7th Std Social Science Term 3 Solution | Lesson.3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

பாடம்.3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள் - பாட விடைகள்

பாடம்.3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

கலைச்சொற்கள்

தமிழகம் சாராத, வழக்கத்திலுள்ள
மதக்கொள்கைக்கு மாறான
heterodoxnot conforming to orthodox beliefs, especially religious ones, unorthodox
ஒரு விதி, பொது ஒழுங்குcanona rule, an accepted principle
ஒருமனதாகunanimousall sharing the same view
துறவி, சந்நியாசிasceticmonk, hermit
சீர்கேடு, மோசமடைdeteriorateto grow worse
தடங்கள், அடையாளங்கள், சுவடுகள்vestigesthings left behind, remains, traces
அடிநில குகைcaverna large deep underground cave
சிறு குன்றுhillocksmall hill, mound
கட்டடத்தின் முகப்புfacadethe front of a building
சுவரில் அல்லது மேற்கூரையில் வரையப்படும்
ஓவியங்கள்
frescoes paintings done in water colour on a wall or ceiling
சுவரோவியம்murala large picture painted on a wall
உத்வேகம், உந்துசக்திimpetusmotivation, stimulus
இரட்சிப்பு, முக்தி, விமோசனம்salvationsaving from harm, ruin or loss
ஐயுறவுவாத, சமய ஐயுறவாளர்sceptic (skeptic)someone who habitually doubts accepted beliefs
அடக்கமுடியாத ஆசை, மிகு விருப்பம்cravinga strong desire
துன்புறுத்தல், அடக்குமுறைpersecutionunfair treatment of a person or a group, especially because of their religious or political beliefs

சரியான விடையைத் தேர்வு செய்க

1. சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?

  1. பாடலிபுத்திரம்
  2. வல்லபி
  3. மதுரா
  4. காஞ்சிபுரம்

விடை: பாடலிபுத்திரம்

2. ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன?

  1. அர்த்த-மகதி பிராகிருதம்
  2. இந்தி
  3. சமஸ்கிருதம்
  4. பாலி

விடை:  அர்த்த-மகதி பிராகிருதம்

3. கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது?

  1. புத்தமதம்
  2. சமணமதம்
  3. ஆசீவகம்
  4. இந்து மதம்

விடை: சமணமதம்

4. தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?

  1. வேலூர்
  2. காஞ்சிபுரம்
  3. சித்தன்னவாசல்
  4. மதுரை

விடை:  வேலூர்

5. கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?

  1. மகேந்திரவர்மன்
  2. பராந்தக நெடுஞ்சடையான்
  3. பராந்தக வீரநாராயண பாண்டியன்
  4. இரண்டாம் ஹரிஹரர்

விடை: பராந்தக நெடுஞ்சடையான்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ________

விடை: நேமிநாதர்

2. புத்த சரிதத்தை எழுதியவர் _______ ஆவார்

விடை: அஸ்வகோஷர்

3. _________ நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.

விடை: கி.பி. ஏழாம்

4. பெளத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என ________ எடுத்துரைக்கின்றது

விடை: மகேந்திர வர்மனின் மத்த விலாச பிரகாசனம் எழும் நூல்

5. மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ________ ஆதரித்தனர்.

விடை: ஆசீீவர்களை

பொருத்துக

1. கல்ப சூத்ராதிருத்தக்கத் தேவர்
2. சீவகசிந்தாமணிமதுரை
3. நேமிநாதர்நாகசேனர்
4. மிலிந்தபன்காபத்ரபாகு
5. கீழக் குயில் குடி22வது தீர்த்தங்கரர்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஆ

கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளி

1. பொருந்தாததைக் காண்

  1. திருப்பருத்திக் குன்றம்
  2. கீழக் குயில் குடி
  3. கழுகுமலை
  4. நாகப்பட்டினம்
  5. சித்தன்னவாசல்

விடை: நாகப்பட்டினம்

2. கூற்று : பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.

காரணம் : துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.

  1. கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
  2. கூற்று சரி , காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
  3. கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
  4. கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விடை: கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

3. சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்

i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.

ii) ‘பள்ளி’ என்பது புத்தமதத்தாரின் கல்வி மையமாகும்.

iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.

iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து செயல்பட்டது.

