பாடம்.2 முகலாயப் பேரரசு

பாடம்.2 முகலாயப் பேரரசு
சொற்களஞ்சியம்
| போர்ப்பயணம் | expedition | a journey undertaken with the purpose of war |
| நீண்ட | prolonged | lengthy |
| அடக்குதல் | subdued | conquered |
| கலக்கார | rebellious | showing a desire to resist authority |
| மதிப்பளித்தல் | bestowed | awarded |
| பாரம்பரிய | hereditary | inheritance of a title, office, or right |
| நீடித்த / நீடித்த காலம் | Enduring | lasting over a period of time |
சரியான விடையைத் தேர்வு செய்க
1. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
- ஹூமாயூன்
- பாபர்
- ஜஹாங்கீர்
- அக்பர்
விடை: பாபர்
2. அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?
- பானிபட்
- செளசா
- ஹால்டிகட்
- கன்னோசி
விடை: ஹால்டிகட்
3. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
- பாபர்
- ஹிமாயூன்
- இப்ராஹிம் லோடி
- ஆலம்கான்
விடை: ஹிமாயூன்
4. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
- ஷெர்ஷா
- அக்பர்
- ஜஹாங்கீர்
- ஷாஜஷான்
விடை : அக்பர்
5. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
- பீர்பால்
- ராஜா பகவன்தாஸ்
- இராஜ தோடர்மால்
- இராஜா மான்சிங்
விடை: இராஜ தோடர்மால்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர் ________ ஆகும்
விடை: சேத்தக்
2. பதேபூர் சிக்ரியிலுள்ள ________ அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்
விடை: இபாதத் கானா
3. அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி ________
விடை: சலீம் சிஸ்டி
4. ஜப்தி என்னும் முறை ________ ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.
விடை: ஷாஜகான்
5. ________ வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
விடை: சுயயூர்கள் என்றழைக்கப்பட்ட
பொருத்துக
| 1. பாபர் | அகமது நகர் |
| 2. துர்க்காவதி | அஷ்டதிக்கஜம் |
| 3. ராணி சந்த் பீபி | அக்பர் |
| 4. தீன்-இலாஹி | சந்தேரி |
| 5. இராஜா மான்சிங் | மத்திய மாகாணம் |
| விடை: 1 – ஈ, 2 – உ, 3 – அ, 4 – இ, 5 – ஆ | |
சரியா? தவறா?
1. பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்.
விடை: சரி
2. ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்
விடை: தவறு
3. ஔரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்.
விடை: தவறு
4. தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜூனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
விடை: சரி
5. ஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.
விடை: தவறு
கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை டிக் ( √ ) இட்டுக் காட்டவும்.
1. கூற்று : ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்
காரணம் : ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
- காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
- கூற்று தவறு காரணம் சரி
- கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை: காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. கூற்று : ஔரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது
காரணம் : ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
- கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
- கூற்று தவறு, காரணம் தவறு
- கூற்று மற்றும் காரணம் தவறு
விடை: காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
3. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.
II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து
செய்தார்
III. ஔரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்
IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
- I) II) மற்றும் III) சரி
- II) III) மற்றும் IV) சரி
- I) III) மற்றும் IV) சரி
- II) III) IV) மற்றும் I) சரி
விடை: I) III) மற்றும் IV) சரி
4. காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக
| i) கன்வா போர் | ii) செளசா போர் | iii) கன்னோசி போர் | iv) சந்தேரி போர் |
| விடை: | |||
| i) கன்வா போர் | ii) சந்தேரி போர் | iii) செளசா போர் | iv) கன்னோசி போர் |
5. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக
| i) சர்க்கார் | ii) பர்கானா | iii) சுபா |
| விடை: | ||
| i) சுபா | ii) பர்கானா | iii) சர்க்கார் |
பொருத்துக
| தந்தை | மகன் |
| 1. அக்பர் | தில்வார் கான் |
| 2. தௌலத்கான் லோடி | ராணாபிரதாப் |
| 3. ஹசன் சூரி | ஹிமாயூன் |
| 4. பாபர் | ஷெர்ஷா |
| 5. உதயசிங் | ஜஹாங்கீர் |
| விடை: 1 – உ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ | |
குறுகிய வினா
1. 1526இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.
1524 வரையிலும் பஞ்சாப்பைக் கடந்து அவர் வேறு எதற்கும் ஆசைப்படவில்லை. அச்சமயத்தில் மிகச் சிறந்த வாய்ப்பு தேடிவந்தது. தௌலத்கான் லோடியின் மகன் திலாவார்கான், டெல்லிசுல்தானின் மாமனார் ஆலம்கான் ஆகிய இருவரும் காபூல் வந்தனர். டெல்லி சுல்தான் இப்ராகிம் லோடியைப் பதவியை விட்டு நீக்க, பாபரின் உதவி கேட்டே அவர்கள் வந்திருந்தனர். 1526 இல் நடைபெற்ற புகழ்பெற்ற முதலாம் பானிப்பட் போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றினார்.
2. ஹிமாயூன் 1555இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக
ஷெர்ஷா 1539 இல் சௌசா என்ற இடத்திலும், 1540 இல் கன்னோஜிலும் ஹூமாயூனைத் தோற்கடித்தார். அரியணையிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஹூமாயூன் ஈரானுக்குத் தப்பியோட நேர்ந்தது. பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தைச் சேர்ந்த ஷா-தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555 டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.
3. மன்சப்தாரி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக
மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார். இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரேபணியாக மாற்றப்பட்டன. இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மன்சப் (படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது. அப்படியான தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் ஆவார். மன்சப்தார் சாட், சவார் எனும் இரு விடயங்களைச் சார்ந்திருந்தன
கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
1. முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி
- அக்பரின் ஆட்சியின்போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.
- அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் அறிமுகம் செய்த முறையை பின்பற்றினார். அம்முறையை மேலும் சீர் செய்தார்.
- தோடர்மாலின் ஜப்த் முறை வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின்படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன.
- பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.
- முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் பெயரிட்டு செயல்படுத்தினார். இந்நிலவுரிமை ஒப்பந்த காமுறை டெல்லி சுல்தான்கள் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். இம்முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய பெயர் ஜாகீர்தார் ஆகும்.
- தங்களது ஊதியத்தை பணமாக பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் ஜாகீர்தார் ஆவார்.
- ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார். மாவட்ட அளவிலான அதிகாரி அமில் சூஜார் ஆவார்.
- அவருக்கு பொட்டாடார், கனுங்கோ, பட்வாரி, முக்காதம் போன்ற துணைநிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.
2. அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.
- அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
- பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார்.
- அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் – இ-கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அப்பரின் அவையில் இடம் பெற்றிருந்தனர்.
- பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சென், ஒவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.
சில பயனுள்ள பக்கங்கள்