7th Std Social Science Term 1 Solution | Lesson.1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

பாடம்.1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் - பாட விடைகள்

பாடம்.1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

சொற்களஞ்சியம்

வரலாற்றுப் பதிவாளர்chroniclera person who writes accounts of important historical events
விரோதம், பகைமைanimosityhostility, antagonism
பயணக்குறிப்புகள்traveloguea book or illustrated account of the places visited and experiences encountered by a traveller
நினைவாகcommemorationin remembrance of
விரிவாகelaboratelyin detail
தூபிகள்minaretsa tall tower, typically part of a mosque
களஞ்சியங்கள்repositoriesthe places, buildings where materials are stored or kept
உருவப்படங்கள்portraitspictures, images in drawing or painting
தொகுப்புcompendiuma collection of detailed information about a particular subject, especially in a book
சான்றுகளுடன் நிரூபித்தல்substantiate to prove with evidence

சரியான விடையைத் தேர்ந்தெடு எழுதுக

1. _________ என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  1. காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
  2. பயணக்குறிப்புகள்
  3. நாணயங்கள்
  4. பொறிப்புகள்

விடை : பொறிப்புகள்

2. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் _________ ஆகும்.

  1. வேளாண்வகை
  2. சாலபோகம்
  3. பிரம்மதேயம்
  4. தேவதானம்

விடை : தேவதானம்

3. _________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  1. சோழர்
  2. பாண்டியர்
  3. ராஜபுத்திரர்
  4. விஜயநகர அரசர்கள்

விடை : சோழர்

4. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் _________ ஆகும்.

  1. அயினி அக்பரி
  2. தாஜ் – உல் – மா -அசிர்
  3. தசுக்-இ-ஜாஹாங்கீரி
  4. தாரிக் – இ – பெரிஷ்டா

விடை : தாஜ் – உல் – மா -அசிர்

5. அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் _________ ஆவார்.

  1. மார்க்கோபோலோ
  2. அல் -பரூனி
  3. டோமிங்கோ பயஸ்
  4. இபன் பதூதா

விடை : இபன் பதூதா

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. _________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.

விடை : உத்திரமேரூர்

2. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் _________ ஆவார்.

விடை : முகமது காேரி

3. ஒரு _________ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.

விடை : ஜிட்டல்

4. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் ___________ ஆவார்.

விடை : மின்கஜ் உஸ் சிராஜ்

5. கி.பி.1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி _________ ஆவார்.

விடை : நிகாேலாே காேண்டி

பொருத்துக:

1. கஜுராகோஒடிசா
2. கொனாரக்ஹம்பி
3. தில்வாராமத்தியப்பிரதேசம்
4. விருப்பாக்சாராஜஸ்தான
Ans : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

சரியா? தவறா?

1. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.

விடை : சரி

2. நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.

விடை : தவறு

3. தாமிரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.

விடை : சரி

4. டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி.1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.

விடை : தவறு

கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.

கூற்று : முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார். 

காரணம் : இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.

  1. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  2. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  3. கூற்று தவறு, காரணம் சரி.
  4. கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

விடை : காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

தவறான இணையைக் கண்டறியவும்:

  1. மதுரா விஜயம் – கங்காதேவி
  2. அபுல் பாசல் – அயினி அக்பர்
  3. இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்
  4. அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்

விடை : இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்

பொருந்தாததைக் கண்டுபிடி:

பொறிப்புகள், பயணக்குறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள்.

விடை : பயணக்குறிப்புகள்

ஒரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

1. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?

நாதமுனி

2. ‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?

வாழ்க்கை நினைவுகள்

3. ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?

தசுக்-இ-ஜாஹாங்கீர்

4. வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.

  • முதல் நிலைச் சான்றுகள்
  • இரண்டாம் நிலைச் சான்றுகள்

5. இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கோட்டைகளையும் பட்டியலிடவும்.

மசூதிகள்

  • குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி
  • மோத்- கி-மசூதி
  • ஜமா மசூதி
  • பதேப்பூர் சிக்ரி தர்கா

மசூதிகள்

  • ஆக்ரா கோட்டை
  • சித்தூர் கோட்டை,
  • குவாலியர் கோட்டை
  • டெல்லி செங்கோட்டை
  • தௌலதாபாத் (ஔரங்காபாத்), பிரோஷ் ஷா கொத்தளம்

6. இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.

  • மார்க்கோபோலோ
  • அல்பருனி
  • இயன் பதூதா
  • நிகோலோ கோண்டி
  • டோமிங்கோ பயஸ்

கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்

1. டெல்லி சுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.

  • டெல்லி சுல்தான்கள் பலவகையான நாணயங்களை வெளியிட்டனர்.
  • தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களை வெளியிட்டனர்.
  • ஜிட்டல் எனப்படும் செம்பு நாணயங்களும், டங்கா எனப்படும் வெள்ளி நாணயங்களும் வெளியிடப்பட்டன.
  • நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள படங்களும், உருவங்களும், அரசர்களுடைய பெயர்கள், பட்டங்கள் அவர்களின் உருவப்படங்கள், நிகழ்வுகள், இடங்களின் பெயர்கள் சின்னங்கள் ஆகி யவற்றை நமக்கு உணர்த்துகின்றன.
  • அரசர்களின் இராணுவப் படையெடுப்புகள், பிரதேச விரிவாக்கம், வணிகத் தொடர்பு மற்றும் சமய நம்பிக்கை ஆகியவையும் நாணயங்களில் இடம் பெற்றுள்ளன.
  • நாணயங்களில் உள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்து விளக்குகின்றது.
  • அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள் நாட்டின் பொருளாதார வளத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • அதேபோன்று முகமது பின்துக்ளக்கின் செப்பு நாணயங்கள் நாட்டின் நலிவு நிலையைக் காட்டுகின்றன.

கட்டக வினாக்கள்

________ பேரரசர் ஒளரங்கசீப்பின் அரசவை அறிஞர் ஆவார்.

விடை: காஃபி கான்

திருவாலங்காடு செப்பேடுகள் ________ காலத்தைச் சேர்ந்ததாகும்.

விடை: முதலாம் இராஜேந்திர சோழன்

________ என்பது கல்விக் கூடங்களைப் பராமரிப்பதற்கான நிலமாகும்.

விடை: சாலபோகம்

பெரியபுராணத்தைத் தொகுத்தவர் ________ ஆவார்.

விடை: சேக்கிழார்

________  ஓர் அரேபியச் சொல். இதன் பொருள் வரலாறு என்பதாகும்.

விடை: தாரிக்

முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கே அமைந்திருந்த ________க்கு மாற்றினார்.

விடை: தேவகிரி

 

சில பயனுள்ள பக்கங்கள்