7th Std Social Science Term 2 Solution | Lesson.5 சுற்றுலா

பாடம்.5 சுற்றுலா

சுற்றுலா- பாட விடைகள்

பாடம்.5 சுற்றுலா

சொற்களஞ்சியம்

வெந்நீர் ஊற்றுGeysera natural hot spring
அணுகுமுறைAccessibilitythe quality of being easily to obtain or use
வசதிகள்Amenitiesattractiveness of a place
பொழுதுபோக்குRecreationthe feeling of being relaxed
பொழுதுபோக்கு பூங்காAmusement parka large outdoor area with fairground rides, shows and other entertainments
பறவைகள் சரணாலயம்Bird sanctuaryan area of land in which birds are protected and encouraged to breed
விலங்குகள் சரணாலயம்Wildlife sanctuaryan area which provides protection and favourable living conditions to the wildlife
நில வளம் குறைதல்Land degradationLoss of natural fertility of soil because of loss of nutrients

சரியான விடையைத் தேர்வு செய்க

1. சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ________

  1. சமயச் சுற்றுலா
  2. வரலாற்றுச் சுற்றுலா
  3. சாகசச் சுற்றுலா
  4. பொழுதுபோக்குச் சுற்றுலா

விடை: சமயச் சுற்றுலா

2. எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?

  1. இராஜஸ்தான்
  2. மேற்கு வங்காளம்
  3. அசாம்
  4. குஜராத்

விடை: அசாம்

3. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?

  1. கோவா
  2. கொச்சி
  3. கோவளம்
  4. மியாமி

விடை: மியாமி

4. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?

  1. குஜராத்திலுள்ள நல்சரோவர்
  2. தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்
  3. இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்
  4. மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா

விடை: மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா

5. எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

  1. தருமபுரி
  2. திருநெல்வேலி
  3. நாமக்கல்
  4. தேனி

விடை: திருநெல்வேலி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நீர் மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு ________ என அழைக்கப்படுகின்றது.

விடை: A3

2. காஸ்ட்ரோனமி என்பது சுற்றுலாவின் ________ அம்சத்தை குறிக்கின்றது

விடை: கலாச்சார

3. சுருளி நீர்வீழ்ச்சி ________ என்றும் அழைக்கப்படுகிறது.

விடை: நில நீர் வீழ்ச்சி

4. இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை ________

விடை: சென்னையின் மெரினா கடற்கரை

5. TAAI என்பதன் விரிவாக்கம் ________

விடை: Travel Agent Association of India

பொருந்தாததை வட்டமிடுக.

1. போக்குவரத்து, ஈர்ப்புத் தலங்கள், எளிதில் அணுகும் தன்மை, அணுகுதல் சேவை வசதிகள்

விடை: போக்குவரத்து

2. நைனிடால், ஷில்லாங், மூணாறு, திகா

விடை: திகா

3. கார்பெட், சுந்தரவனம், பெரியார், மயானி

விடை: மயானி

4. ஒகேனேகல், கும்பகரை, சுருளி, களக்காடு

விடை: களக்காடு

5. ரிஷிகேஷ், லடாக், குல்மார்க், கோத்தகிரி

விடை: கோத்தகிரி

பொருத்துக

1. ஆனைமலை வாழிடம்மேற்கு வங்காளம்
2. குரங்கு அருவிகோவா
3. டார்ஜிலிங்கோயம்புத்தூர்
4. இயற்கையின் சொர்க்கம்உயர் விளிம்பு
5. அகுதா கடற்கரைஜவ்வாது
விடை: 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – உ, 5 – ஆ

பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

1. கூற்று : சுற்றுலா என்பது மக்களின் சமுதாய வாழ்க்கை முறைக்கு ஓர் இன்றியமையாத செயலாக விளங்குகிறது

காரணம் : சுற்றுலா நாட்டின் சமூக, கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

  1. கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
  2. கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
  3. கூற்று தவறு காரணம் சரி
  4. கூற்றும் காரணமும் தவறானவை

விடை : கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

2. கூற்று : கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும்.

காரணம் : வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள்

  1. கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
  2. கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
  3. கூற்று தவறு காரணம் சரி
  4. கூற்றும் காரணமும் தவறானவை

விடை : கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமாக விடையளிக்கவும்.

1. சுற்றுலா வரையறுக்க.

சுற்றுலாப் பயணி என்ற சொல், “டூரியன்” என்ற பழமையான ஆங்கிலச் சொல்லிலிருந்து தோன்றியது. இது 24 மணி நேரத்திற்குக் குறையாமலும், ஓர் ஆண்டிற்கு மிகாமலும் தனது வழக்கமான சூழலிருந்து பயணிப்பதைக் குறிக்கும். மதம், பொழுதுபோக்கு, வாணிகம், வரலாறு மற்றும் பண்பாடு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பயணிப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்.

2. சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.

