7th Std Science Term 3 Solution | Lesson.5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

பாடம்.5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

அன்றாட வாழ்வில் விலங்குகள் பாட விடைகள்

பாடம்.4 அன்றாட வாழ்வில் விலங்குகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. _________ தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.

  1.  முட்டை
  2. பால்
  3. இவை இரண்டும்
  4. இவை எதுவும் அல்ல

விடை : பால்

2. முட்டையில் _________ அதிகம் உள்ளது.

  1. புரதம்
  2. கார்போ ஹைட்ரேட்
  3. கொழுப்பு
  4. அமிலம்

விடை : புரதம்

3. வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் _________ ஆடைகள் தயாரிக்க உதவுகிறது.?

  1. கால்
  2. கை
  3. உரோமம்
  4. தலை

விடை : உரோமம்

4. பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது. _________

  1. ஹார்ட்டிகல்சர்
  2. ஃபுளோரிகல்சர்
  3. அக்ரிகல்சர்
  4. செரிகல்சர்

விடை : செரிகல்சர்

5. பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது  _________

  1. ஆஸ்துமா
  2. ஆந்தராக்ஸ்
  3. டைஃபாய்டு
  4. காலரா

விடை : ஆந்தராக்ஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. புரதம் மற்றும் _________ பாலில் அதிகம் உள்ளது

விடை :  கால்சியம்

2. தேன் கூட்டிலிருந்து _________ எடுக்கப்படுகிறது. 

விடை : தேன்

3. ஆந்தராக்ஸ் நோயை உண்டாக்குவது _________ 

விடை : பேசில்லஸ் ஆந்தாசிஸ்

4. இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை _________

விடை : பட்டு

5. அமைதிபட்டு _________  ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

விடை : 1992

III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியானகூற்றை எழுதுக

1. இயற்கையின் மிகப் பெரிய கொடை விலங்குகள்.

விடை : சரி

2. குதிரையின் உரோமம் ஓவியம் தீட்டும் தூரிகைகளில் பயன்படுத்தப்படுகிறது. 

விடை : சரி

3. பட்டுப்பூச்சி கம்பளி இழைகளைத் தருகிறது

விடை : தவறு

சரியான விடை : பட்டுப்பூச்சி பட்டு இழைகளைத் தருகிறது

4. அஹிம்சைப் பட்டின் மறுபெயர் மல்பெரி பட்டு.

விடை : தவறு

சரியான விடை : அஹிம்சைப் பட்டின் மறுபெயர் அமைதி பட்டு.

5. ஆந்த்ராக்ஸைக் குணப்படுத்தும் சிறந்த மருந்து பெனிசிலின்.

விடை : சரி

IV. பொருத்துக

1. கூட்டுப் புழுஇறைச்சி
2. அமைதிப் பட்டுகோழிப்பண்ணை
3. பிராய்லர்பட்டுப் பூச்சி
4. இனிப்பான திரவம்ஆந்திரப் பிரதேசம்
5. ஆடுதேன்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – உ, 5 – அ

V. ஒப்புமை

1. நீர்: குழாய்: மின்சாரம் :: _________ 

விடை : கம்பி

2. தாமிரம்: கடத்தி: கட்டை :: _________ 

விடை : கடத்தாப்பொருள்

3. நீளம்; மீட்டர் அளவு: மின்சாரம் : _________.

விடை : அம்பியர்

3. மில்லி அம்பியர்; மைக்ரோ அம்பியர்: 10-3 A: _________.

விடை : 10oA

VI. கூற்றும், காரணமும்

  1. கூற்றும், காரணமும் சரி
  2. கூற்று சரி, காரணம் தவறு
  3. கூற்று தவறு, காரணம் சரி
  4. கூற்றும், காரணமும் தவறு

1. கூற்று : விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.

காரணம் : ஆடு, யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றம் முயல் கம்பளி இழைகளைத் தருகிறது

விடை : கூற்றும், காரணமும் சரி

1. கூற்று : பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின்

காரணம் : இந்த மருந்துகள் பசு அம்மைய குணமாக்கும்

விடை : கூற்றும், காரணமும் தவறு

VII. மிகக் குறுகிய விடை தருக

1. பாலிலிருந்து கிடைக்கும் பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.

  • பன்னீர்
  • பாலாடைக்கட்டி
  • பாலேடு (க்ரீம்)
  • வெண்ணெய்
  • நெய்
  • தயிர்

2. விலங்குகளிடமிருந்து கிடைக்கும் இரு வகையான இழைகள் யாவை?

விலங்குகளிடமிருந்து கிடைக்கும் இரு வகையான இழைகள்

  • கம்பளி
  • பட்டு இழைகள்

3. கத்தரித்தல் என்றால் என்ன?

ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன. உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும்.

4. ஆந்தராக்ஸ் நோயின் அறிகுறிகளை எழுதுக

  • காய்ச்சல், இருமல், மூச்சு விடுதலில் சிரமம். இவை நிமோனியாவை ஒத்த அறிகுறிகளாகும்.
  • சில சமயம் இவர்களுக்கு வாந்தி எடுக்கும் சூழ்நிலையும் மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகின்றன.

5. செரிகல்சர் – வரையறுக்க

பட்டுப்பூச்சிகளை வளர்த்து, அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவது, பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர் எனப்படும்.

6. நாம் விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்?

  • நாம் விலங்குகளை நேசிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும்.
  • நாம் அவர்களைப் பாதுகாத்து கவனமாக நடத்த வேண்டும்.

