பாடம்.4 வளங்கள்
பாடம்.4 வளங்கள்
சொற்களஞ்சியம்
| உயிரியல் வளங்கள் | Biotic resources | obtained from living and organic materials |
| உயிரற்ற வளங்கள் | Abiotic resources | obtained from non-living, non-organic materials |
| நீர் மின் சக்தி | Hydroelectricity | generated from moving water with high velocity and great falls with the help of turbines and dynamos |
| உலோக வளங்கள் | Metallic resources | resources that are composed of metals |
| உலோகம் அல்லாத வளங்கள் | Non-metallic resources | resources that do not comprise of metals |
| துராலுமின் | Duralumin | a hard, light alloy of aluminium with copper and other elements |
| படிம எரிகபொருள் | Fossil fuel | formed from the remains of dead plants and animals |
| அனல் மின் சக்தி | Thermal Power | Electricity produced from coal |
| கருப்புத் தஙகம் | Black Gold | Petroleum and its derivatives |
| விலை மதிப்புள்ள உலோகம் | Precious metal | a metal that is valuable and usually rare |
சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் _________
- தங்கம்
- இரும்பு
- பெட்ரோல்
- சூரிய ஆற்றல்
விடை: சூரிய ஆற்றல்
2. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
- கமுதி
- ஆரல்வாய்மொழி
- முப்பந்தல்
- நெய்வேலி
விடை: கமுதி
3. மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று _________
- இரும்பு
- தாமிரம்
- தங்கம்
- வெள்ளி
விடை: தாமிரம்
4. _______ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று
- சுண்ணாம்புக்கல்
- மைக்கா
- மாங்கனீசு
- வெள்ளி
விடை: மைக்கா
5. நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் _______
- வெப்பசக்தி
- அணுசக்தி
- சூரிய சக்தி
- நீர் ஆற்றல்
விடை: வெப்பசக்தி
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் _________
விடை: சீனா
2. தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் ________
விடை: கஞ்சமலை
3. பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் ________
விடை: அலுமினியம்
4. மின்சார பேட்டரிகள் தயாரிக்க ________ பயன்படுகிறது
விடை: மாங்கனீசு
5. பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை ________ என அழைக்கப்படுகிறது.
விடை: கருப்பு தங்கம்
பொருத்துக
| 1. புதுப்பிக்கக்கூடிய வளம் | இரும்பு |
| 2. உலோக வளம் | மைக்கா |
| 3. அலோக வளம் | காற்றாற்றல் |
| 4. புதை படிம எரிபொருள் | படிவுப்பாறை |
| 5. சுண்ணாம்புக்கல் | பெட்ரோலியம் |
| விடை: 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – ஈ | |
பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்
1. கூற்று : காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்
காரணம் : காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது
- கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
- கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
2. கூற்று : இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது
காரணம் : வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்
- கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
- கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
பின்வருவனவற்றிற்கு விடையளிக்கவும்
1. வளங்கள் – வரையறு
ஒரு நாட்டின் சமூக, பொருளாதார அரசியல் வலிமையானது அந்நாட்டின் வளங்களின் பரவல், பயன்பாடு மற்றும் அவற்றைப் பாதுகாத்தலைச் சார்ந்து அமையும். மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவை வளங்கள் என அழைக்கப்படுகின்றன
2. இரும்பின் பயன்கள் யாவை?
இரும்பானது மலிவு விலை மற்றும் வலிமையினாலும் இன்ஜினியரிங் தொழில்துறையில் அதாவது இயந்திர கட்டுமானப்பணி, இயந்திர கருவிகள், ஆட்டோமொபைல்ஸ், கப்பல் கட்டுமானப்பணி பாலம் மற்றும் கட்டட கட்டுமானப்பணிகளில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
3. உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் யாவை?
இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் அமெரிக்காவின் மாநிலங்கள்
4. கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு
கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை 4 வகையாகப்பிரிக்கலாம்.
- ஆந்த்ரசைட் (Anthracite)
- பிட்டுமினஸ் (Bituminous)
- லிக்னைட் (Lignite)
- பீட் (Peat)
5. துராலுமின் குறித்து சிறுகுறிப்பு வரைக.
