7th Std Science Term 3 Solution | Lesson.6 காட்சித் தொடர்பியல்

பாடம்.6 காட்சித் தொடர்பியல்

காட்சித் தொடர்பியல் பாட விடைகள்

பாடம்.6 காட்சித் தொடர்பியல்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க _________ விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.

  1. Ctrl + c
  2. Ctrl + v
  3. ctrl + x
  4. Ctrl + A

விடை : பால்

2. தேர்ந்தெடுத்த உரையை வெட்ட _________  விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.

  1. Ctrl + c
  2. Ctrl + v
  3. ctrl + x
  4. Ctrl + A

விடை : புரதம்

3. லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

விடை : உரோமம்

4. திரையில் ரூலர் தெரியாவிட்டால் _________ கிளிக் செய்ய வேண்டும்.

  1. View → ruler
  2. view → task
  3. file → save
  4. edit → paste

விடை : செரிகல்சர்

5. ஆவணத்தைச் சேமிக்க மெனு பயன்படுகிறது

  1. File → open
  2. File → print
  3. File → save
  4. File → close

விடை : ஆந்தராக்ஸ்

II. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. உரை ஆவண மென்பொருளின் பயன்கள் யாவை?

எழுத்தாற்றல், புத்தகங்கள், அறிக்கைகள்,
செய்திமடல்கள், கையேடுகள், மற்றும் பிற ஆவணங்களைத் தோற்றுவிப்பதற்கு உரை ஆவணம் (Word செயலி) ஒரு கருவியாகும்.

2. உரையை தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன?

ஆவணத்தை உருவாக்கும் போது ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்தாலும் திருத்தும் போதும் வடிவூட்டும் போதும் சொற்களையோ வரிகளையோ பத்திகளையோ அல்லது சில நேரம் முழு ஆவணத்தையோ தேர்ந்தெடுக்க வேண்டி வரும். உரைகளை தேர்ந்தெடுத்த பின்னால் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். உரையை நகர்த்தவும், நகல் எடுக்கவும் தடிப்பாக்கவும் முடியும். உரையை தேர்ந்தெடுக்க சுட்டி அல்லது விசைப்பலகையை பயன்படுத்தலாம்.

3. ஒரு ஆவணத்தை மூடலாம்?

ஒரு ஆவணத்தில் வேலை முடிந்தவுடன் அந்த கோப்பினை மூடி விட File → Close என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.

4. வலது இசைவு என்பது என்ன?

Word-ல் பத்தி ஒழுங்கமைப்பு என்பது பத்தியின் இடது மற்றும் வலது பக்கங்களின் தோற்றத்தை குறிக்கிறது. Word-இல் பத்திகளை வலதுபக்கம் ஒழுங்குபடுத்தினால் வலது பக்கம் சமச்சீராக இருக்கும். இது வலது இசைவு (Right Alignment) எனப்படுகிறது.

5. ஏற்கனவே உள்ள ஒரு ஆவணத்தை திறப்பது எப்படி?

சேமிக்கப்பட்டு மூடப்பட்ட ஒரு ஆவணத்தை திறக்க, பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்யலாம்.

  1. மெனு பட்டியில் உள்ள திறந்த கோப்பு (Open) பொத்தானை அழுத்தவும்.
  2. File → Open என்ற கட்டளையை பயன்படுத்தவும்
  3. விசைப்பலகையில் CTRL + O விசைகளை அழுத்தவும்.

திறந்த உரையாடல் பெட்டி. தோன்றும். கோப்பை தேர்ந்தெடுத்து திறக்க (Open) பொத்தானை அழுத்தவும்.

6. புதிய ஆவணத்தை சேமிப்பது எவ்வாறு?

புதிய ஆவணத்தை சேமிக்க, பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றவும்:

  1. மெனு பட்டியில் உள்ள சேமி (Save) பொத்தானை அழுத்தவும்.
  2. File → Save என்ற கட்டளையை பயன்படுத்தவும்.
  3. விசைப்பலகையில் CTRL + S விசைகளை அழுத்தவும்.

7. ஆவணத்தை அச்சிடுதல் முறையை விளக்குக

ஒரு ஆவணம் அல்லது தேர்ந்தெடுத்த பக்கங்களை அச்சிட கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளை பின்பற்றவும்:

அச்சிடப்பட வேண்டிய ஆவணத்தை திறக்கவும்.

மெனு பட்டியில் File → Print கட்டளையை தேர்ந்தெடு.

அச்சு உரையாடல் பெட்டி திறக்கும். அச்சு வரம்பு, நகல்களின் எண்ணிக்கை, அச்சுப்பொறி பெயர்
போன்ற விருப்பத் தேர்வுகளை தேர்ந்தெடுக்கவும். அச்சுப்பொறியை “on” செய்யவும். மற்றும் தாள்
அச்சியந்திர தட்டில் சரியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.

“OK” பொத்தனை கிளிக் செய்திடவும்.

8. உரையை தேர்ந்தெடுத்தல் முறைகள் யாவை? அதை பற்றி விவரி?

  • ஆவணத்தை உருவாக்கும் போது ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்தாலும் திருத்தும் போதும் வடிவூட்டும் போதும் சொற்களையோ வரிகளையோ பத்திகளையோ அல்லது சில நேரம் முழு ஆவணத்தையோ தேர்ந்தெடுக்க வேண்டி வரும்.
  • உரைகளை தேர்ந்தெடுத்த பின்னால் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். உரையை நகர்த்தவும், நகல் எடுக்கவும் தடிப்பாக்கவும் முடியும்.
  • உரையை தேர்ந்தெடுக்க சுட்டி அல்லது விசைப்பலகையை பயன்படுத்தலாம்.

சுட்டியை கொண்டு உரையை தேர்ந்தெடுத்தல்

  1. செருகும் இடத்தை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
  2. சுட்டெலியின் இடது பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு உரையின் மீது நகர்த்த வேண்டும்.
  3. உரை தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பொத்தானை விட்டு விட வேண்டும்.

விசைப்பலகையின் மூலம் உரையை தேர்ந்தெடுத்தல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  1. செருகும் இடத்தை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
  2. Shift பொத்தனை அழுத்தியவாறு நகர்வு பொத்தான்களை பயன்படுத்தி தேவையான உரையை உயர்த்திக் காட்ட வேண்டும்.
  3. தேவையான உரை தேர்வு செய்யப்பட்டபின் Shift பொத்தனை அழுத்துவதை விட்டு விடவும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்