பாடம்.2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

பாடம்.2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
கலைச்சொற்கள்
| சுதேசம், உள் நாடு | indigenous | native |
| சகாப்தம், வரலாற்றின் ஒரு காலகட்டம் | epoch | era, age |
| கருவறை | sanctum | a sacred place set apart in a temple |
| சீர்கேடான | decadent | corrupt, a state of moral decline |
| எடுத்துக்காட்டாய் திகழ்கிறது | exemplifed | illustrated, represented |
| சிலை வைக்கப்படும் இடம் | niche | a cavity, especially in a wall to display a statue |
| கலைப்பண்புக் கூறு | motif | a decorative design forming a pattern in an artistic work |
| பெரிய கற்பாறை, பாறாங்கல் | boulder | a very large rock |
| சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் | contemporaries | living or occurring at the same time |
| செதுக்கப்பட்ட | hewn | cut out and shaped |
| சுவற்றில் செதுக்கப்படும் சிற்பம் | bas-relief | a sculpture carved into a wall |
| செயல் திறன், ஒன்றைச் செய்து முடித்தல் | execution | carrying out |
| உட்தகுதிகள், இடைவெளிகள் | recesses | hollow spaces inside the wall or a structure |
சரியான விடையைத் தேர்வு செய்க
1. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது?
- கடற்கரைக் கோவில்
- மண்டகப்பட்டு
- கைலாசநாதர் கோவில்
- வைகுந்தபெருமாள் கோவில்
விடை: கடற்கரைக் கோவில்
2. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
- 1964
- 1994
- 1974
- 1984
விடை: 1984
3. முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?
- புடைப்புச் சிற்பங்கள்
- விமானங்கள்
- பிரகாரங்கள்
- கோபுரங்கள்
விடை : விமானங்கள்
4. அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
- திருக்குறுங்குடி
- மதுரை
- திருநெல்வேலி
- திருவில்லிபுத்தூர்
விடை: திருக்குறுங்குடி
5. வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்?
- மகேந்திரவர்மன்
- இரண்டாம் நந்திவர்மன்
- ராஜசிம்மன்
- இரண்டாம் ராஜராஜன்
விடை: இரண்டாம் நந்திவர்மன்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ________ என்ற இடத்தில் உள்ளது.
விடை: மண்டகப்பட்டு
2. முற்கால சோழர் கட்டடக்கலை ________ பாணியைப் பின்பற்றியது
விடை: செம்பியன் மகாதேவி
3. மீராபாய் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் ________ ஆகும்
விடை: புதுமண்டபம்
4. பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க _______ பெயர் பெற்றது
விடை: கோபுரங்களுக்கு
5. விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ________ ஆகும்.
விடை: மண்டபங்கள்
பொருத்துக
| 1. ஏழு கோவில்கள் | மதுரை |
| 2. இரதிமண்டபம் | தாராசுரம் |
| 3. ஐராவதீஸ்வரர்கோவில் | திருக்குறுங்குடி |
| 4. ஆதிநாதர் கோவில் | கடற்கரைக்கோவில் |
| 5. புதுமண்டபம் | ஆழ்வார் திருநகரி |
| விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – உ, 5 – அ | |
தவறான இணையைக் காண்க
1.
- கிருஷ்ணாபுரம் கோவில் – திருநெல்வேலி
- கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
- சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
- ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர
விடை: கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
2. கூற்று : இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன
காரணம் : உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.
- காரணம், கூற்றை விளக்கவில்லை
- காரணம், கூற்றை விளக்குகின்றது
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை : காரணம், கூற்றை விளக்குகின்றது
பொருந்தாததைக் கண்டுபிடி.
- திருவில்லிபுத்தூர் அழகர்கோவில்
- ஸ்ரீரங்கம்
- காஞ்சிபுரம்
- திருவண்ணாமலை
விடை: ஸ்ரீரங்கம்
பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.
அ) கி.பி. 600 – 850
விடை: பல்லவன் காலம்
ஆ) கி.பி. 850 – 1100
விடை: முற்கால சோழர்கள் காலம்
இ) கி.பி. 1100 – 1350
விடை: பிற்கால சோழர்கள் காலம்
ஈ) கி.பி. 1350 – 1600
விடை: விஜய நகர / நாயக்கர் காலம்
சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
2. பல்லவர்கால கட்டடக்கலைப் பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
3. பின்ளையார்பட்டியிலுள்ள குகைக் கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
விடை: 1 மற்றும் 3
சரியா? தவறா?
1. இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.
விடை: சரி
2. முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்.
விடை: தவறு
3. பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்.
விடை: சரி
4. பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
விடை: சரி
5. தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்.
