7th Std Social Science Term 1 Solution | Lesson.7 மக்கள் தொகையும் குடியிருப்புகளும்

பாடம்.7 மக்கள் தொகையும் குடியிருப்புகளும்

மக்கள் தொகையும் குடியிருப்புகளும் - பாட விடைகள்

பாடம்.7 மக்கள் தொகையும் குடியிருப்புகளும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. காக்கசாய்டு இனத்தை __________ என்றும் அழைக்கலாம்

  1. ஐரோப்பியர்கள்
  2. நீக்ரோய்டுகள்
  3. மங்கோலியர்கள்
  4. ஆஸ்திரேலியர்கள்

விடை : ஐரோப்பியர்கள்

2. ______________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்

  1. காக்கசாய்டு
  2. நீக்ரோக்கள்
    இ) மங்கோலியர்கள்
    ஈ) ஆஸ்திரேலியர்கள்

விடை : மங்கோலியர்கள்

3. இந்தியாவின் ஆட்சி மொழி ______________ ஆகும்.

  1. மராத்தி
  2. தமிழ்
  3. ஆங்கிலம்
  4. இந்தி

விடை : இந்தி

4. கிராமப்புறக் குடியிருப்புகள் _________ அருகில் அமைந்துள்ளது

  1. நீர்நிலைகள்
  2. மலைப் பகுதிகள்
  3. கடலோரப் பகுதிகள்
  4. பாலைவனப் பகுதிகள்

விடை : நீர்நிலைகள்

5. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.

1) நகரம்2) மீப்பெருநகரம்
3) தலைநகரம்4) இணைந்த நகரம்
  1. 4, 1, 3, 2
  2. 1, 3, 4, 2
  3. 2, 1, 3, 4
  4. 3, 1, 2, 4

விடை : 4, 1, 3, 2

6. உலக மக்கள் தொகை தினம் ————- ஆகும்

  1. செப்டம்பர் 1
  2. ஜீன் 11
  3. ஜீலை 11
  4.  டிசம்பர் 2

விடை : ஜீலை 11

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தென் ஆப்பிரிக்காவின் _________ பாலைவனத்தில் முக்கியமாக புஷ்மென்கள் காணப்படுகிறது.

விடை : கலாஹாரி

2. மொழியின் பங்கு என்பது _____________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.

விடை : மொழி

3. ______________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்

விடை : நகர்புறக்

4. ______________ நகரங்கள் பொதுவாக கிராம நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்

விடை : செயற்கைக்கோள்

5. ______________ குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்

விடை : யாத்திரை

III. A. பொருத்துக:

1. காக்கசாய்டுஆசிய அமெரிக்கர்கள்
2. நீக்ராய்டுஆஸ்திரேலியர்கள்
3. மங்கலாய்டுஐரோப்பியர்கள்
4. ஆஸ்ட்ரோலாய்டுஆப்பிரிக்கர்கள்
Ans : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

B. பொருத்துக:

1. சட்லஜ் கங்கைச் சமவெளிசிதறிய குடியிருப்பு
2. நீலகிரிநட்சத்திர வடிவக் குடியிருப்பு
3. தென் இந்தியாசெவ்வக வடிவ அமைப்பு
4. கடற்கரைகுழுமிய குடியிருப்ப
5. ஹரியானாவட்டக் குடியிருப்பு
Ans : 1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஈ, 5 – ஆ

IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (√ ) செய்யவும்

1. கூற்று (அ) : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன

காரணம் (க)  : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.

  1. கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக ாக விளக்குகிறது
  2. கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
  3. கூற்றும் தவறு காரணம் சரி
  4. கூற்றும் காரணமும் தவறானவை.

விடை : கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

2. கூற்று (அ) : பழனி – முருகன் கோவில். தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு

காரணம் (க) : இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.

  1. காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்குகிறது
  2. காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்கவில்லை
  3. கூற்றும் தவறு காரணம் சரி
  4. கூற்றும் காரணமும் தவறானவை.

விடை : காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்கவில்லை

V. பொருந்தாததை வட்டமிடுக

1. மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்

விடை : வங்கி அலுவல்

2. இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை

விடை : கங்கை

3. சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்

விடை : காஞ்சிபுரம்

VI. கீழ்க்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும

1. இனங்களின் வகைகள் யாவை?

  • காக்கசாய்டு (ஐரோப்பியர்கள்)
  • நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்)
  • மங்கோலாய்டு (ஆசியர்கள்)
  • ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)

2. மொழி என்றால் என்ன?

சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும்.

ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ மொழி பயன்படுத்தப்படுகிறது.

3. மதத்தின் வகைகளை கூறுக

உலகளாவிய மதங்கள்

  • கிறிஸ்துவம்
  • இஸ்லாம்
  • புத்த மதம்

மனித இனப்பிரிவு மதங்கள்

  • ஜூடோயிசம்
  • இந்துமதம்
  • ஜப்பானிய ஷிண்டோயிசம்

நாடோடிகள் (அல்லது) பாரம்பரிய மதங்கள்

  • அனிமிஸம்
  • ஷாமானிஸம்
  • ஷாமன்

4. குடியிருப்பு வரையறு

குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும்.

