7th Std Science Term 2 Solution | Lesson.5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

பாடம்.5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

வகைப்பாட்டியலின் அடிப்படைகள் பாட விடைகள் - 2021

பாடம்.5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?

  1. ஒற்றுமை
  2. வேறுபாடு
  3. இரண்டும்
  4. எதுவும் இல்லை

விடை : இரண்டும்

2. ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை 

  1. 8.7 மில்லியன்
  2. 8.6 மில்லியன்
  3. 8.5 மில்லியன்
  4. 8.8 மில்லியன்

விடை : 8.7 மில்லியன்

3. உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு

  1. வரிசை
  2. பேருலகம்
  3. தொகுதி
  4. குடும்பம்

விடை : பேருலகம்

4. ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

  1. அரிஸ்டாட்டில்
  2. லின்னேயஸ்
  3. விட்டேக்கர்
  4. பிளேட்டோ

விடை : விட்டேக்கர்

5. புறாவின் இருசொற் பெயர்

  1. ஹோமோசெப்பியன்
  2. ராட்டஸ் ராட்டஸ்
  3. மாஞ்சிபெரா இண்டிகா
  4. கொலம்பா லிவியா

விடை : கொலம்பா லிவியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ____________ 1623 ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார்.

விடை : காஸ்பார்டு பாஹின்

2. சிற்றினம் என்பது ____________ வகைப்பாட்டின் நிலை ஆகும்.

விடை : அடிப்படை

3. ____________ பச்சையமற்ற மற்றும் ஒளிச் சேர்க்கை தன்மையற்றது.

விடை : பூஞ்சை

4. வெங்காயத்தின் இரு சொற் பெயர் ____________

விடை : அல்லியம் சட்டைவம்.

5. ____________ தந்தை, கரோலஸ் லின்னேயஸ் ஆவர்.

விடை : தற்கால வகைப்பாட்டின்

III. சரியா – தவறா எனக் குறிப்பிடு. தவறு எனில் சரியான விடையை எழுதுக

1. உயிரினம் உருவாகுதல் மற்றும் பரிணாம முக்கியத்துவத்தை அறிய வகைப்பாட்டியல் உதவுகிறது.

விடை : சரி

2. மீன்கள் நீரில் வாழும் முதுகெலும்புடையவை ஆகும்.

விடை : சரி

3. 1979 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது.

விடை : தவறு

சரியான விடை : 1979 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது.

4. உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுகிறது

விடை : தவறு

5. விலங்கு செல்கள் செல்சுவர் பெற்றவை.

விடை : தவறு

IV. பொருத்துக

1. மொனிரா மோல்டுகள்
2. புரோடிஸ்டா பாக்டீரியா
3. பூஞ்சை வேம்பு
4. ப்ளாண்டே வண்ணத்துப் பூச்சி
5. அனிமேலியா யூக்ளினா
விடை : 1 – ஆ, 2 – உ, 3 – அ, 4 – இ, 5 – ஈ

V. கூற்று மற்றும் காரணங்காணல் வினாக்கள்

  1. கூற்று சரி, காரணமும் சரி
  2. கூற்று சரி, காரணம் தவறு
  3. கூற்று தவறு, காரணம் சரி
  4. கூற்று மற்றும் காரணம் தவறு.

1. கூற்று :  இரு சொல் பெயர் என்பது உலகளாகிய பெயராகும். இது இரு பெயர்களைக் கொண்டது.

காரணம் : கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் முதன்முதலில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

விடை : கூற்று சரி, காரணம் தவறு

2. கூற்று  : அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், தொகுத்தல் ஆகியவை வகைப்பாட்டியலில் அவசியமானவை.

காரணம் : செல்கள் இவை வகைப்பாட்டியலின் அடிப்படைப் படிநிலைகள்.

விடை : கூற்று சரி, காரணமும் சரி

VI. மிகக் குறுகிய விடையளி

1. வகைப்பாட்டியல் என்றால் என்ன?

தாவரங்கள் மற்றும் விலங்குகள். உயிரினங்களை அவற்றின் பொதுப்பண்புகளின் அடிப்படையில் தொகுத்தல் உயிரியல் வகைப்பாட்டியல் எனப்படும்.

