பாடம்.4 டெல்லி சுல்தானியம்

பாடம்.4 டெல்லி சுல்தானியம்
சொற்களஞ்சியம்
| எக்கணமும் நடைபெற இருக்கிற / அச்சுறுத்தும் நிலையில் இருக்கிற | impending | about to happen |
| மூர்க்கமான/ அச்சம் தருகிற வகையில் | ferocious | cruel, violent |
| சதிகாரர்கள் | conspirator | someone who conspires secretly with other people to do something unlawful or harmful |
| புரவலர் | patron | supporter, promoter |
| கொள்ளையடி | plunder | to steal goods forcibly from a place especially during a war |
| கொள்முதல் | procurement | the process of getting supplies |
| பேரழிவு | disastrous | causing great damage |
| துண்டு துண்டாக | fragment | break into pieces |
| போலியான | counterfeit | fake |
| விலக்கு அளி | waiving | exempting |
சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. __________ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
- முகமதுகோரி
- ஜலாலுதீன்
- குத்புதீன் ஐபக்
- இல்துமிஷ்
விடை : பா குத்புதீன் ஐபக்
2. குத்புதீன் தனது தலைநகரை __________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
- லாகூர்
- புனே
- தௌலதாபாத்
- ஆக்ரா
விடை : லாகூர்
3. __________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
- ரஸ்ஸியா
- குத்புதீன் ஐபக்
- இல்துமிஷ்
- பால்பன்
விடை : இல்துமிஷ்
4. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் __________ ஆவார்.
- முகமதுபின் துக்ளக்
- பிரோஷ் ஷா துக்ளக்
- ஜலாலுதீன்
- கியாசுதீன்
விடை : கியாசுதீன்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் __________ ஆவார்.
விடை : கியாசுதீன் துக்ளக்
2. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து __________ க்கு மாற்றினார்
விடை : தேவகிரி
3. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை __________ ஆதரித்தார்.
விடை : பால்பன்
4. டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை __________ கட்டினார்.
விடை : குத்புதின் ஐபக்
5. இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் __________ ஆட்சியின் போது ஏற்பட்டது
விடை : பால்பன்
பொருத்துக:
| 1. துக்ரில்கான் | காராவின் ஆளுநர் |
| 2. அலாவுதீன் | ஜலாலுதீன் யாகுத் |
| 3. பகலூல் லோடி | வங்காள ஆளுநர் |
| 4. ரஸ்ஸியா | சிர்கந்தின் ஆளுநர் |
| Ans : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ | |
சரியா? தவறா?
1. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்.
விடை : தவறு
2. ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.
விடை : சரி
3. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.
விடை : தவறு
4. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்.
விடை : சரி
கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக. பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.
கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
- காரணமும் கூற்றும் தவறானவை.
- கூற்று தவறு; காரணம் சரி.
விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
சரியான இணையைத் தேர்வு செய்க:
- ஹெய்சாளர் – தேவகிரி
- யாதவர் – துவாரசமுத்திரம்
- காகதியர் – வாராங்கல்
- பல்லவர் – மதுர
விடை : காகதியர் – வாராங்கல்
தவறான கூற்றினை / கூற்றுகளைக் கண்டறியவும்
- 1206இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்
- ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்
- மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்
- இப்ராகிம் லோடி 1526இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை : ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்
கீழ்க்காண்பனவற்றிற்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. முறையான ஊதியத்திற்கு மாற்றாக ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயரென்ன?
இக்தா
2. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
சிக்கந்தர் லோடி
3. கி.பி.(பொ.ஆ)12ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?
முகமது கோரி
4. சகல்கானி குறித்து சிறுகுறிப்பு வரைக.
மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு “சகல்கானி” அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
5. அலாவுதீன் கில்ஜி எவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்?
- ஜலால்-உத்-தின் மருமகனும், காராவின் ஆளுநருமான அலாவுதீன் தென் பிராந்தியங்களை ஆக்கிரமித்து கொள்ளையடித்து பெரும் செல்வத்துடன் திரும்பினார்.
- அவர் ஆட்சியாளரான ஜலால்-உத்-தின் பிரபுக்கள் மற்றும் தளபதிகளின் ஆதரவால் கொல்லப்பட்டார் மற்றும் 1296 இல் தன்னை டெல்லி சுல்தான் என்று அறிவித்து டெல்லி சுல்தானை பலப்படுத்தினார்.
6. பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக
- பிரோஷ் ஷா துக்ளக்க் ஏழை முஸ்லிம்களுக்காக தொண்டு நிறுவனங்களை உருவாக்கினார்.
- மசூதிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டினார்.
- அவர் பல மனிதாபிமான நடவடிக்கைகளை பின்பற்றினார்.
- மனிதாபிமானமற்ற தண்டனைகளையும் அங்கீகரிக்கப்படாத வரிகளையும் அவர் தடை செய்தார்.
- பல கால்வாய்கள், தோட்டங்கள் மற்றும் நகரங்களை நிர்மாணிப்பதன் மூலம் விவசாயத்தை ஊக்குவித்தார்.
கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்.
1398 ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
- தைமூர் சாமர்கண்ட் பகுதியை ஆட்சி செய்தார்.
- இவர் வட இந்தியாவுக்கு மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
- 1938 ல் இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்தார்.
- டெல்லி மற்றும் பஞ்சாப் பகுதிகளைக் கொள்ளையடித்தார்.
- தங்கம், வெள்ளி, நகைகள் எனப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து எடுத்துச் சென்றார்.
- திரும்பிச் செல்லும் போது தச்சு வேலை செய்வோர் மற்றும் கட்டடக் கலைஞர்கள் போன்ற இந்தியக் கலைஞர்களை சாமர்க்கண்டிற்கு அழைத்துச் சென்றார்.
உயர் சிந்தனை வினா
முகமது பின் துக்ளக்கை டெல்லியின் சுல்தானாக நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
- முகமது பின் துக்ளக் மிகவும் கற்றறிந்த மனிதர். ஆனாலும் அவர் குரூரம் நிறைந்தவராய் இருந்தார்.
- இந்தியா முழுவதையும் தனது நாடாக்க வேண்டும் என கனவு கண்டார்.
- தலைநகரை மாற்றிய அவரது திட்டம் தோல்வி கண்டது.
- துக்ளக் நிலவரியை உயர்த்தியதோடு, வரியை பணமாகவே செலுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார். இதுவும் மக்களுக்கு பெரும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியது.
- முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்துமே சிறந்தவைகளாகும். ஆனால் சூழ்நிலையை அறிந்து அவைகள் நடைமுறைப் படுத்தப் படவில்லை. எனவே அவரது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன,
- அவரது அவசர கொள்கை முடிவுகளும், சில நடைமுறைப்படுத்த இயலாத திட்டங்களும் துக்ளக் மரபின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
மாணவர் செயல்பாடு
பொருத்துக
| தந்தை | மகன் |
| 1. குத்புதீன் ஐபக் | ருக்குதீன் பிரோஷ் |
| 2. இல்துமிஷ் | கைகுபாத் |
| 3. பால்பன் | அலாவுதீன் |
| கியாசுதீன் | சிக்கந்தர் லோடி |
| பகலூல் லோடி | ஆரம் ஷா |
| விடை: 1 – e, 2 – a, 3 – b, 4 – c, 5 – d | |
சில பயனுள்ள பக்கங்கள்