அங்கு விவசாயம், வாணிபம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.

5. நகர்ப்புற குடியிருப்புகள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?

நகர்ப்புறத்திற்கான கூற்று (அல்லது) வரையறை ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் வேறுபடும்.

பொதுவான சில வகைபாடுகளாவன.

  • மக்கள் தொகையின் அளவு
  • தொழில் அமைப்பு
  • நிர்வாகம

6. சிறப்புப் பொருளாதார நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக

நகர்ப்புறப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாக கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே சிறப்பு பொருளாதார நகரமாகும்.

VII. வேறுபடுத்துக 

1. மொழி மற்றும் மதம்

மொழி

  • சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும்.
  • ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ மொழி பயன்படுத்தப்படுகிறது.
  • அரசியல், பொருளாதார சமூக மற்றும் மத செயல்பாடுகளின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள மொழி வழி வகுக்கிறது.

மதம்

  • மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் கொண்டதாகும்.
  • இது மனிதனை ஒரு மனித சமுதாயத்திற்குள் கொண்டுவரும்.
  • மதம் ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வுப் புள்ளியின் அடையாளமாகவும் திகழ்கிறது.

2. நீக்ரோக்கள் மற்றும் மங்கோலியர்கள்

நீக்ரோக்கள்

  • நீக்ராய்டு இன மக்கள் கருமைநிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான, முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்களாவார்கள்.
  • இவர்கள் ஆப்பிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

மங்கோலியர்கள்

  • மங்கோலியர்கள் பொதுவாக ஆசியஆப்பிரிக்க இனத்தர்களாவர். இவர்கள் வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத் தோல், நீளமானமுடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும் மத்தியமான மூக்கு உடையவர்களாவார்கள்.
  • இவர்கள் ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.

3. பெருநகரம் மற்றும் நகரம்

பெருநகரம்

  • இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் அதிகமானோர் உள்ள இடங்களையே மாநகரம் என அழைக்கிறோம்.
  • பொதுவாக ஒரு குறிப்பிட்ட சிறிய நகரத்திலிருந்து தனித்த நகர்ப்புறங்களுக்கு பெருநகரம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

நகரம்

  • நகர்ப்புறக் குடியிருப்பின் மக்கள் தொகையில், குறைந்த பட்ச மக்கள் தொகையான 5000க்கும் மேலான மக்கள் இருக்கும் இடத்தையே நகரம் என்கிறோம்.
  • நகரங்கள் செயல்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் நிர்வாகம், இராணுவம் மற்றும் கல்வி என பல நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

4. நகர்ப்புற குடியிருப்பு, மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு

நகர்ப்புற குடியிருப்பு

  • நகரம் நகரங்கள் மற்றும் நகரங்களுடன் தொடர்புடையது.
  • மக்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

கிராமப்புறக் குடியிருப்பு

  • நதி மற்றும் ஏரி போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் அமைந்துள்ள கிராமப்புற குடியிருப்புகள்
  • கிராமப்புற குடியேற்றங்கள் விவசாயத்துடன் தொடர்புடையவை.

IX. பத்தியளவில் விடையளி 

1. நான்கு முக்கிய இனங்களைப் பற்றி விவரிக்கவும்

உலகின் முக்கிய மனித இனங்கள்

  • காக்கசாய்டு (ஐரோப்பியர்கள்)
  • நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்)
  • மங்கோலாய்டு (ஆசியர்கள்)
  • ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)

காக்கசாய்டு

  • காக்கசாய்டு என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள், இவ்வின மக்கள் வெள்ளை நிறத்தோலும், அடர்பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், நீளமான மூக்கும் உடையவர்களாவர்.
  • இவர்கள் யூரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.

நீக்ராய்டு

  • நீக்ராய்டு இன மக்கள் கருமைநிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான, முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்களாவார்கள்.
  • இவர்கள் ஆப்பிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

மங்கோலாய்டு

  • மங்கோலியர்கள் பொதுவாக ஆசியஆப்பிரிக்க இனத்தர்களாவர்.
  • இவர்கள் வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத் தோல், நீளமானமுடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும் மத்தியமான மூக்கு உடையவர்களாவார்கள்.
  • இவர்கள் ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.

ஆஸ்ட்ரலாய்டு

  • ஆஸ்திரேலியர்கள் அகலமான மூக்கு, சுருள்முடி, கருப்புநிறத்தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்களாக குட்டையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.
  • இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வாழ்ந்து வருகிறார்கள்

2. கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?

  • நிலப்பரப்பின் இயல்பு.
  • உள்ளூர் வானிலை நிலை.
  • மண் மற்றும் நீர் ஆதாரங்கள்.
  • சமூக அமைப்பு.
  • பொருளாதார நிலை.

 

சில பயனுள்ள பக்கங்கள்