அலுமினியத்துடன் சிறிய அளவிலான பிற உலோகங்களைக் சேர்ப்பதன் மூலம், இது தூய அலுமினியத்தைவிட உயர்ரக (அலாயினை) உலோகக்கலவையை உருவாக்குகிறது. (எ.கா) துராலுமின்
இது 90% அலுமினியம், 4% செம்பு, 1% மெக்னீசியம் மற்றும் 0.5% முதல் 1% மாங்கனீசு ஆகியவற்றால் ஆன அலாய் ஆகும். துராலுமின் கடினமானது,
பின்வருவனவற்றை வேறுபடுத்தி எழுதுக
1. உயிருள்ள வளங்கள் – உயிரற்ற வளங்கள்
உயிரியல் வளங்கள்
- உயிரியல் வளங்கள் என்பவை காடுகள், பயிர்கள், பறவைகள், விலங்குகள், மனிதன் அடங்கிய உயிர்க்கோளத்திலிருந்து பெறப்பட்ட வளங்கள் ஆகும். மேலும், அவற்றிலிருந்து பெறப்படும் புதை படிம எரிபொருள்களும் உயிரியல் வளங்களுள் அடங்கும்.
- (எ.கா) நிலக்கரி, பெட்ரோலியம்.
உயிரற்ற வளங்கள்
- உயிரற்ற பொருள்களிலிருந்து பெறப்பட்ட ஒரு வகைவளங்கள் உயிரற்ற வளங்கள் என அழைக்கப்படுகின்றன.
- எ.கா : தங்கம், வெள்ளி, இரும்பு, தாமிரம்) நிலம், நீர், சூரிய ஒளி, உலோக
தாதுக்கள், காற்று
2. புதுப்பிக்கக் கூடிய வளங்கள் – புதுப்பிக்க இயலா வளங்கள்
புதுப்பிக்கத்தக்க வளங்கள்
- புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்பவை, இயற்கையான செயல்பாடுகளாலோ காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடியனவாகவோ அமையும் வளங்களாகும்.
- இவ்வளங்களை உற்பத்தி செய்வதாலும் பயன்படுத்துவதாலும் மாசு ஏற்படாது. ஆற்றல் ஆதாரங்களாகப் புதுப்பிக்கத்தக்க வளங்களைப் பயன்படுத்துவது உலகளவில் அதிகரித்து வருகிறது.
- (எ.கா) சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீராற்றல்.
புதுப்பிக்க இயலா வளங்கள்
- புதுப்பிக்க இயலா வளங்கள் என்பவை, இயற்கையாக மீண்டும் புதுப்பிக்க முடியாத அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்ய இயலாத இயற்கை வளங்கள் ஆகும்.
- புதுப்பிக்க இயலா வளங்களின் தொடர் நுகர்தலானது அதன் அழிவிற்கு வழிவகுக்கும்.
- (எ.கா) புதைபடிம எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் தாது வளங்களான இரும்பு, தாமிரம், பாக்ஸைட், தங்கம், வெள்ளி
3. உலோக வளங்கள் – அலோக வளங்கள்
உலோக வளங்கள்
- உலோக வளங்கள் என்பவை, உலோகத்தால் ஆன வளங்கள் ஆகும்.
- இவை வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்தும் கடினப்பொருள்களாகும்.
- எ.கா : இரும்பு, தாமிரம், தங்கம், பாக்ஸைட், வெள்ளி மற்றும் மாங்கனீசு இன்னும் பிற.
அலோக வளங்கள்
- உலோகத்தினைக் கொண்டிராத வளங்கள் அலோக வளங்கள் என அழைக்கப்படுகின்றன.
- இவை கடினமான பொருள்கள் அல்ல, மின்சாரத்தையும், வெப்பத்தையும் எளிதில் கடத்துபவையும் அல்ல.
- எ.கா : மைக்கா, சுண்ணாம்புக்கல், ஜிப்சம், போலமைப் பாஸ்பேட் முதலியன.
காரணம் கூறுக
1. அலுமினியம் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும்போது பரவலான பயன்பாட்டினைக் கொண்டுள்ளது.
- அலுமினியமானது எடை குறைந்த, கடினமான மற்றும் விலை குறைந்தது என்பதால் உலக அளவில் கட்டுமானப்பணிக்குப் பிரபலமான ஒன்றாகிவிட்டது.
- இது முக்கியமாக விமானங்கள், கப்பல்கள், ஆட்டோமொபைல்கள், தொடர்வண்டிபெட்டிகள் தயாரிப்பில் பயன்படுகிறது.
எனவே, அலுமினியம் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும்போது பரவலான பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
2. நீர் ஒரு சிறந்த ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது.
