பாடம் 2.4 விலங்குகள் உலகம்
அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே செடி கொடிகள் வளர முடியாத தீவுப் பகுதி ஒன்று இருந்தது. அத்தீவை மரங்கள் அடர்ந்த காடாக மாற்ற விரும்பினார் ஒருவர். பேராசிரியர் ஜாதுநாத் என்பவரின் ஆலோசனைப்படி நாள்தோறும் நூற்றுக்கணக்கான சிவப்புக் கட்டெறும்புகளை அந்தத் தீவில் கொண்டு வந்து விட்டார். அதனால் மண்ணின் தன்மை மாறியது. அதன் பிறகு தமக்குக் கிடைத்த விதைகளை எல்லாம் கொண்டு வந்து அத்தீவில் நட்டு வைத்தார். ஆற்றில் இருந்து நாள்தோறும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றினார். அவர் நட்ட விதைகள் முளைத்து மரங்களாக வளரத் தொடங்கியபோது அவற்றில் பறவைகள் வந்து தங்கின. பறவைகளின் எச்சத்தால் பரவிய விதைகள் மூலம் காடு மேலும் வளர்ந்தது. அங்கு முயல், மான், காட்டுமாடு முதலிய விலங்குகள் பலவும் வந்தன. பிறகு யானைக் கூட்டம் வந்தது. நிறைவாக, காட்டின் வளம் என்று குறிக்கப்படும் புலிகளும் வந்து தங்கின. இவ்வாறு தனி ஒரு மனிதனாக ஒரு காட்டையே உருவாக்கியவர்தான் இந்திய வனமகன் என்று அழைக்கப்படும் மாத்தி பயேர், இவருக்கு இந்திய அரசு 2015ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. மேலும், கௌகாத்தி பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி உள்ளது. |
மதிப்பீடு
எவையேனும் மூன்று வனவிலங்குகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக
யானைகள்
- ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை. ஆனால் ஆப்பிரிக் யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.
- யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும்.
- இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.
- யானைகள் தங்குத் தேவையான தண்ணீர், உணவு ஆகியவற்றிற்காக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.
- ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவாக உட்கொள்ளும்.
- அதற்குக் குடிக்க அறுபத்ததைந்து லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
- யானை மிகுந்த பாசமும் நினைவாற்றும் கொண்ட விலங்கு.
கரடி
- யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவது இல்லை.
- அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போதுதான் மனிதர்களைத் தாக்குகிறது.
- மேலும் யானைக்குக் கண்பார்வை குறைவு; கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.
- கரடியின் உடலைப் போற்றி இருக்கும்.
- நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்.
- புலி மனிதர்களைத் தாக்குவதில்லலை.
- இரவில் மட்டுமே வேட்டடையாடும் தன்மமை கொண்டது.
புலி
- புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை.
- ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும்.
- மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லலாது.
- கருவுற்ற புலியானது தொண்ணூறு நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும்.
- அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும்.
- அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்ககான எல்லைகளையும் பிரித்துத் தனியாக
அனுப்பிவிடும்.
- புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.
- புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே, அதனைப் பண்புள்ள விலங்கென கூறுகின்றனர்
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது
- காது
- தந்தம்
- கண்
- கால்நகம்
விடை : தந்தம்
2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்
- வேடந்தாங்கல்
- கோடியக்கரை
- முண்டந்துறை
- கூந்தன்குளம்
விடை : முண்டந்துறை
3. காட்டாறு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- காடு + ஆறு
- காட்டு + ஆறு
- காட் + ஆறு
- காட் + டாறு
விடை : காடு + ஆறு
4. அனைத்துண்ணி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- அனைத்து + துண்ணி
- அனை + உண்ணி
- அனைத் + துண்ணி
- அனைத்து + உண்ணி
விடை : அனைத்து + உண்ணி
5. நேரம் + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- நேரமாகி
- நேராகி
- நேரம்ஆகி
- நேர்ஆகி
விடை : நேரமாகி
6. வேட்டை + ஆடிய என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
- வேட்டைஆடிய
- வேட்டையாடிய
- வேட்டாடிய
- வேடாடிய
விடை : வேட்டையாடிய
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு _______
விடை : புலி
2. யானைக் கூட்டத்திற்கு ஒரு _______ யானைதான் தலைமை தாங்கும்.
விடை : பெண்
3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் _______
விடை : உடலைப் போர்த்தியிருக்கும் அடர்ந்த முடிகள்
4. தமிழ் நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம் _______
விடை : மேட்டுப்பாளையம்
5. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் _______ ஆகும்
விடை : முண்டந்துறை
6. நன்கு வளர்ந்த கரடியின் எடை _______கிலோ
விடை : 160
7. _______ என்றழைக்கப்படும் விலங்கு புலி
விடை : பண்புள்ள விலங்கு
8. ஆழகில் சிந்த மான் வகை _______
விடை : புள்ளிமான்
9. இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசனாக குறிப்பிடும் விலங்கு _______
விடை : புலி
10. காட்டு விலங்குகளுக்கு _______ தருவது சட்டப்படி குற்றமாகும்
விடை : துன்பம்
11. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் _______
விடை : கோவை
12. தமிழ்நாட்டில் _______ வகையான யானைகள் உள்ளன
விடை : இரு
13. காட்டு விலங்குகளின் உறைவிடம் ________
விடை : முண்டந்துறை புலிகள் காப்பகம்
14. மனிதனின் முதல் இருப்பிடம் _______
விடை : காடு
15. முண்டந்தறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு _______
விடை : 895 சதுர மீட்டர்
பிரித்து எழுதுக
- நினைவாற்றல் = நினைவு + ஆற்றல்
- பண்புள்ள = பண்பு + உள்ள
- அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி
குறுவினா
1. முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றி எழுதுக
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் ஆகும். 895 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு போன்ற அரியவகை விலங்கள் வாழ்கின்றன
2. உலகில் யானை வகைகள் எத்தனை? அவை யாவை?
உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன.
- ஆசிய யானை
- ஆப்பிரிக்க யானை
3. புலியினை பண்புள்ள விலங்கு எனக் கூறக்காரணம் யாது?
புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவது இல்லை. எனவே, அதனைப் பண்புள்ள விலங்கு என்று நாங்கள் கூறுவோம்.
4. யானைகள் அடிக்கடி இடம்பெயரக் காரணம் யாது?
யானைகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்
5. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் – மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)
6. கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள் யாவை?
கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வனவியல் (BSc. Forestry), முதுநிலை வனவியல் (MSc. Forestry) ஆகிய படிப்புகள் உள்ளன.
7. உலகில் உள்ள சிங்கங்களின் வகைகளை கூறுக.
உலகில் ஆசியச் சிங்கம், ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன.
8. இந்தியாவில் ஆசியச் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன?
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கிர் சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.
9. இயற்கை விஞ்ஞானிகள் புலியை காட்டுக்கு அரசன் என காரணம் என்ன?
நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.
10. யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?
யானைகள் பொதுவாக மனிதர்க்ளைத் தாக்குவது இல்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன. மேலும் யானைக்குக் கண்பார்வை குறைவு; கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.
11. கரடி அனைத்துண்ணி என அழைக்கப்படுவது ஏன்?
கரடி பழங்கள், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான்கள் என ஆகியவற்றை உண்பதால் ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகிறது
12. மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக
புள்ளிமான், சருகுமான், மிளாமான், வெளிமான்
13. முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றி குறிப்பு எழுதுக
- இது தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம்.
- 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
- இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டுமாடு போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன.
சில பயனுள்ள பக்கங்கள்