7th Std Social Science Term 1 Solution | Lesson.8 சமத்துவம்

பாடம்.8 சமத்துவம்

சமத்துவம் - பாட விடைகள்

பாடம்.8 சமத்துவம்

கலைச்சொற்கள்

சமத்துவம்Equalityabsence of any privilege to anybody
சட்டத்தின் ஆட்சிRule of lawrule based on law
முடியாட்சிMonarchygovernment by a single person
சலுகைகள்Privilegesspecial concessions
பாகுபாடுDiscriminationdifference

சரியான விடையைத் தேர்வு செய்க

1. பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?

  1. பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
  2. தேர்தலில் போட்டியிடும் உரிமை
  3. அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
  4. பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

விடை: பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

2. கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?

  1. அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.
  2. இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
  3. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
  4. சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு

விடை: அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.

3. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது __________

  1. 21
  2. 18
  3. 25
  4. 31

விடை: 18

4. சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

  1. இயற்கை சமத்துவமின்மை
  2. மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
  3. பொருளாதார சமத்துவமின்மை
  4. பாலின சமத்துவமின்மை

விடை: மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

5. சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு

  1. 1981
  2. 1971
  3. 1991
  4. 1961

விடை: 1971

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. குடிமை சமத்துவம் _________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.

விடை: சட்டத்திற்கு

2. _________ முதல் _________ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.

விடை: 14 முதல் 18

3. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ___________ உரிமை ஆகும்.

விடை: அடிப்படை சமத்துவம்

4. சமத்துவம் என்பது முதலாவதாக ____________ இல்லாததாகும்.

விடை: சமூக சிறப்புரிமை

குறுகிய விடையளி

1. சமத்துவம் என்றால் என்ன?

சமத்துவம் என்பது ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.

2. பாலின சமத்துவம் ஏன் தேவையானது?

  • மனித இனங்களில் ஆண் பெண் இருவரும் தமது தனிப்பட்ட திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
  • தங்களது விருப்பங்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி ஏற்படுத்தியும் கொள்ளலாம்.
  • பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை மேலும் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் பலவீனமானவர்கள் என்பதோடு சமூகத்தில் ஆண்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் அவர்களை வைத்துள்ளனர்.
  • பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

3. குடிமை சமத்துவம் என்றால் என்ன?

அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும்.

விரிவான விடையளி

1. சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.

  • சமத்துவம் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழி நடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும்.
  • சமத்துவம் என்ற கோட்பாடு மனித இனம் அதனுடைய சாதி, நிறம், பால், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமான மதிப்புள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அறைகூவுகிறது.
  • மக்களாட்சிக்கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை நீதியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப் படும்போது மட்டுமே பொருளுடயவையாக இருக்கும்.

2. அரசியல் சமத்துவம் என்றால் என்ன?

இந்தியா உள்ளிட்ட அனைத்து மக்களாட்சி நாடுகளும் அவற்றின் குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கின்றன.

அவை பின்வருமாறு:

  1. வாக்களிக்கும் உரிமை
  2. பொது அலுவலகத்தில் பங்குகொள்ளும் உரிமை
  3. அரசை விமர்சனம் செய்யும் உரிமை
  • குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான
    வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும்
  • இந்த உரிமைகள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்கின்றது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் 1971 ஆம் ஆண்டில் தான்பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
  • இந்தியாவில் 25 வயது பூர்த்தி அடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம். அரசை விமர்சிக்கலாம் என்ற உரிமை ஒரு முக்கியமான உரிமை என்பதோடு மக்கள் தங்களது மாறுபட்ட கருத்துக்களை பல்வேறு வகையிலும் தெரிவிக்கலாம்.
  • நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.

3. இந்திய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது?

உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன் மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன. இதேபோன்று இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14-18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 இல் மேலும் வலிமை படுத்தப்பட்டுள்ளது.

  • சட்டப்பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 15 பாகுபாட்டை தடை செய்கிறது.
  • சட்டப்பிரிவு 16 பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 17 தீண்டாமையை ஒழிக்கிறது.
  • சட்டப்பிரிவு 18 பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்