  1. (i) மற்றும் (iii) சரி
  2. (i, ii) மற்றும் (iv) சரி
  3. (i) மற்றும் (ii) சரி
  4. (ii, iii) மற்றும் (iv) சரி

விடை: (i) மற்றும் (iii) சரி

4. தவறான இணையைக் காண்க

  1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்
  2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு
  3. விசுத்திமக்கா – புத்தகோசா
  4. புத்தர் – எண்வகை வழிகள்

விடை: விஜய நகர /  நாயக்கர் காலம்

சரியா? தவறா?

1. 12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.

விடை: சரி

2. வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்கமுறையைச் சந்திக்க நேர்ந்தது.

விடை: சரி

3. சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது.

விடை: சரி

4. நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த புனிதத்தலங்களாயின.

விடை: தவறு

5. தாதாபுரம் சோழர்காலம் முதலாகவே பெளத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.

விடை: தவறு

கீழ்க்காண்பனவற்றுக்கு விடையளி

1. சமணத்தின் ஐம்பெரும் உறுதி மொழிகளைப் பட்டியலிடுக.

  1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது – அகிம்சை
  2. உண்மை– சத்யா
  3. திருடாமை – அசௌர்யா
  4. திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா;
  5. பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா

2. புத்தரின் நான்கு பேருண்மைகளைக் கூறுக?

  • வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
  • ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்.
  • ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப் பெறலாம்.

3. திரிபிடகாவின் மூன்று பிரிவுகளை விளக்குக.

  • வினய பிடகா
  • சுத்த பிடகா
  • அபிதம்ம பிடகா

4. சித்தன்னவாசலின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்க.

  • புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது.
  • இதன் ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையாக அமைந்த குகையும், மற்றொரு முனையில் ஒரு குடைவரைக் கோவிலும் உள்ளன.
  • வேலி அமைக்கப்பட்டுள்ள குகையின் பின்னே தரையில் 17 சமணப்படுக்கைகள்
    அமைக்கப்பட்டுள்ளன.
  • இத்துறவிகளின் கற்படுக்கைகளில் அளவில்
    பெரிதாக இருக்கும் ஒன்றில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ளது கோவிலின் முகப்பு எளிமையானதாக கல்லில் செதுக்கப்பட்ட நான்கு தூண்களைக் கொண்டுள்ளது.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவிலின் முன்பகுதியில் அர்த்த மண்டபமும் பின்பகுதியில் கருவறையும் (கர்ப்பகிரகம்) உள்ளன.

விரிவான விடையளி

1. சமணம், பௌத்தம் பற்றி அறிய உதவும் சான்றுகளை வரிசைப்படுத்துக.

சமணம்:

  • மகாவீரரின் அறவுரைகள் ஓராயிரம் ஆண்டுகளாக அவருடைய சீடர்களால் வாய்மொழி மூலமாகவே மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்தன.
  • மகாவீரர் இயற்கை எய்திய 200 ஆண்டுகளுக்குப் பின்னர் சமண அறிஞர்கள் ஒரு பேரவையைக் கூட்டி தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர் (முதல் சமண பேரவைக் கூட்டம் – பாடலிபுத்திரம்).
  • கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வல்லபியில் கூட்டப்பட்ட இரண்டாம் பேரவை கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்றது. காலப்போக்கில் கற்றறிந்த பல சமணத் துறவிகள் (அதிக வயதும் ஆழமான ஞானமும் கொண்டவர்கள்) சமயம் சார்ந்த பல்வேறு தலைப்புகளிலான உரைகளைத் தொகுத்தனர்.
  • ஏறத்தாழ கி.பி. 500இல் சமண ஆச்சாரியார்கள் தாங்கள் அறிந்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த முடிவு செய்தனர். ஏனெனில் சமண இலக்கியங்களை மனனம் செய்வது மிகச் சிரமமானது என உணர்ந்தனர்.
  • சமண இலக்கியங்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1) ஆகம சூத்திரங்கள் 2) ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் (12 நூல்கள், 84 நூல்கள்).

பௌத்தம்:

  • புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்கு ஆசிரியர்களின் நினைவாற்றல் வழியாக சீடர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது.
  • ஏறத்தாழ கி.மு. 80ல் அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.
  • திரிபிடகா பௌத்த பொது விதிகள். அது மூன்று கூடைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • வினய பிடகா, சுத்த பிடகா, அபிதம்ம பிடகா ஆகியவை மூன்று பிரிவுகளாகும்.
  • ஜாதகங்கள் மற்றும் புத்த வம்சா ஆகியவை பொது விதிகளைப் பற்றிக் கூறுபவை. பாலி மொழியில் எழுதப்பட்ட பொது விதிகள் அல்லாத நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளது (மிலிந்த பன்கா, மகா வம்சம், தீபவம்சம், விசுத்திமக்கா (புத்தகோசா).

2. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட சமணம், பௌத்தம், சார்ந்த ஆதார எச்சங்களை விளக்கமாய் பட்டியலிடுக

சமணம்

  • சமணர்கள் கர்நாடகாவிலிருந்து கொங்குப் பகுதிக்கும், காவேரி கழிமுகப்பகுதிக்கும், புதுக்கோட்டைப் பகுதிக்கும், இறுதியில் பாண்டிய நாட்டுக்குள்ளும் இடம் பெயர்ந்தனர் என்பதற்குத் தெளிவான சான்று உள்ளது.
  • சித்தன்னவாசல் குகைக்கோவில் (நிலத்திலிருந்து 70 மீ உயரம், 17 சமணப்படுக்கைகள், தமிழ்-பிராமிக் கல்வெட்டு, சுவரோவியங்கள்).
  • காஞ்சிபுரம் – திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் (திருப்பருத்திக்குன்றம்), சந்திரபிரபாகோவில். (பல்லவர் கால கட்டடக் கலைப்பாணி, சுவரோவியங்கள், பல கிராமங்களில் சமணம் குறித்த தடயங்கள்)
  • கழுகுமலை சமண குடைவரைக் கோவில் (எட்டாம் நூற்றாண்டு, பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையன். பஞ்சவர் படுக்கை).
  • வேலூர், திருமலை மற்றும் மதுரை ஆகிய இடங்களிலும் சமணக் கோவில்கள் காணப்படுகின்றன.

பௌத்தம்

  • தமிழகத்தில் பௌத்தம் பரவியதற்குச் சான்றாக பாண்டிய நாட்டில் சில நினைவுச் சின்னங்கள் உள்ளன.
  • குகைகளில் காணப்படும் 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சின்னங்கள் பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது.
  • வீரசோழியம் (11 ஆம் நூற்றாண்டு இலக்கண நூல்), புத்தரின் செப்புச் சிலைகள் (13 ஆம் நூற்றாண்டு, நாகப்பட்டினம்) ஆகியவை பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன.
  • தியாகனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் (சேலம் மாவட்டம்) இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றன. சூடாமணி விகாரை நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டது.
  • மணிமேகமலை (சீத்தலை சாத்தனார்), மத்தவிலாச பிரகாசனம் (மகேந்திர வர்மன்) ஆகியவை ஆவணங்களாகும்.
  • பௌத்த விகாரை (காவிரிப்பூம்பட்டின அகழ்வாய்வு), 1.03 மீட்டர் உயர புத்தர் சிலை (பத்மாசனகோலம், திருநாட்டியட்டாங்குடி, திருவாரூர் மாவட்டம்) ஆகியவையும் பௌத்தம் சார்ந்த ஆதார எச்சங்கள்.

3. ஆசீவகத்தத்துவத்தின் சாரம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம் குறித்து விவாதிக்க.

ஆசீவகத் தத்துவம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம்

ஆசீவகத் தத்துவம்:

  • ஆசீவகர்கள் வினைப்பயன், மறுபிறவி, முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தைக் கடைப்பிடித்தனர்.
  • அவர்களுடைய தத்துவம் வேதப்பாடல்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் பண்டைய சமஸ்கிருதத் தொகுப்புகள், சமண பௌத்த சமயங்களுக்கு முந்தைய கால ஆய்வுகள் முதலியவற்றில் காணக்கிடைக்கின்றது.

தமிழகத்தில் ஆசீவகம் தோன்றுதல்:

  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடஇந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. தென்னிந்தியாவில் பரவியிருந்தது.
  • தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட்டது.
  • பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆட்சிக்கால கிராம சமூகத்தினர் ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
  • இதுபோன்ற இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் பாலாற்றின் பகுதிகளில் (கர்நாடகா மற்றும் தமிழ்நாடு – வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்) 14ஆம் நூற்றாண்டு வரை ஆசீவகம் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது.

 

சில பயனுள்ள பக்கங்கள்