நீரானது ஒரு முக்கிய ஆற்றல் ஆதாரமாகக் கருதப்படுகிறது. தற்போது நீரானது நீர் மின் சக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. நீர் மின் சக்தி, அதிக திசை வேகத்துடன் நகரும் நீர் மற்றும் பெரிய நீர்வீழ்ச்சிகளில் விசையாழிகள் மற்றும் மின்மாற்றிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் அறிந்த ஆற்றல் வளங்களிலேயே நீர் மின் சக்தியானது, மலிவானதாவும் மற்றும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது
விரிவாக விடையளிக்க
1. புதுப்பிக்கக்கூடிய வளங்களின் வெவ்வேறு வகைகளை விளக்குக
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இயற்கையான செயல்பாடுகளாலோ, காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடியனவாகவோ அமையும்.
- சூரிய ஆற்றல்
- காற்றாற்றல்
- நீர் ஆற்றல்
சூரிய ஆற்றல்:
சூரியன் தனது ஆற்றலை வெப்பமாகவும், ஒளியாகவும் வெளிவிடுகிறது. சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. சூரியகலமானது நேரடியாக சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடியது. இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவை உலகிலேயே மிகப்பெரிய அளவில் சூரிய ஒளி உற்பத்தி செய்யப்படுகிறது.
- எ.கா.: கமுதி, சூரிய ஒளி மின்திட்டம்.
காற்றாற்றல்:
காற்றாற்றல் என்பது ஒரு துய்மையான ஆற்றலாகும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை. இந்தியாவின் முக்கிய காற்றாலைப் பண்ணைகள் உள்ளது.
- எ.கா.: முப்பந்தல், கன்னியாகுமரி, தமிழ்நாடு
காற்றாலை பண்ணைகள் காணப்படும் நாடுகள்: அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரேசில்
நீர்மின் சக்தி:
நீரானது நீர்மின்சக்தி உற்பத்திக்குப் பயன்படுகிறது. நீர்மின்சக்தி மலிவானதாகவும் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. சீனா, கனடா, பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, நார்வே மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் நீர்மின்சக்தி உற்பத்தி செய்கிறது.
- எ.கா.: அதிக அளவில் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யும் நாடு சீனா ஆகும்.
2. புதுப்பிக்க இயலா வளங்கள் – குறித்து விரிவாக எழுதுக.
புதுப்பிக்க இயலா வளங்கள் என்பவை இயற்கையாக மீண்டும் புதுப்பிக்க முடியாத அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்ய இயலாத இயற்கை வளங்கள் ஆகும்.
- எ.கா.: புதைபடிம எரிப்பொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் தாது வளங்களான இரும்பு, தாமிரம், பாக்ஸைட், தங்கம், வெள்ளி.
நிலக்கரி:
- தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும்.
- நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது அனல் மின்சக்தி எனப்படுகிறது.
- கார்பன் அளவினைக் கொண்டு ஆந்த்ரசைட், பிட்டுமினஸ், லிக்னைட், பீட் என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
- உலகில் நிலக்கரி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு சீனா ஆகும். இந்தியாவில் மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச், தமிழகத்தில் நெய்வேலியிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
பெட்ரோலியம்:
- பாறை அடுக்குகளுக்கு இடையேயும், கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது.
- பெட்ரோலியம் மற்றும் அதன் உபபொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் “கருப்புத் தங்கம்” என அழைக்கப்படுகிறது.
- மும்பை டெல்டாப் பகுதிகள் இந்தியாவில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் பகுதியாகும்.
இயற்கை வாயு:
- பெட்ரோலியப் படிவுகளுடன் காணப்படுகிறது.
- உலக அளவில் 50%க்கும் அதிகமான இயற்கை வாயு இருப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தாரில் உள்ளது.
- இந்தியாவில் கிருஷ்ணா மற்றம் கோதாவரி மற்றும் மும்பை கடலோரப் பகுதியில் இயற்கை வாயு வளம் உள்ளது.
3. புதை படிம எரிபொருள் வளங்கள் யாவை? அவற்றை விளக்குக,
- புதை படிம எரிபொருள் வளங்களானது இறந்து போன தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து உருவானவை.
- புதை படிம எரிபொருள்கள் ஹைட்ரோ கார்பனிலிருந்து உண்டானவை எனப் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
- இவை எரிக்கப்படும்போது வெப்ப ஆற்றலுக்கான ஒரு சிறந்த ஆதாரமாகிறது.
- நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவை புதை படிம எரிபொருள்கள் ஆகும்.
சில பயனுள்ள பக்கங்கள்
