பாடம்.1 விஜயநகர், பாமினி அரசுகள்

பாடம்.1 விஜயநகர், பாமினி அரசுகள்
சொற்களஞ்சியம்
| முரண்பாடு / மோதல் | conflict | a serious disagreement |
| ஏறுவரிசையில் | ascending | leading upwards |
| நிகழ்ச்சிக்குப்பிறகு | subsequently | after a particular thing |
| அலங்கரிக்கப்ட்ட | adorned | decorated |
| கொள்ளையடிப்பு | pillaging | robbing, using violence, especially in wartime |
| சதிதிட்டம் / சூழச்சி | intrigue | conspire, plot |
| முதல் குழந்தைக்கு வாரிசுரிமை | primogeniture | the right of succession belonging to the first child |
| கம்பீரம் / சிறப்பு வாய்ந்த | splendour | magnificent |
| செழிக்கும் | flourishing | growing successfully |
| முக்கியத்துவம் | prominence | the state of being important |
| உத்திரவாதம் | indemnity | guarantee, suret |
சரியான விடையைத் தேர்வு செய்க
1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
- புக்கர்
- தேவராயா –II
- ஹரிஹரர்-II
- கிருஷ்ண தேவராயர்
விடை: தேவராயா –II
2. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
- யானை
- குதிரை
- பசு
- மான்
விடை: குதிரை
3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
- ராமராயர்
- திருமலதேவராயா
- இரண்டாம் தேவராயர்
- இரண்டாம் விருபாக்சராயர்
விடை: இரண்டாம் விருபாக்சராயர்
4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
- சாளுவ நரசிம்மர்
- இரண்டாம் தேவராயர்
- குமார கம்பண்ணா
- திருமலைதேவராயர்
விடை : குமார கம்பண்ணா
5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
- அலாவுதீன் ஹசன்விரா
- முகம்மது – I
- சுல்தான் பெரோஸ்
- முஜாஹித்
விடை: சுல்தான் பெரோஸ்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் ________
விடை: பெனு கொண்டா
2. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிட்டப்பட்ட நாணயங்களுக்கு _______ என்று பெயர்
விடை: வராகன்
3. மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் _________ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
விடை: பாரசீக
4. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை ________ கவனித்தார்.
விடை: கெளடா
பொருத்துக
| 1. விஜயநகரா | ஒடிசாவின் ஆட்சியாளர் |
| 2. பிரதாபருத்ரா | அஷ்டதிக்கஜம் |
| 3. கிருஷ்ண தேவராயா | பாண்டுரங்க மகாமத்தியம் |
| 4. அப்துர் ரசாக் | வெற்றியின் நகரம் |
| 5. தெனாலிராமகிருஷ்ணா | பாரசீக சிற்ப கலைஞர் |
| விடை: 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – இ | |
கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை டிக் ( √ ) இட்டுக் காட்டவும்.
கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது
காரணம்: விஜயநகர இராணுவம் பீரங்கிபடை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
- காரணம் மற்றும் கூற்று தவறு
- காரணம் மற்றும் கூற்று சரி
விடை: காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. தவறான இணையைக் கண்டறியவும்
- பட்டு – சீனா
- வாசனைப் பொருட்கள் – அரேபியா
- விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா
- மதுரா விஜயம் – கங்கா தேவி
விடை: வாசனைப் பொருட்கள் – அரேபியா
3. பொருந்தாததைக் கண்டுபிடி:
| அ) ஹரிஹரர் –II | ஆ) மகமுது –I |
| இ) கிருஷ்ண தேவராயர் | ஈ) தேவராயா – I |
விடை: மகமுது –I
4. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டு காட்டவும்
I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
II. விஜயநகர, பாமினிஅரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணா- துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணா- கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.
III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதமஅமைச்சராக பணியாற்றினார்.
- I மற்றும் II சரி
- I, II மற்றும் III சரி
- II, III , மற்றும் IV சரி
- III , மற்றும் IV சரி
விடை: I மற்றும் II சரி
சரியா? தவறா?
1. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள்
விடை: தவறு
2. இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்
விடை: தவறு
3. அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்
விடை: சரி
4. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
விடை: சரி
5. பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன.
விடை: சரி
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்
1. விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.
- சங்கம (1336-1485)
- சாளுவ (1485-1505)
- துளுவ (1505-1570)
- ஆரவீடு (1570 -1646)
2. தலைக்கோட்டைப் போரைப் பற்றி எழுதுக
விஜயநகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர். எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565 இல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர்கொண்டன. ராக்சச தங்கடி
(தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது.
3. விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.
பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்), நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்), கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது. கிராமமே நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபை என்ற அமைப்பிருந்தது. கிராமம் தொடர்பான விடயங்களைக் கெளடா என்றழைக்கப்பட்ட கிராமத்தலைவர் நிர்வகித்தார். பேரரசின் இராணுவம் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது.
4. தக்காண சுல்தானத்தின் ஐந்து சுதந்திர அரசுகள் யாவை?
பீஜப்பூர், அகமது நகர், கோல்கொண்டா, பீடார், பீரார
5. அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றியபங்களிப்பைக் கூறுக.
அலாவுதீன் ஹசன் ஷா அரசரான பின்னர் தமது மகன்கள் கல்வி கற்பதற்காக ஒரு பள்ளியை நிறுவுவதில் சிறப்பு கவனம் செலுத்தினார். பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்வீரர்களுக்கான கலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
விரிவாக விடையளிக்க
கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக
- கிருஷ்ணதேவராயர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்கினார். இதுவே அவரது முதல் மற்றும் தலையாய பணியாக இருந்தது.
- பின்னர் குல்பர்காவை கைப்பற்றினார்.
- சிறைவைக்கப்பட்டிருந்த பாமினி சுல்தான் முகமது ஷா-வை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர்த்தினார்.
- ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிராதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார். பின் சமாதானத்தை விரும்புவதாகவும், தன் மகளை மணமுடித்து தருவதாகவும் கூறிய பிரதாபருத்திரனின் பகுதிகளை மீண்டும் அவருக்கே வழங்கினார்.
- போர்ச்சுக்கீசிய வீரர்களை உதவியோடு கோல்கொண்டா சுல்தானை தோற்கடித்தார். ந பிஜப்பூர் சுல்தானிடமிந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்
- மழைநீரைச் சேமிக்க நீர்ப்பாசன குளங்கள் நீர்த்தேக்கங்கள் உருவாக்கினார்.
- தலைநகரில் கிருஷ்ணசாமி கோயில், வித்தலசாமி ராமசாமி போன்ற புகழ்பெற்ற கோவில்களையும் வலிமைமிக்க கோட்டைகளையும் கட்டினார்.
- போர்கள் மூலம் பெற்ற செல்வங்களைக் கொண்டு கோபுரங்கள் நிறுவினர். அக்கோபுரங்கள் ராயபுரம் என அவா பெயருக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் அழைக்கப்பட்டது.
- பெரும் படையை நிறுவிய அவர் அரேபியா ஈரானிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்தார்.
- போர்ச்சுக்கீசிய, அராபிய வணிகர்களுடன் கொண்டிருந்த நட்புறவால் நாட்டின் வருமானம் அதிகரித்தது.
கட்டக வினாக்கள்
| 180 வருடத்திற்கு மேலாக ஆட்சிபுரிந்த 18 முடியரசுகளைப் பட்டியலிடுக விடை: பாமினி அரசுகள் | கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பாமினி சுல்தானைக் குறிப்பிடுக விடை: முகமது ஷா |
| கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய புத்தகத்தைக் கூறுக விடை: ஜாம்பவதி கல்யாணம் | ஹசன் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்? விடை: குல்பர்கா |
சில பயனுள்ள பக்கங்கள்