விடை: தவறு
குறுகிய விடையளி
1. பஞ்சபாண்டவ இரதம் பற்றி குறிப்பு வரைக.
- தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு மகாபலிபுரத்திலுள்ள ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவ இரதங்கள் என்றழைக்கப்படும்
- திரௌபதி இரதம், தர்மராஜா இரதம், பீமரதம், அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியன சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
2. சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றிக் கூறுக
சித்தன்னவாசல் ஓவியங்கள் அஜந்தா ஓவியங்களுடன் சில ஒப்புமைகளைப் பெற்றுள்ளன. திருமலைபுரத்தில் கிடைத்துள்ள முற்காலப் பாண்டியர் ஓவியங்கள் சேதமடைந்த நிலையிலுள்ளன.
3. தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.
- தஞ்சாவூர் பெரிய கோவில் அது கட்டப்பட்டபோது ஒரு பெரிய கோவில் வளாகமாக இருந்தது.
- அதன் விமானம் (கர்ப்பகிரகத்தின் மேலுள்ள கட்டுமானம்) 216 அடிகள் உயரம் கொண்டதாகும்.
- உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் அதுவும் ஒன்று என்பதால் அது குறிப்பிடத் தகுந்ததாக உள்ளது.
- மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் அதன் சிகரம் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது.
- இங்குள்ள 16 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்ட மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்.
4. இராமேஸ்வரம் கோவில் நம் கவனத்தை ஈர்க்கும் விதத்தைக் கூறுக.
- மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களாக இராமநாதபுரம் பகுதியை ஆண்டு வந்த சேதுபதிகள் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் கட்டடக் கலைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
- இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
- உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் இவையே எனச் சொல்லப்படுகிறது.
- இக்கோவில் மூன்று பிரகாரச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது.
- வெளிப்பிரகாரத்தைத் தாங்கிநிற்கும் 1200க்கும் மேற்பட்ட தூண்கள் தனிச்சிறப்பு கொண்டனவாகும்.
விரிவான விடையளி
1. பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது விளக்குக
- பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது.
- குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்படும். பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும்.
- பல்லவ அரசர் மகேந்திரவர்மன் குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாவார். மண்டகப்பட்டு, முதல் குடைவரைக் கோவிலாகும்.
- குடைவரைக் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள இரண்டு தூண்கள் அக்கோவிலைத் தாங்கி நிற்கும்.
- கி.பி.700 க்குப் பின் குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது. சிற்பிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டானது. கடற்கரைக் கோவில் தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில்.
- ஒரே பாறையில் கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப் பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன.
- காஞ்சி கைலாசநாதர் கோவில் (ராஜசிம்மன்), வைகுண்டப்பெருமாள் கோவில் (இரண்டாம் நந்திவர்மன்) ஆகியவை எடுத்துக்காட்டுகள்.
2. விஜயநகர, நாயக்கர் கால கட்டடக்கலையானது பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கட்டடக்கலையிலிருந்து எவ்விதம் வேறுபடுகிறது என விவாதிக்கவும்.
விஜயநகர / நாயக்கர் கால கட்டடக்கலை:
- விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஒரு புதிய வடிவிலான கட்டடக்கலைப் பாணி ‘மண்டபங்கள் உருவானது.
- 15 முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான விஜயநகர, நாயக்க கட்டடக்கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள். பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும்.
- கோவில்களோடு சேர்ந்து தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. கோவில்களுக்கான நுழைவாயில்கள் நான்குபுறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் கட்டப்பட்டன. சிற்பங்களோடு கூடிய மாடக்குழிகளை அமைக்கும் பழக்கம் நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது.
- பல்லவர்கள் மற்றும் பிற்காலச் சோழர்கள் காலக் கட்டடக்கலை:
- பல்லவர் ஆட்சிக்காலத்தில் குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்பட்டு பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும்.
- குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை கி.பி. 700க்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது.
- ஒரே பாறையில் ஒரு கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப்பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன. இரதங்களின் வெளிப்பக்கச் சுவர்கள் மாடக்குழிகளாலும் பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- பிற்காலச் சோழர்கள் காலத்தில் தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் அமைந்துள்ள இரண்டு உன்னதமான கோவில்கள் சோழர்களின் கட்டடக்கலை முதிர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன.
- தஞ்சாவூர் பெரிய கோவில் (கி.பி.1009) ராஜராஜன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.
- பிற்காலச் சோழர்கள் காலம் பொலிவுமிக்க கோபுரங்களுக்காகப் புகழ்பெற்றது.
சில பயனுள்ள பக்கங்கள்