7th Std Social Science Term 1 Solution | Lesson.4 டெல்லி சுல்தானியம்

பாடம்.4 டெல்லி சுல்தானியம்

டெல்லி சுல்தானியம் - பாட விடைகள்

பாடம்.4 டெல்லி சுல்தானியம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

 1. முகமதுகோரி
 2. ஜலாலுதீன்
 3. குத்புதீன் ஐபக்
 4. இல்துமிஷ்

விடை : பா குத்புதீன் ஐபக்

2. குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.

 1. லாகூர்
 2.  புனே
 3. தௌலதாபாத்
 4. ஆக்ரா

விடை : லாகூர்

3. ______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.

 1. ரஸ்ஸியா
 2. குத்புதீன் ஐபக்
 3. இல்துமிஷ்
 4. பால்பன்

விடை : இல்துமிஷ்

4. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.

 1. முகமதுபின் துக்ளக்
 2. பிரோஷ் ஷா துக்ளக்
 3. ஜலாலுதீன்
 4. கியாசுதீன்

விடை : கியாசுதீன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ___________ ஆவார்.

விடை : கியாசுதீன் துக்ளக்

2. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்

விடை : தேவகிரி

3. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை ___________ ஆதரித்தார்.

விடை : பால்பன்

4. டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.

விடை : குத்புதின் ஐசக்

5. இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் ___________ ஆட்சியின் போது ஏற்பட்டது

விடை : பால்பன்

III. பொருத்துக:

1. துக்ரில்கான்காராவின் ஆளுநர்
2. அலாவுதீன்ஜலாலுதீன் யாகுத்
3. பகலூல் லோடிவங்காள ஆளுநர்
4. ரஸ்ஸியா சிர்கந்தின் ஆளுநர்
Ans : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

IV. சரியா? தவறா?

1. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்.

விடை : தவறு

2. ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.

விடை : சரி

3. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.

விடை : தவறு

4. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்.

விடை : சரி

V. அ. கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக. பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.

கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.

காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.

 1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
 2. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
 3. காரணமும் கூற்றும் தவறானவை.
 4. கூற்று தவறு; காரணம் சரி.

விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.

ஆ. சரியான இணையைத் தேர்வு செய்க: 

 1. ஹெய்சாளர் – தேவகிரி
 2. யாதவர் – துவாரசமுத்திரம்
 3. காகதியர் – வாராங்கல்
 4. பல்லவர் – மதுர

விடை : காகதியர் – வாராங்கல்

இ) தவறான கூற்றினை / கூற்றுகளைக் கண்டறியவும்

1. 1206இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்

2. ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்

3. மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்

4. இப்ராகிம் லோடி 1526இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.

விடை : ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு  ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. முறையான ஊதியத்திற்கு மாற்றாக ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட
நிலத்தின் பெயரென்ன?

“இக்தா”

2. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?

சிக்கந்தர் லோடி

3. கி.பி.(பொ.ஆ)12ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?

முகமது கோரி

4. ‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.

மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு “சகல்கானி” அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.

5. அலாவுதீன் கில்ஜி எவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்?

 • ஜலால்-உத்-தின் மருமகனும், காராவின் ஆளுநருமான அலாவுதீன் தென் பிராந்தியங்களை ஆக்கிரமித்து கொள்ளையடித்து பெரும் செல்வத்துடன் திரும்பினார்.
 • அவர் ஆட்சியாளரான ஜலால்-உத்-தின் பிரபுக்கள் மற்றும் தளபதிகளின் ஆதரவால் கொல்லப்பட்டார் மற்றும் 1296 இல் தன்னை டெல்லி சுல்தான் என்று அறிவித்து டெல்லி சுல்தானை பலப்படுத்தினார்.

6. பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக

 • பிரோஷ் ஷா துக்ளக்க் ஏழை முஸ்லிம்களுக்காக தொண்டு நிறுவனங்களை உருவாக்கினார்.
 • மசூதிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டினார்.
 • அவர் பல மனிதாபிமான நடவடிக்கைகளை பின்பற்றினார்.
 • மனிதாபிமானமற்ற தண்டனைகளையும் அங்கீகரிக்கப்படாத வரிகளையும் அவர் தடை செய்தார்.
 • பல கால்வாய்கள், தோட்டங்கள் மற்றும் நகரங்களை நிர்மாணிப்பதன் மூலம் விவசாயத்தை ஊக்குவித்தார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்