7th Std Social Science Term 1 Solution | Lesson.2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

பாடம் 2. வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் - பாட விடைகள்

பாடம் 2. வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

சொற்களஞ்சியம்

வாரிசு, வழித்தோன்றல் scion  a descendant of the notable family
முன்னெப்போதும் இல்லாத unprecedented exceptional
இரு சாராருக்கும் நாசத்தை விளைவிக்கின்ற internecine mutually destructive
சித்தரிக்கும் கலை portraiture the art of painting
நேர்த்தியான elegant grand
மடாலயம் monastery a place where monks live
கூட்டமைப்பு confederacy a league or alliance of states

சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பிருதிவிராஜ ராசோ எனும் நூலை எழுதியவர் யார்?

  1. கல்ஹணர்
  2. விசாகதத்தர்
  3. ராஜசேகரர்
  4. சந்த் பார்தை

விடை : சந்த் பார்தை

2. பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

  1. முதலாம் போஜா
  2. முதலாம் நாகபட்டர்
  3. ஜெயபாலர்
  4. சந்திரதேவர்

விடை : முதலாம் நாகபட்டர்

3. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

  1. மங்கோலியா
  2. துருக்கி
  3. பாரசீகம்
  4. ஆப்கானிஸ்தான்

விடை : ஆப்கானிஸ்தான்

4. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

  1. சிலை வழிபாட்டை ஒழிப்பது.
  2. இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
  3. இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
  4. இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.

விடை : இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் _________ ஆவார்.

விடை : தர்மபாலர்

2. கி.பி _________ இல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர்.

விடை : 1712

3. ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் _________ ஆவார்.

விடை :சிம்மராஜ் 

4. காந்தர்யா கோவில் _________ ல் அமைந்துள்ளது.

விடை : மத்திய பிரதேசத்தில்

பொருத்துக

1. கஜுராகோ அபு குன்று
2. சூரியனார் கோவில் பந்தேல்கண்ட்
3. தில்வாரா கோவில் கொனாரக்
Ans : 1 – ஆ, 2 – இ, 3 – அ

சரியா? தவறா?

1. ராஜபுத்ர என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.

விடை : தவறு

2. அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விடை : சரி

3. அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.

விடை : தவறு

4. ரக்ஷாபந்தன் சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.

விடை : சரி

5. இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

விடை : தவறு

கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.

1. கூற்று : கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.

காரணம் : கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.

  1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
  2. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
  3. கூற்று தவறு. காரணம் சரி.
  4. கூற்றும் காரணமும் தவறு.

விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

2. கூற்று I – மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்து விரிவுபடுத்த முடியவில்லை.

கூற்று II – மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவர்.

  1. I சரி.
  2. II சரி.
  3. I மற்றும் II சரி.
  4. I மற்றும் II தவறு.

விடை : I சரி.

3. கூற்று: இந்தியாவில் இஸ்லாமியக் காலக்கட்டம் கி.பி.(பொ.ஆ) 712 இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை.

காரணம்: கூர்ஜரப்பிரதிகாரர்கள் அராபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.

  1. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  2. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
  3. கூற்று சரி, காரணம் தவறு.
  4. கூற்று தவறு, காரணம் சரி.

விடை : காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

4. கூற்று : இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார்.

காரணம்: ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை.

  1. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  2. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
  3. கூற்று சரி, காரணம் தவறு.
  4. கூற்று தவறு, காரணம் சரி.

விடை : கூற்று சரி, காரணம் தவறு.

கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/எவை சரியானவை என்பதைக் கண்டறியவும்.

1. ரக்ஷாபந்தன் மரபு ராஜபுத்திரர்களுடையது.

2. வங்கப்பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ‘ரக்ஷாபந்தன்’ விழாவைத் தொடங்கினார்.

3. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.

  1. கூற்று 1 சரியானது.
  2. கூற்று 2 சரியானது.
  3. கூற்று 3 சரியானது.
  4. மேற்கண்ட அனைத்தும் சரியானவை

விடை : மேற்கண்ட அனைத்தும் சரியானவை

ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக.

மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர். இதனால் ஏற்பட்ட நீண்ட, நெடிய மும்முனைப் போட்டியில் இம்மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன.

2. ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக.

  • பிரதிகாரர்கள்
  • செளகான்கள்
  • சாளுககியர்கள்
  • பரமார்கள்

3. பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

கோபாலர்

4. தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • உமையத்துகளும்
  • அப்பாசித்துகளும்
  • தொடக்கக்கால கலீஃபத்துகளாகும்.

5. காசிம் தோற்கடித்த சிந்து மன்னரின் பெயரைக் குறிப்பிடுக.

தாகீர்

கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்.

1. சிந்துவை அரேபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்)

  1. அராபிய அறிஞர்கள் பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
  2. சமஸ்கிருத மொழியிலிருந்த வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பான பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
  3. 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக் கொண்டனர்.
  4. பூஜ்யத்தின் பயன்பாட்டை கற்றுக் கொண்டனர்.
  5. இந்தியர்களிடமிருந்து சதுரங்க விளையாட்டைக் கற்றுக் கொண்டனர்.

உயர் சிந்தனை வினா

1. மாமூது கஜினியின் படையெடுப்பிற்கும் முகமது கோரியின் படையெடுப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

மாமூது கஜினியின் படையெடுப்பு

வட இந்தியாவின் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களையும் நகரங்களையும் கொள்ளையடிப்பதே மாமூது கஜினியின் நோக்கமாகும்.

முகமது கோரியின் படையெடுப்பு

இந்தியாவைக் கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்வதே முகமது கோரியின் நோக்கமாகும்.

2. கண்டுபிடித்து நிரப்புக

முதலாம் தரெய்ன் போர் இரண்டாம் தரெய்ன் போர்
போர் நடைபெற்ற ஆண்டு  கி.பி 1191 கி.பி 1192
போருக்கான காரணங்கள் முகமது கோரி தனது பேரரசை விரிவாக்கம் செய்ய விரும்பினார். முகமது கோரி முதல் தரெய்ன் போரில் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்க விரும்பினார்.
யார் யாரைத் தோற்கடித்தார்கள்? பிருதிவிராஜ் முகமது கோரியைத் தோற்கடித்தார். முகமது கோரி பிருதிவிராஜைத் தோற்கடித்தார்.
விளைவு என்ன? முகமது கோரி தோற்கடிக்கப்பட்டார். பிருதிவிராஜ் தோற்கடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

மாணவர் செயல்பாடு 

இந்தியாவிற்கு இஸ்லாமியரின் வருகை

கி.பி. (பொ.ஆ) 1192

  • இரண்டாம் தரெய்ன் போர்

கி.பி. (பொ.ஆ) 1175

  • முகமதுகோரி முல்தானை கைப்பற்றுதல்

கி.பி. (பொ.ஆ) 1001

  • கஜினி மாமூது ஜெயபாலரைத் தோற்கடித்தல்
கி.பி. (பொ.ஆ) 1191

  • இரண்டாம் தரெய்ன் போர்

கி.பி. (பொ.ஆ) 1030

  • கஜினி மாமூது மரணமடைதல்

கி.பி. (பொ.ஆ) 712

  • முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தல்

கட்டக வினாக்கள்

மாமூது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட பஞ்சாபின் ஷாகி வம்ச அரசர்

விடை: ஜெயபாலர்

ராஜபுத்திர ஓவிய பாணிகள் ______ என்று அழைக்கப்படுகின்றன.

விடை: ராஜஸ்தானி

ராஜபுத்திரக் குலங்கள் எத்தனை இருந்தன?

விடை: 36

இந்தியாவில் முதல் இஸ்லாமியப் பேரரசை உருவாக்கியவர் யார்?

விடை: முகமது கோரி

டெல்லியின் முதல் சுல்தான் யார்?

விடை: குத்புதீன் ஐபக்

மெக்கா எங்குள்ளது?

விடை: அராபியா

 

சில பயனுள்ள பக்கங்கள்