  • பொதுவாக, இயற்கைச் சூழலில் தாவரங்களும், விலங்குகளும் செழித்து வளரும் இடங்களுக்குச் செல்வது ‘சூழல் சுற்றுலா’ எனப்படுகிறது.
  • அமேசான் மழைக்காடுகள், ஆப்பிரிக்க வனப்பயணம் மற்றும் இமயமலை சிகரங்களில் மலையேற்றம் ஆகியவை புகழ்பெற்ற சூழல் சுற்றுலா தலங்களாகும்.

3. சுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை?

  • இதமான வானிலை
  • கண்கவர் இயற்கைக் காட்சிகள்
  • வரலாற்று மற்றும் பண்பாட்டு நினைவுச் சின்னங்கள்

4. இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக

  • கொடைக்கானல், ஊட்டி – தமிழ்நாடு
  • நைனிடால் – உத்திரகாண்ட்
  • டார்ஜிலிங் – மேற்கு வங்காளம்
  • ஸ்ரீநகர் – ஜம்மு காஷ்மீர்
  • ஷில்லாங் – மேகாலயா
  • சிம்லா – இமாசலப் பிரதேசம்
  • மூணாறு – கேரளா
  • காங்டாக் – சிக்கிம்

5. தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக.

  • தனுஷ்கோடி – தமிழ்நாடு
  • வற்கலை கடற்கரை – கேரளா
  • தர்கார்லி கடற்கரை – மகாராஷ்ட்டிரா
  • ஓம் கடற்கரை – கர்நாடகா
  • அகுதா கடற்கரை – கோவா
  • மராரி கடற்கரை – கேரளா

பின்வருவனவற்றை வேறுபடுத்தி எழுதுக

1. பன்னாட்டுச் சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சுற்றுலா

பன்னாட்டுச் சுற்றுலா

  • சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடவும், அவற்றின் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி அறியவும், சேகரிக்கவும் பன்னாட்டுச் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.
  • இதற்காகக் கடவுச்சீட்டு, விசா, வெளிநாட்டு நாணயம், விமான டிக்கெட், பயணக் காப்பீடு மற்றும் பிற குடியேற்ற விவரங்கள் போன்றவை சுற்றுலா பயணிகளால் முறைப்படி பூர்த்தி செய்யப்பட வேண்டிய சில பயண படிவங்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளன.

வரலாற்றுச் சுற்றுலா

  • இவ்வகைச் சுற்றுலா அருங்காட்சியங்கள், நினைவுச் சின்னங்கள் தொல்பொருள் ஆராய்ச்சிப்பகுதிகள், கோட்டைகள், கோவில்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றினைப் பார்வையிடுவதை மையமாகக் கொண்டுள்ளது.
  • கம்போடியாவின் அங்கோர்வாட், இந்தியாவின் தாஜ்மஹால் மற்றும் எகிப்தின் பிரமிடுகள் ஆகியவற்றை வரலாற்று சுற்றுலாவுக்கு எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.

2. சமயச் சுற்றுலா மற்றும் சாகசச் சுற்றுலா

சாகசச் சுற்றுலா

  • நெடுந்தொலைவிலுள்ள (அல்லது) அந்நிய இடங்களிலுள்ள வெளிப்புற செயல்பாடுகளில் கலந்து கொள்வதற்காகப் பயணப்படுவதே சாகசச் சுற்றுலா எனப்படும்.
  • எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவின் விண்வீழ் விளையாட்டு நியூசிலாந்தின் மலை உச்சிவீழ் இழுவை விளையாட்டு இமயமலையின் சிகரங்களில் மலையேறுதல், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பிரம்மபுத்ரா நதியின் கட்டுமர மிதவை நதிபயணம் ஆகியவற்றைக் கூறலாம்.

சமயச் சுற்றுலா

  • சுற்றுலா வகைகளில் ‘சமயச் சுற்றுலா’ மிகப் பழமையானதாகும். இதில் மக்கள் தனித்தனியாகவோ குழுக்களாகவோ புனித யாத்திரையாகக் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற புனிதத்தலங்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.
  • சமயச் சுற்றுலாவுக்கு எடுத்துக்காட்டுகளாக இந்துக்கள் காசி செல்வதையும் (வாரணாசி) கிறித்தவர்கள் ஜெருசலேம் செல்வதையும் முஸ்லிம்கள் மெக்கா செல்வதையும் குறிப்பிடலாம்.

3. ஈர்ப்புத் தலங்கள் மற்றும் எளிதில் அணுகும் தன்மை

ஈர்ப்புத் தலங்கள்

  • இயற்கை ஈர்ப்புத் தலங்கள், கலாச்சார ஈர்ப்புத் தலங்கள் முக்கியமான இரண்டு வகைகளைக் கொண்டுள்ளன.
  • இயற்கை ஈர்ப்புத் தலங்கள் என்பவை, நிலம் மற்றும் கடல் அமைப்பு, கடற்கரைகள், காலநிலை மற்றும் காடுகள் ஆகிய கூறுகள் அடங்கும். கலாச்சார ஈர்ப்புத் தலங்கள் என்பவை, வரலாற்று நினைவுச் சின்னங்களையும், பிற அறிவார்ந்த படைப்புகளையும் உள்ளடக்கியதாகும். இவை தவிர, கண்காட்சிகள் மற்றும் பண்டிகைகளும் கலாச்சார ஈர்ப்புகளில் அடங்கும்.