2. ஐந்துலக வகைப்பாட்டினைப் பட்டியலிடுக

  • மொனிரா
  • புரோடிஸ்டா
  • பூஞ்சைகள்
  • ப்ளாண்ட்டே
  • அனிமேலியா

3. இருபிளவு திறவுகோல் –வரையறு?

உயிரினங்களை அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துதல் ஆகும்.

4. மொனிராவிற்கு இரண்டு உதாரணம் தருக.

  • பாக்டீரியங்கள்
  • நீலப் பசும் பாசிகள்

5. இரு சொற்பெயரிடும் முறை என்பது யாது?

காஸ்பார்டு பாஹின், 1623 ஆம் ஆண்டு உயிரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார். இதற்கு இரு சொல் பெயரிடும் முறை என்று பெயர்.

6. இருசொற்பெயரைக் குறிப்பிடுக.

அ. மனிதன்

ஹோமோ சேப்பியன்ஸ்

ஆ. நெல்

ஒரைசா சட்டைவா

VII. குறுகிய விடையளி

1. வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக.

வகைப்பாட்டில் ஏழு முக்கியப் படி நிலைகள் உள்ளன. அவையாவன :

  1. உலகம்
  2. தொகுதி,
  3. வகுப்பு
  4. வரிசை
  5. குடும்பம்
  6. பேரினம்
  7. சிற்றினம்.

2. தாவர உலகம் மற்றும் விலங்கு உலகத்தை வேறுபடுத்துக.

தாவர உலகம்

  • தாவர உலகம் ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய யூகேரியோட்டுகளைக் கொண்டவை.
  • தாவர செல்களில் செல் சுவர் உண்டு
  • ஒளிச்சேர்க்கை போன்ற சிறப்பு செயல்பாடுகளை செல்கள் செய்ய முடியும்
  • எ.கா. : மாஸ்கள், பெரணிகள், கூம்புகளை உருவாக்கும் தாவரங்கள் மற்றும் பூக்கும் தாவரங்கள்

விலங்கு உலகம்

  • விலங்குகள் யூகேரியோடிக் செல் உடைய பல செல் உயிரிகளாகும்.
  • விலங்கு செல்களில் செல் சுவர் இல்லை.
  • ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது, ஆனால் தாவரங்கள் போலல்லாமல் விலங்குகள் இடத்திலிருந்து இடத்திற்கு நகர்கின்றன.
  • எ.கா. : முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்புகள்

3. ஐந்து உலக வகைப்பாட்டின் இரண்டு நிறைகளை எழுதுக.

  • இவ்வகைப்பாட்டின் அமைப்பானது அதிகமாக அறிவியல் ரீதியாகவும் மற்றும் இயற்கையின் முறைப்படியும் அமைந்துள்ளது.
  • இந்த வகைப்பாடு செல்லின் அமைப்பு, உணவு ஊட்ட முறை மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப நிலையின் பண்புகளைத் தெளிவாக குறிக்கின்றது.
  • வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த உயிரினங்கள் மரபு வழியில் வகைப்படுத்தப்படுவதால், இதுவே மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவீன வகைப்பாட்டு முறை ஆகும்.
    எளிமையான உயிரினத்தில் இருந்து சிக்கலான உயிரினம் வரை படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைவதை இது குறிக்கிறது.

VIII. விரிவான விடையளி

1. ஐந்து உலக வகைப்பாட்டின் வரைபடம் வரைக

2. இருசொற் பெயரிடும் முறை குறிப்பு வரைக.

  • காஸ்பார்டு பாஹின், 1623 ஆம் ஆண்டு உயிரினங்களை இரண்டு சசொல் கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார் .
  • இதற்கு இருசொல் பெயரிடும் முறை என்று பெயர். இதனை 1753 ஆம் ஆண்டு கரோலஸ் லின்னேயஸ் என்பவர் செயல்படுத்தினார். இவரே “நவீன வகைப்பாட்டியலின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.
  • இருசொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உலக அளவில் பெயரிடும் முறை ஆகும். இந்த முறைப்படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப் பெயரும், இரண்டாவதாக சிற்றினப் பெயருமாக இரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும்.
  • ஆங்கிலத்தில் எழுதும் போது பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும், சிற்றினப் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்பட வேண்டும். உதாரணம் : வெங்காயத்தின் இருசொல் பெயர் அல்லியம் சட்டைவம். அல்லியம் – பேரினப் பெயர் சட்டைவம் – சிற்றினப் பெயர் ஆகும்.
  • வட்டார மொழிப் பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அறியப்படும் ஒரு உள்ளூர் பெயராகும்.
  • இருசொற் பெயர் என்பது என்றும் மாறாத ஒரு உலகளாவிய பெயர் ஆகும். அறிவியல் அறிஞர்கள் புதிய உயிரினங்களை இனம் கண்டு, அதனைக் குறிப்பிட்ட படிநிலையில் வைப்பதற்கு இருசொல் பெயரிடும் முறையும் வகைப்படுத்துதலும் உதவுகிறது.

