதற்கு முன் கைகளைக் கழுவுதல் போன்ற சுகாதாரச் செயல்கள்.
 • தெருக்களில் விற்கப்படும் திறந்தவெளி. உணவுகளைச் சாப்பிடுதைத் தவிர்த்தல்.
 • கொதித்து ஆற வைத்த குடிநீரைப் பருகவேண்டும்.
 • காலாராவிற்கு எதிராகத் தடுப்பூசி கொடுத்தல்.

மஞ்சள் காமாலை (ஹெபாடிட்டிஸ்)

 • மஞ்சள் காமாலை என்பது ஹெபாடிட்டிஸ் வைரஸ்- A, B, C, D, யினால் ஏறபடும் ஆபத்தான மற்றும் இறப்பு ஏற்படுத்தும் நோயாகும்.
 • அசுத்தமான நீர் பாதிக்கப்பட்டவருக்கு போடப்பட் ஊசிகள் மூலம், பாதிக்கப்பட்டவரின் இரத்தம் பகிர்ந்து கொள்வது போன்றவற்றின் மூலம் இந்நோய் பரவுகிறது.
 • பசியின்மை, மஞ்சள் நிறமுடைய சிறுநீர் மற்றும் கண்களில் மஞ்சரள் நிறமம் குறைவான செரித்தல் மற்றும் வாந்தி இதன் அறிகுறிகளாகும்

தடுப்பு மற்றும் சிகிச்சை

 • கொதித்து ஆற வைத்த குடிநீர் உட்கொள்ளுதல்.
 • முறையாகக் கைகளைச் சுத்தம் செய்தல்.

2. ஒரு நபருக்குத் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? முதலுதவிக்கான பல்வேறு சூழ்நிலைகளையும் கூறுங்கள்.

முதலுதவி

 • சிறிய தீக்காயங்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட பகுதியைக் குளிர்ந்த நீரில் கழுவி, கிருமிநாசினிக் களிம்பு இட வேண்டும்.
 • கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டால், திசுக்களின் ஆழமான அடுக்குகள் அழிக்கப்பட்டு, கொப்புளங்கள் தோன்றியிருந்தால், நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 • காயம்பட்ட இடத்தைச் சுற்றிச் சுத்தமான ஒட்டக்கூடிய தன்மையற்ற துணி அல்லது கட்டுத்துணிகளால் சுற்ற வேண்டும்.
 • பெரிய தீக்காயங்களாக இருந்தால் உடனடியாக மருத்துவரின் சிகிச்சைக்கு நாட வேண்டும்.
 • தீயணைப்பான்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

முதலுதவியின் தேவை என்பது

 • உயிரைப் பாதுகாக்க
 • நோயாளியின் இரத்தக் கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த
 • வலி நிவாரணம் அளிக்க
 • ஆரம்பநிலைக்கான ஒரு அவசர மருத்துவச் சேவை

3. ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?

தொற்று நோய்கள்

 • தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகின்றன.
  இந்நோய்கள் அற்ற நபர்களுக்குக்கு இந்த நோய்கள் பரவாமல் பாதுகாக்க வேண்டும்.
 • அசுத்தமான காற்று, நீர், உணவு அல்லது வெக்டார்கள் என்று அழைக்கப்படும் நோய்கடத்திகளான பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் மூலமாகவும் பரவும் நோய்கள் தொற்று நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்

காசநோய்:

மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இவை ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகக் காற்றின் மூலமாகவும் நோயாளியின் சளி, எச்சில் மற்றும் உடமைகள் மூலமும் பரவுகின்றன.

காலரா:

 • விப்ரியோ காலரா என்ற பாக்டீரியாவால் ஏறபடும் நோயாகும்.
 • இது அசுத்தமான உணவு அல்லது நீர மூலம் பரவக் கூடியது.

டைபாய்டு

சாலமோனெல்லா டைபி என்ற பாக்டீரியம் அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் பரவி இந்நோயை ஏற்படுத்துகிறது.

பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்

மஞ்சள் காமாலை (ஹெபாடிட்டிஸ்)

 • மஞ்சள் காமாலை என்பது ஹெபாடிட்டிஸ் வைரஸ்- A, B, C, D, யினால் ஏறபடும் ஆபத்தான மற்றும் இறப்பு ஏற்படுத்தும் நோயாகும்.
 • அசுத்தமான நீர் பாதிக்கப்பட்டவருக்கு போடப்பட் ஊசிகள் மூலம், பாதிக்கப்பட்டவரின் இரத்தம் பகிர்ந்து கொள்வது போன்றவற்றின் மூலம் இந்நோய் பரவுகிறது

தட்டம்மை

 • தட்டம்மை (வாரிசெல்லா) வரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸால் ஏற்படும் தீவிர தொற்று நோய் ஆகும்
 • இது காற்றில் மூலமாகவோ, பாதிக்கப்பட்டவரின் மூலமோ எளிதில் பரவும்

ரேபிஸ்

 • நாய், முயல், குரங்கு, பூனை ஆகியவை கடிப்பதன் மூலம் பரவுகிறது
 • நாய்களின் உமிழ்நீரில் உள்ள வைரஸ் நரம்பு வழியாக மூளைக்கள் நுழைகிறது

 

சில பயனுள்ள பக்கங்கள்