எளிதில் அணுகும் தன்மை

  • எளிதில் அணுகும் தன்மை என்பது சாலை, இரயில், நீர் மற்றும் வான்வழி போன்ற பல்வேறு வகையான போக்குவரத்தின் மூலம், குறிப்பிட்ட ஓர் ஈர்ப்புத் தலத்தை எளிதில் அடைவதாகும்.
  • குறிப்பிட்ட ஓர் ஈர்ப்புத் தலத்தை அடைவதற்கான பயணச்செலவையும் நேரத்தையும் போக்குவரத்து தீர்மானிக்கிறது.

பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்

1. சுற்றுலாவின் புவியியல் காரணிகளை விளக்குக

1. நிலத்தோற்றம்:

  • மலைகள்
  • பீடபூமிகள்,
  • ஆழ்பள்ளத்தாக்குகள்
  • பள்ளத்தாக்குகள்,
  • குகைகள்
  • மணல் குன்றுகள்,
  • பனியாற்று நாற்காலி
  • பவளப்பாறைகள்
  • ஓங்கல்கள் போன்ற நிலத்தோற்றங்கள்.

2. நீர்நிலைகள்:

  • ஆறுகள்
  • ஏரிகள்
  • நீர்வீழ்ச்சிகள்
  • வெந்நீர் மற்றும் கொதிநீர் ஊற்றுகள்
  • பனி மற்றும் பனியாறுகள்
  • நீரோட்டங்கள் ஓதங்கள் மற்றும் அலைகள்.

3. தாவரங்கள்:

  • காடுகள்
  • புல்வெளிகள்
  • பெருவெளிகள்
  • பாலைவனங்கள்.

4. காலநிலை:

  • சூரிய ஒளி
  • மேகங்கள்
  • சிறந்த வெப்பநிலை
  • மழைப்பொழிவு
  • பனி.

5. விலங்குகள்:

  • வனவிலங்குகள், பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயம், மிருகக்காட்சி சாலை.
  • வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல்

6. குடியிருப்புக் காரணிகள்

  • நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமங்கள்
  • வரலாற்று அழிவு எச்சங்கள், நினைவுச் சின்னங்கள்

7. கலாச்சாரம்:

  • மக்களின் வாழ்க்கை முறை
  • பாரம்பரியம்
  • நாட்டுப்புற வழக்கங்கள்,
  • ஓவியங்கள்
  • கைவினைப் பொருட்கள

2. தமிழ்நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.

1. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகான நீர்வீழ்ச்சி

2. கும்பக்கரை நீர்வீழ்ச்சி

பாம்பார் ஆற்றில் சிற்றருவிகளாக உருவாகி, கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இந்நீர்வீழ்ச்சி வீழ்கின்றது. இது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

3. குரங்கு நீர்வீழ்ச்சி

பசுமை மாறாக் காடுகள் சூழ்ந்த இந்நீர்வீழ்ச்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ளது.

4. கிளியூர் நீர்வீழ்ச்சி

கிழக்குத் தொடர்ச்சி மலையான சேர்வராயன் குன்றுப் பகுதியில் அமைந்துள்ளது.

5. குற்றாலம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவி, மருத்துவம் ஆரோக்கியத்திற்குப் பெயர் பெற்றது.

6. ஆகாய கங்கை

கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கொல்லிமலையில் புளியஞ்சோலை என்னுமிடத்தில் இந்நீர்வீழ்ச்சி வீழ்கின்றது. இது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது

7. சுருளி நீர்வீழ்ச்சி

இந்த நீர்வீழ்ச்சி நிலநீர்வீழ்ச்சி அல்லது மேகமலை நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. இது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

3. சுற்றுலாவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை விவரிக்கவும்

சுற்றுலாவிற்குச் சுற்றுச்சூழலின் தரம் மிக அவசியமாகும். சுற்றுலாத்துறை, சுற்றுச்சூழலில் பல நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

நேர்மறையான தாக்கம்

  • நேரடியான நிதி பங்களிப்பு
  • அரசாங்க நிதிக்குப் பங்களிப்பு
  • மேம்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்
  • சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரித்தல்
  • பாதுகாப்பு மற்றும் பராமரிக்கப்பட்ட சுற்றுச்சூழல்

எதிர்மறை தாக்கம்

1. இயற்கை வளங்கள் சிதைவுறுதல்

  • நீர் வளங்கள்
  • உள்ளூர் வளங்கள்
  • நிலச் சீரழிவு

2. மாசுபடுதல் (மாசு, தூய்மைக்கேடு)

  • காற்று மற்றும் ஒலி மாசு
  • திடக்கழிவு மற்றும் குப்பைகள்
  • கழிவுநீர்

3. சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவு மற்றும் மாற்றம்

  • காற்று
  • நீர்
  • மண்

 

சில பயனுள்ள பக்கங்கள்