3. முதுகுநாணற்றவையின் வகைப்பாட்டினை அவற்றின் பொதுப்பண்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் எழுது.

பிரிவு பொதுப்பண்புகள்
1. தொகுதி ஒரு செல்உயிரிகள் அல்லது புரோட்டோசோவா

(எ.கா) அமீபா, யூக்ளினா, பாரமீசியம

நுண்ணோக்கி மூலம் பார்க்கக் கூடிய ஒரு செல் உயிரி. போலிக் கால்கள், கசையிழை, குறு இழை மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன. இனப்பெருக்கம் பிளவு முறையிலோ அல்லது இணைவு முறையிலோ நடைபெறுகிறது.
2. தொகுதி துளையுடலிகள் அல்லது பொரிபெரா

(எ.கா) லியூகோசோலினியா, ஸ்பான்ஜில்லா, சைகான்

இவை பல செல்களால் ஆனவை. உடல் முழுவதும் துளைகள் நிறைந்து காணப்படும். முட்களால் ஆன அகச்சட்டகத்தைக் கொண்டுள்ளது. இனப்பெருக்கம் பால் மற்றும் பாலிலா முறையில் நடைபெறுகிறது.
3. தொகுதி குழியுடலிகள் அல்லது சீலென்டிரேட்டா

(எ.கா) ஹைட்ரா கடல் சாமந்தி ஜெல்லி மீன்கள், பவளங்கள்

பல செல் உயிரினங்கள், ஈரடுக்கு உயிரிகள், ஒட்டியோ, நீரில் நீந்தியோ மற்றும் தனித்து அல்லது கூட்டமாகக் காணப்படும். பாலின மற்றும் பாலிலா வகை இனப்பெருக்கத்தை மேற்கொள்கிறது.
4. தொகுதி தட்டை புழுக்கள் அல்லது பிளாட்டிஹெல்மின்தஸ்

(எ.கா) பிளானேரியா, கல்லீரல் புழு இரத்தப் புழு, நாடாப் புழு

உடற்குழி அற்றவை ஒட்டுண்ணிகளாக விலங்குகள் மற்றும் மனிதர்களில் உடலின் உட்பகுதியில் காணப்படுகிறது. பெரும்பாலும் இரு பால் உயிரிகளாகக் காணப்படுகின்றன.
5. தொகுதி உருளைப் புழுக்கள் அல்லது நெமடோடா

(எ.கா) அஸ்காரிஸ் லும்பிரிக்காய்ட்டஸ

உடற்கண்டங்கள் அற்றவை. பெரும்பாலும் மனிதன் மற்றும் விலங்குகளில் நோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணிகள் ஆகும். இனப்பெருக்கம் பாலின முறையில் நடைபெறுகிறது.
6. தொகுதி வளைத்தசைப் புழுக்கள் அல்லது அனலிடா

(எ.கா) மண்புழு, நீரிஸ், அட்டை

மூவடுக்கு உயிரிகள், உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இருபால் உயிரிகள் (இருபால் மற்றும் ஒற்றை பாலியல்)
7. தொகுதி கணுக்காலிகள் அல்லது ஆர்த்ரோபோடா

(எ.கா) நண்டு, இறால், மரவட்டை, பூச்சிகள், தேள், சிலந்தி

உடல் கண்டங்களை உடையது. உடற்பரப்பு தடித்த கைட்டின் ஆன புறச்சட்டகத்தைக் கொண்டுள்ளது. இணைக் கால்கள் மற்றும் இணையுறுப்புகளால் ஆனது. இவை ஒரு பால் உயிரிகள். இவற்றில் ஆண், பெண் வேறுபாடு உண்டு.


சில பயனுள்ள பக்கங்கள்