பாடம் 1.5. குற்றியலுகரம், குற்றியலிகரம்
கற்றவை கற்றபின்
I. ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு குற்றியலுகரச் சொற்களை எழுதுங்கள்.
எண்ணுப்பெயர்கள்
- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து
குற்றியலுகரச் சொற்கள்
- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து
2. குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
வன்தொடர் குற்றியலுகரம்
- மூன்று, எட்டு, பத்து
மென்தொடர் குற்றியலுகரம்
- ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஒன்பது
உயிர்த் தொடர் குற்றியலுகரம்
- ஆறு
3. குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.
எண்ணுப்பெயர்கள் | மாத்திரை அளவு |
ஒன்று | 1 + ½ + ½ = 2 |
இரண்டு | 1 + 1 + ½ + ½ = 3 |
மூன்று | 2 + ½ + ½ = 3 |
நான்கு | 2 + ½ + ½ = 3 |
ஐந்து | 2 + ½ + ½ = 3 |
ஆறு | 2 + ½ = 2½ |
ஏழு | 2 + 1 = 3 |
எட்டு | 1 + ½ + ½ = 2 |
ஒன்பது | 1 + ½ + 1 + ½ = 3 |
பத்து | 1 + ½ + ½ = 2 |
4. கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.
- கு – பாகு, வாகு
- டு – பாடு, சாடு, ஓடு, விடு
- சு – காசு, வீசு, பேசு
- து – வாது, கேது, சாது, மாது
- று – வறு, சேறு, செறு
மதீப்பீடு
குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து
நெடில் தொடர் | ஆய்தத் தொடர் |
ஆறு, ஏடு, காசு | எஃகு |
வன் தொடர் | மென் தொடர் |
உழக்கு, எட்டு | பந்து, கரும்பு |
உயிர்த் தொடர் | இடைத் தொடர் |
விறகு | கொய்து |
பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.
1. பசு, விடு, ஆறு, கரு
விடை : கரு
2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து
விடை : பஞ்சு
3. ஆறு, மாசு, பாகு, அது
விடை : அது
4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு
விடை : அரசு
5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு
விடை : எஃகு
குறுவினா
1. குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்
குற்றியலுகம் = குறுமை + இயல் + உகரம்
2. குற்றியலிகரம் என்றால் என்ன?
முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்
மொழியை ஆள்வோம்
தொகைச் சொற்களை விரித்து எழுதுக.
- இருதிணை : உயர்திணை, அஃறிணை
- முக்கனி : மா, பலா, வாழை
- முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
- நாற்றிசை : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
- ஐவகைநிலம் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
- அறுசுவை : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு
இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
(எ.கா.)
அரசுக்குத் தவறாமல் _________ செலுத்த வேண் டும்.
ஏட்டில் எழுதுவது _________ வடிவம்.
விடை : வரி
1. மழலை பேசும் _________ அழகு.
இனிமைத் தமிழ் _________ எமது.
விடை : மொழி
2. அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை _________ பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி _________
விடை : நடை
3. நீ அறிந்ததைப் பிறருக்குச் _________
எழுத்துகள் தொடர்ந் து நின்று பொருள் தருவது _________
விடை : சொல்
4. உழவர்கள் நாற்று _________ வயலுக்குச் செல்வர் .
குழந்தையை மெதுவாக _________ என்போம்.
விடை : நட
5. நீதி மன்றத்தில் கொடுப்பது _________
நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு _________
விடை : வழக்கு
நிற்க அதற்குத் தக…
I. கலைச்சொல் அறிவோம்.
- ஊடகம் – Media
- பருவ இதழ் – Magazine
- மொழியியல் – Linguistics
- பொம்மலாட்டம் – Puppetry
- ஒலியியல் – Phonology
- எழுத்திலக்கணம் – Orthography
- இதழியல் – Journalism
- உரையாடல் – Dialogue
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடத்தை நிரப்பு
1. சார்பெழுத்து ______ வகைப்படும்
விடை: பத்து
2. உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் _________ எனப்படும்.
விடை: முதலெழுத்துகள்
3. குறுமை+இயல்+உகரம் = __________
விடை: குற்றியலுகரம்
4. ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை __________ என்பர்.
விடை: முற்றியலுகரம்
5. குறில் எழுத்துகளைக் குறிப்பது ______
விடை: கரம்
6. நெடில் எழுத்துகளைக் குறிப்பது ______
விடை: கான்
7. குறில், நெடில் எழுத்துகளைக் குறிப்பது ______
விடை: காரம்
8. ஆய்த எழுத்துகளைக் குறிப்பது ______
விடை: கேனம்
9. குற்றியலுகரம் ______ வகைப்படும்
விடை: 6
10. நெடில்தொடர்க் குற்றியலுகரம் ______ சொற்களாக மட்டும் அமையும்.
விடை: ஈரெழுத்துச்
11. ______ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
விடை: வ்
11. ______ தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.
விடை: குற்றியலிகரம்
I. சிறுவினா
1. முற்றியலுகரம் என்றால் என்ன?
ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்
(எ.கா) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு
2. குற்றிலியலுகரத்தின் வகைகள் யாவை
குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படும் நெடில்தொடர் குற்றியலுகரம்தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும். (எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு . ஆயுதத்தொடர் குற்றியலுகரம்ஆ ய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். (எ.கா.) எஃகு, அஃது உயிர்த்தொடர் குற்றியலுகரம்தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். (எ.கா.) அரசு (ர = ர் + அ) கயிறு (யி = ய் + இ) வன்த்தொடர் குற்றியலுகரம்வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளை த் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் (எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று மென்த்தொடர் குற்றியலுகரம்மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்த்தொடர் க் குற்றியலுகரம்’ எனப்படும். (எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று இடைத்தொடர் குற்றியலுகரம்இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந் து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். (எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு |
4. தமிழ் எழுத்துக்களின் வகைகள் யாவை?
தமிழ் எழுத்துக்களை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிக்கலாம்
5. முதலெழுத்துக்கள் என்றால் என்ன?
உயிர் பன்னிரணடு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும்.
6. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.
- உயிரமெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஒளகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
7. தமிழில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய எழுத்துச் சாரியைகளைப் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?
- குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’ (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
- நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘கான்’ (எ.கா.) ஐகான், ஔகான்
- குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்’ (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்
- ஆய்த எழுத்தைக் குறிக்க ‘கேனம்’ (எ.கா.) அஃகேனம்
8. தமிழில் குற்றியலுகரச் சொற்கள் வராத சொற்கள் யாவை?
- ‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
- மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.
சில பயனுள்ள பக்கங்கள்