7th Std Social Science Term 3 Solution | Lesson.1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

பாடம்.1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

பாடம்.1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

கலைச்சொற்கள்

நிவர்த்தி, விமோசனம்salvationa way of being saved from danger, loss or harm
எங்கும் நிறைந்திருக்கின்றomnipresentpresent everywhere at the same time
அவதாரம்incarnationa living being embodying a deity or spirit
விநோதமாக,
பகைமையுள்ள
hostileshowing enmity or dislike, unfriendly
முக்கியத்துவம்prominenceimportance
ஆதரவாளர், பின்பற்றுபவர்adherentsupporter (of a person, cause or belief)
கடுமையான, கெடுபிடியானstringentsevere, harsh
இஸ்லாமியப் பேரறிஞர்ulema Islamic scholar trained in Islamic law
ஆசிரமம், துறவி வாழிடம்hermitagethe dwelling of persons living in seclusion
ஒத்த இயல்புடையakinsimilar
குத்துவாள், குறுவாள்daggershort, pointed knife that is sharp on both sides
சித்தரிக்கும், விவரமாக
விளக்கும்
depictingshowing, portraying
வேறுபாடு, சமமற்றdisparitya great diference, the state of being unequal

சரியான விடையைத் தேர்வு செய்க

1. கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?

  1. பொய்கை ஆழ்வார்
  2. பெரியாழ்வார்
  3. நம்மாழ்வார்
  4. ஆண்டாள்

விடை: பெரியாழ்வார்

2. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?

  1. இராமானுஜர்
  2. இராமாநந்தர்
  3. நம்மாழ்வார்
  4. ஆதி சங்கரர்

விடை: ஆதி சங்கரர்

3. பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?

  1. வல்லபாச்சாரியார்
  2. இராமானுஜர்
  3. இராமாநந்தர்
  4. சூர்தாஸ்

விடை: இராமாநந்தர்

4. சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?

  1. மொய்னுதீன் சிஸ்டி
  2. சுரவார்டி
  3. அமீர் குஸ்ரு
  4. நிஜாமுதின் அவுலியா

விடை: மொய்னுதீன் சிஸ்டி

5. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?

  1. லேனா
  2. குரு அமீர் சிங்
  3. குரு நானக்
  4. குரு கோவிந் சிங்

விடை: குரு நானக்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் _________

விடை: விஷ்ணு சித்தர்

2. சீக்கியர்களின் புனிதநூல் _________ ஆகும்.

விடை : குரு கிரந்தசாகிப்

3. மீராபாய் _________ என்பாரின் சீடராவார்

விடை: ரவி தாஸ்

4. _________ என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது

விடை: இராமானுஜர்

5. தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் _________ என்ற இடத்தில் அமைந்துள்ளது.

விடை: கர்தார்பூர்

பொருத்துக

1. பாகல்கபீர்
2. இராமசரிதமானஸ்இராமானுஜர்
3. ஸ்ரீவைஷ்ணவம்அப்துல் வகித் அபுநஜிப்
4. கிரந்தவளிகுரு கோவிந் சிங்
5. சுரவார்டிதுளசிதாசர்
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

  1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
  2. துக்காராம் – வங்காளம்
  3. சைதன்யதேவா – மகாராஷ்டிரா
  4. பிரம்ம சூத்திரம் – வல்லபாச்சாரியார்
  5. குருத்வாராக்கள் – சீக்கியர்கள்

விடை: a & e

1. கூற்று : குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.

காரணம் : குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்.

  1. காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
  2. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
  3. கூற்று சரி, காரணம் தவறு.
  4. கூற்று, காரணம் இரண்டும் தவறு.

விடை: கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது

பொருந்தாததைக் கண்டுபிடி.

  1. பொய்கை ஆழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பெரியாழ்வார்
  4. ஆண்டாள்
  5. நம்மாழ்வார்

விடை: ஆண்டாள்

சரியா? தவறா? காண்

1. இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று.

விடை: தவறு

2. இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்.

விடை: சரி

3. குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.

விடை: சரி

4. கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.

விடை: சரி

5. அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.

விடை: சரி

குறுகிய விடையளி

1. திருமுறை பற்றி நீவிர் அறிவது என்ன?

நாயன்மார்களின் பாடல்கள் அனைத்தையும் நம்பி ஆண்டார் நம்பி (கி.பி.1000) என்பார் தொகுத்ததாகக் கூறப்படுகிறது. அதுவே சைவப்புனித நூல்களான திருமுறையின் அடிப்படையாக உள்ளது. திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது. அவற்றில் 11 நூல்கள் நம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டவையாகும். சேக்கிழாரின் பெரியபுராணம் 12வது நூலாகும்.

2. நாயன்மார்கள் மொத்தம் எத்தனைபேர்? அவர்களில் முக்கியமானோர் யாவர்?

மரபுவழிக் கதையின்படி நாயன்மார்கள் 63 பேராவர். அவர்களில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் (மும்மூர்த்திகள் என அழைக்கப்படுபவர்கள்) ஆகியோர் தென்னிந்தியக் கோவில்களில் சிலைவழிபாடு செய்யப்படுகின்

3. சீக்கிய மதத்தைத் தோற்றுவிக்க குருநானக் எவ்விதம் உதவினார்?

  • அவர் சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.
  • குருநானக்கின் போதனைகளே பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட சீக்கிய மதத்தின் மூலக்கோட்பாடாக அமைந்தது.
  • குருநானக், அவருக்குப் பின்வந்தோர் ஆகியோரின் போதனைகள் தொகுக்கப்பட்டு குரு கிரந்சாகிப் என்றழைக்கப்பட்டது.

4. பண்டரிபுரம் விதோபாகோவிலுக்கு, துக்காரம் எவ்விதம் பணியாற்றினார்?

  • பதினேழாம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த துக்காராம் கவிஞரும் திருத்தொண்டருமாவார்.
  • விஷ்ணுவின் அவதாரமான விதோபா குறித்து அவர் இயற்றிய ஆன்மீகப் பாடல்களுக்காகவே (அபங்கா அல்லது கீர்த்தனைகள்) அவர் நன்கு அறியப்பட்டிருந்தார்.
  • மகாராஷ்டிராவில் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள பந்தர்பூர் அல்லது பண்டரிபுரத்தில் விதோபா/பாண்டு ரங்கா கோவில் உள்ளது.
  • வங்காளத்திற்கு சைதன்ய தேவா எவ்விதமோ அதைப்போன்றே மகாராஷ்டிராவுக்கு துக்காராம் விளங்குகிறது

5. கபீரின் சமயக்கருத்துக்கள் கீழ்நிலை சாதிகளைச் சார்ந்தோருக்கு ஏற்புடையதாயிற்று என்பதை முன்னிலைப்படுத்து

பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தாலும் கடவுள் ஒருவரே என்றும், வடிவமற்றவர் என்றும் கபீர் கபீர் நம்பினார். சமயம், சாதி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் கண்டனம் செய்தார். பொருளற்ற சடங்கு முறைகளையும் அவர் கண்டனம் செய்தார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்