பாடம் 3. தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

பாடம் 3. தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
சொற்களஞ்சியம்
| திருமண உறவுகள் மூலம் அரசியல் கூட்டு | Matrimonial alliances | political alliances through marriages |
| தடுப்பணை | Embankment | a wall or stone structure built to prevent a river flooding an area as well as to store its water |
| தீவிரமான | Ardent | passionate |
| அரசருக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னர் | Feudatory | a subordinate to another sovereign/ruler |
| புகலிடம் | Refuge | shelter |
| கருவூலம் | Repository | place in which things are stored |
சரியான விடையைத் தேர்வு செய்க
1. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
- விஜயாலயன்
- முதலாம் ராஜராஜன்
- முதலாம் ராஜேந்திரன்
- அதிராஜேந்திரன்
விடை : விஜயாலயன்
2. கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
- கடுங்கோன்
- வீரபாண்டியன்
- கூன்பாண்டியன்
- வரகுணன்
விடை : கடுங்கோன்
3. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
- மண்டலம்
- நாடு
- கூற்றம்
- ஊர்
விடை : ஊர்
4. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
- வீர ராஜேந்திரன்
- ராஜாதிராஜா
- அதி ராஜேந்திரன்
- இரண்டாம் ராஜாதிராஜா
விடை : அதி ராஜேந்திரன்
5. சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
- கண்ணாயிரம்
- உறையூர்
- காஞ்சிபுரம்
- தஞ்சாவூர்
விடை : தஞ்சாவூர்
6. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
- சோழமண்டலம்
- பாண்டிய நாடு
- கொங்குப்பகுதி
- மலைநாடு
விடை : பாண்டிய நாடு
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.
விடை : முதலாம் ராஜராஜன்
2. __________வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.
விடை : முதலாம் ராஜராஜன்
3. ___________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
விடை : ஜடில ராந்தக தநடுஞ்சடையன் (அ) முதலாம் வரகுணன்
4. பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________என அறியப்பட்டது.
விடை : எழுத்து மண்டபம்
பொருத்துக
| 1. மதுரை | உள்நாட்டு வணிகர் |
| 2. கங்கை கொண்ட சோழபுரம் | கடல்சார் வணிகர் |
| 3. அஞ்சு வண்ணத்தார் | சோழர்களின் தலைநகர் |
| 4. மணி – கிராமத்தார் | பாண்டியர்களின் தலைநகர் |
| Ans : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ | |
சரியா? தவறா?
1. டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.
விடை : சரி
2. ’கூடல் நகர் காவலன்’ என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும்.
விடை : சரி
3. சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
விடை : தவறு
4. முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.
விடை : சரி
5. சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.
விடை : சரி
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க: பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.
1. பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
1. அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
2. அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
3. அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
4. அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்.
- 1, 2 மற்றும் 3
- 2, 3 மற்றும் 4
- 1, 2 மற்றும் 4
- 1, 3 மற்றும் 4
விடை : 1, 2 மற்றும் 4
2. ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
1. அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.
2. அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.
3. அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.
4. அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.
- 1 மற்றும் 2
- 3 மற்றும் 4
- 1, 2 மற்றும் 4
- இவை அனைத்தும்
விடை : இவை அனைத்தும்
3. கூற்று : யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம்: நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று தவறு, காரணம் சரி.
- கூற்றும் காரணமும் தவறு.
விடை : காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
4. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
| 1. நாடு | 2. மண்டலம் | 3.ஊர் | 4. கூற்றம் |
| விடை | |||
| 1. மண்டலம் | 2. நாடு | 3. கூற்றம் | 4. ஊர் |
5. கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.
1. மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
2. உள்நாட்டுப்போர் தொடங்கியது.
3. மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
4. மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தரபாண்டியன்.
5. சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
6. மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
விடை :
4. மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தரபாண்டியன்.
1. மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
2. உள்நாட்டுப்போர் தொடங்கியது.
5. சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
6. மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்
3. மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணக் கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
2. சதுர்வேதி மங்கலம் என எது அழைக்கப்பட்டது?
அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் உருவாக்கிய பிராமணர் குடியிருப்புகளை மங்கலம் அல்லது சதுர்வேதிமங்கலம் எனப்பட்டன
3. காணிக்கடன் பற்றி எழுதுக.
சோழஅரசின் பொதுவருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது
கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
- சோழ அரசர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கியிருந்தனர். பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்ற சோழர்களின் உள்ளாட்சி நிர்வாகம் ஒரு மிகச் சிறந்த அம்சமாகும்.
- சோழ மன்னர்கள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பல வாய்க்கால்களை வெட்டினர்.
- அவர்கள் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய இடங்களில் கோயில்களைக் கட்டினர்.
- நடனம், இசை, நாடகம், கட்டக்கலை மற்றும் ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
- சோழப் பேரரசர்கள் கல்விப்பணிக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர். பல கல்லூரிகளை நிறுவினர்.
உயர் சிந்தனை வினா
சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள் இக்கூற்றை உறுதி செய்க.
- சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
- முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதக்கல்லூரி ஒன்றை நிறுவினார். அங்கு 14 ஆசிரியர்கள் மற்றும் 340 மாணவர்கள் இருந்தனர்.
- அங்கு வேதங்கள், இலக்கணம். உபநிடதங்கள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன.
- திருபுவனை, திருமுக்கூடல் ஆகிய இடங்களிலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
- பெரிய புராணம் மற்றும் கம்பராமாயணமும் சோழர் காலத்தவையேயாகும்.
மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)
நான் யார்?
1. மாலிக்கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு நானே பொறுப்பு.
சுந்தர பாண்டியன்
2. நான் பதினாறு மைல் நீளமுள்ள தடுப்பு அணையைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டினேன்.
முதலாம் இராஜேந்திரன்
3. நான் நீர் விநியோகம் செய்வதற்காகக் கட்டப்பட்டவன்.
வாய்கால்
4. நான் திருமுறையைத் தொகுத்தேன்.
நம்பியாண்டார் நம்பி
5. நான் ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகம். மார்க்கோபோலோ என்னை இருமுறை காணவந்தார்.
காயல்
மார்க்கோபோலோ
1. யார் அவர்?
வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பயணி
2. அவர் ஏன் முக்கியமானவர்?
மார்க்கோபோலோ ஒரு வெளிநாட்டு பயணி
3. பாண்டிய நாட்டைப் பற்றி அவருடைய அவதானிப்புகள் யாவை?
பாண்டிய அரசு “செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என மார்க்கோ போலா புகழாரம் சூட்டுகிறார்.
4. அவருடைய அவதானிப்புகள் முக்கியமானவை என ஏன் நீ கருதுகிறாய்?
வெளிநாட்டு சான்றுகளின் வரலாற்றுப் பதிவாக அவருடைய அவதானிப்புகள் முக்கியமானவை.
கட்டக வினாக்கள்
| சோழர்கால இலக்கியங்கள் இரண்டின் பெயர்களை எழுதுக. விடை: பெரிய புராணம், கம்பராமாயணம் | முத்துக்குளித்தலோடு தொடர்புடைய. துறைமுகம் எது? விடை: கொற்கை |
| காசு, களஞ்சு, பொன் என்பவை எதைக் குறிக்கின்றன? விடை: தங்க நாணயங்கள் | காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது? விடை: தூத்துக்குடி |
| முதலாம் பராந்தகனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய அரசன் யார்? விடை: இரண்டாம் ராஜ சிம்மன் | புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது? விடை: மதுரை |
சில பயனுள்ள பக்கங்கள்