7. அஹிம்சைப் பட்டைக் கண்டறிந்தவர் யார்?

1992ஆம் ஆண்டு குசுமா ராஜய்யா என்பவர் அஹிம்சைப் பட்டைக் கண்டறிந்தார்

VIII. குறுகிய விடை தருக

1. கம்பளியின் சிறப்பம்சங்கள் மூன்றினை எழுதுக.

  • வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை.
  • ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது.
  • கம்பளி, குளிருக்கு எதிராகச் செயல்படுகின்றது. எனவே, கம்பளி சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது.
  • இது எளிதில் சுருங்காது

2. பட்டின் ஏதேனும் மூன்று பயன்பாட்டை எழுதுக.

  • பட்டு இயற்கை அழகுடையது,
  • கோடை காலத்தில் இது இதமானதாகவும், குளிர் காலத்தில் வெப்பத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது.
  • நாகரிகமான, நவீன உடைகளைத் அழகாகத் தயாரிக்கவும், சிறப்பு வாய்ந்த அழகிய பட்டாடைகளை வடிவமைக்கவும் முக்கியமாக சேலைகள் தயாரிக்க இது பயன்படுகிறது.
  • வீட்டு உபயோகப் பொருள்களான சுவர் அலங்காரப் பொருள்கள், திரைச் சீலைகள், கம்பளம் மற்றும் இதர விரிப்புகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
  • பட்டு இழையானது, மருத்துவத் துறையில், அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது

3. கோழிப்பண்ணையில் காணப்படும் பொதுவான நோய்கள் யாவை?

  • சால்மோனெல் – லோசிஸ் (வயிற்றுப்போக்கு) –
    இந்நோயைப் பாக்டீரியா உருவாக்கும்
  • ரானிக் கெட் நோய் (அம்மை நோய்) – இந்நோயை வைரஸ் உருவாக்கும்
  • ஆஸ்பர்ஜில்லஸ் நோய் (பலவீனம், நலிந்துபோதல்) –
    இந்நோயைப் பூஞ்சை உருவாக்கும்

IX. விரிவான விடை தருக

1. அஹிம்சை பட்டு பற்றி விவரிக்க?

2. பட்டாலைகளில் ஏற்படும் அபாயங்கள் யாவை?

  • பொதுவாக பட்டாலையில் பணிபுரிபவர்கள் நின்று கொண்டே பட்டு நூலை நூற்பதால் அவர்கள் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்
  • மேலும் இவர்கள் முதுக வலியினாலும், பார்வைக் கோளாறுகள் மற்றும் தோல் காயங்களாலும் துன்புறுகிறார்கள்.
  • குறைந்த காற்றோட்டமுள்ள பகுதிகளில் இவர்கள் பணிபுரிவதால் சில சமயம், சுவாச சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் அவதிப்படுகிறார்கள்

IX. பின்வரும் வினாக்களுக்குப் பதில் தருக.

கம்பளி ஆலை படம்

1. கம்பளி ஆலையில், கம்பளி தயாரிக்கப்படும் நிலைகளை எழுதுக.

இந்தக் கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவை பின்வருமாறு.

  1. கத்தரித்தல் (Shearing)
  2. தரம் பிரித்தல் (Grading or sorting)
  3. கழுவுதல் (Washing or Scouting)
  4. சிக்கெடுத்தல் (Carding)
  5. நூற்றல் (Spinning)

கத்தரித்தல் :

  • ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன.
  • உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும்.

தரம் பிரித்தல்:

ஒரே ஆட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்படும் உரோமங்கள் வெவ்வேறானவை  இவை பின்னர் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்படும். இது தரம் பிரித்தல் எனப்படும்.

தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல்

கழுவுதல் :

  • தோலில் இருந்து கத்தரித்த தோலின் உரோமங்கள் உள்ள தூசி, அழுக்கு மற்றும் எண்ணெய் பிசின் போன்றவற்றை நீக்க, அதைச் சலவைத்தூள் கொண்டு நன்கு கழுவ வேண்டும்.

சிக்கெடுத்தல் :

  • காய வைத்த கம்பளி இழைகளைக் கவனத்துடன் பிரிக்க வேண்டும்.
  • இதை, ஆலைகளில் உள்ள உருளைகளில் செலுத்தி, பின்னர் மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்ற வேண்டும்.
  • இப்படிக் கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.

நூற்றல் :

  • இந்த வலையைக் குறுகிய தனித்த இழையாக மாற்ற, அவற்றை நூற்பு இயந்திரங்களில் அனுப்ப வேண்டும்.
  • இந்த நூல், பின் பந்துபோல் உருண்டையாக மாறும்.
  • இந்த நூல் பந்து, பின் பின்னல்களாக மாற்றப்பட்டு, ஆடைகள் நெய்ய உதவும்.

2. கம்பளியின் பயன்களை எழுதுக.

  • கம்பளி என்பது, பல்வேறு வகையான பொருள்கள் செய்ய உதவும் இழையாகும்.
  • இந்த இழைகளின் விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான துணிகள் மற்றும் தொழிற்சாலைக்குத் தேவையான பொருள்கள் செய்ய உதவுகின்றன.
  • மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன.
  • கம்பளி இழை மற்றும் இயற்கை அல்லது செயற்கை இழைகளோடு சேரும்போது அவை மடிப்புக்கு எதிர்ப்புத் தன்மை உடைய போர்வைகள் மற்றும் இரைச்சலை உறிஞ்சும் விரிப்புகள் தயாரிக்க உதவுகின்றன.

 

சில பயனுள்ள பக்கங்கள்