Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 நால்வகைக் குறுக்கங்கள் Solution | Lesson 2.5

பாடம் 2.5. நால்வகைக் குறுக்கங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு

  1. அரை
  2. ஒன்று
  3. ஒன்றரை
  4. இரண்டு

விடை : அரை

2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்

  1. போன்ம்
  2. மருண்ம்
  3. பழம் விழுந்தது
  4. பணம் கிடைத்தது

விடை : பணம் கிடைத்தது

3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது

  1. ஐகாரக் குறுக்கம்
  2. ஔகாரக் குறுக்கம்
  3.  மகரக் குறுக்கம்
  4. ஆய்தக் குறுக்கம்

விடை : ஔகாரக் குறுக்கம்

குறுவினா

1. ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?

ஔ, வெள என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

2. சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?

ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை

முதல் = 1 ½ மாத்திரை

இடை = 1 மாத்திரை

இறுதி = 1 மாத்திரை

3. மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

வலம் வந்தான், போலும்

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மூவிடங்களின் குறுகும் குறுக்கம் ________

விடை : ஐகாகரக்குறுக்கம்

2. சொல்லுக்கு முதலில் மட்டுமே குறுகும் குறுக்கம் ________

விடை : ஒளகாகரக்குறுக்கம்

3. ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ________ மாத்திரை அளவில் ஒலிக்கும்.

விடை : ஒன்றரை

4. ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ________ மாத்திரை அளவில் ஒலிக்கும்.

விடை : ஒரு

5. ஆய்தம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது ________

விடை : ஆய்தக்குறுக்கம்

6. ஔகாரம் சொல்லின் ________, ________ வராது.

விடை : இடையிலும், இறுதியிலும்

குறுவினா

1. குறுக்கங்கள் என்றால் என்ன?

சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவை விடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.

2. ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன?

ஔகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஔகாரக்குறுக்கம் எனப்படும்.

3. ஔகாரக்குறுக்கம் வரும் இடங்கள் யாவை?

ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது. சொல்லின் முதலில் மட்டுமே வரும்

எ.கா. ஒளவையார், வெளவால்

4. ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன?

ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

5. ஐகாரக்குறுக்கம் வரும் இடங்கள் யாவை?

சொல்லின் முதல். இடை, கடை ஆகிய இடங்களில் குறுகும்

எ.கா. சைவம், சமையல்

6. மகரக்குறுக்கம் என்றால் என்ன?

மகரம் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும்.

எ.கா. வலம் வந்தான்

7. ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?

ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

எ.கா. கஃறீது

கூடுதல் தகவல்கள்

எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.

  1. மகளிர் x ஆடவர்
  2. அரசன் x அரசி
  3. பெண் x ஆண்
  4. மாணவன் x மாணவி
  5. சிறுவன் x சிறுமி
  6. தோழி x தோழன்

படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக.

ஒன்றன்பால்ஆண்பால்ஒன்றன்பால்
பெண்பால்பலர்பால்பலவின்பால்

பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.

1. கண்ணகி சிலம்பு அணிந்தான்.

விடை : கண்ணகி சிலம்பு அணிந்தாள்.

2. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.

விடை : கோவலன் சிலம்பு விற்கப் போனான்

3. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.

விடை : அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.

4. பசு கன்றை ஈன்றன.

விடை : பசு கன்றை ஈன்றது.

5. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.

விடை : மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

6. குழலி நடனம் ஆடியது.

விடை : குழலி நடனம் ஆடினாள்

கடிதம் எழுதுதல்

  • தொலைவில் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள உதவும் ஊடகங்களுள் ஒன்று கடிதம் ஆகும். கடிதம் எழுதுதல் ஒரு தனிக்கலையாகும்.
  • கடிதம் இரண்டு வகைப்படும். அவை உறவுமுறைக் கடிமம், அலுவலசுக் கடிதம் என்பவை ஆகும்.

நம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எழுதப்படும் கடிதம் உறவுமுறைக் கடிதம் ஆகும். இக்கடிதம் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

  1. இடமும் தேதியும்
  2. விளி
  3. உடல்பகுதி
  4. கையொப்பம்
  5. உறைமேல் முகவரி ஆகியவை ஆகும்.

இடமும் தேதியும் கடிதத்தின் வலது மேல்பகுதியில் எழுதப்பட வேண்டும்.

விளி, கடிதத்தின் இடப்பக்கம் இடம் பெறும். கடிதம் யாருக்கு எழுதப்படுகிறதோ அவரை நோக்கிக் கூறுவதாக விளி அமையும். (எ.கா.) அன்புள்ள நண்பா,

கடிதத்தின் உடல் பகுதியில் சொல்ல வேண்டிய செய்தியைத் தெளிவாக எழுதவேண்டும்.

கையொப்பம், கடிதம் முடியும்போது வலப்புறத்தின் கீழ்ப்பகுதியில் இடம்பெறும்.

(எ.கா.)

இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
பா. இன்பன்

கடித உறையின்மேல் இடம்பெற வேண்டிய பெறுநர் முகவரியைக் கடிதத்தின் இறுதியில் எழுதுவது மரபு. பெயரில் தொடங்கி முழு முகவரியையும் அஞ்சல் குறியீட்டு எண் படன் எழுத வேண்டும்.

கடிதம் எழுதுக.

நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.

வெங்கடேஸ்வரபுரம்
02.06.2025

அன்புள்ள நண்பா,

நானும் என் பெற்றோரும் இங்கே நலமாக இருக்கிறோம். அதுபோல் அங்கு நீயும் உன் பெற்றோரும் நலமாக இருக்கிறீர்களா?  நான் இங்கு நன்றாகப் படிக்கிறேன். நீயும் அங்கு நன்றாகப்  படிப்பாய் எண்ணுகிறேன்.

கடந்த வாரம் குற்றாலம் அழகைக் என்று நான் குடும்பத்தினருடன் சென்றேன். அங்கு உள்ள நீர்வீழச்சியில் குளிக்க அருமையாக இருந்தது. மேலும் குற்றாலச் சாரலில் ரசிக்க அண்டை மாநிலத்தவர், வெளிநாட்டுப் பயணிகள் பலரும் வந்தனர். அங்குள்ள பூங்காவில் நானும் என் தங்கையும் விளையாடினோம். நீீ அங்கு உன் குடும்பத்துடன் வருகை தந்து மகிழ்வாயாக.

நீ என் கடிதம் கண்டு அவசியம் பதில் எழுத வேண்டும். உன் பதில் மடலைக் காண காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
உன் அன்புள்ள தோழன்,

அ.சங்கரலிங்கம்

உறை மேல் முகவரி .

திரு.ப.எழிலன்,
5/55, காந்தி நகர்,
கோவில்பட்டி

மொழியோடு விளையாடு

வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க.

  • கல்
  • புதையல்
  • இலை
  • கடலை
  • கடல்
  • கதை
  • புல்
  • இயல்
  • தையல்
  • கலை
  • இல்லை

சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.

வாழைதயிர்கூடு
குருவிகொய்யாசோறு
விளையாட்டுகூட்டம்அவரை
திடல்பழம்போட்டி
பாட்டு
பறவைகாய்
  1. வாழை + காய் = வாழைக்காய்
  2. வாழை + பழம் = வாழைப்பழம்
  3. குருவி + கூடு = குருவிக்கூடு
  4. குருவி +  கூட்டம் = குருவிக்கூட்டம்
  5. விளையாட்டு + திடல்= விளையாட்டுத்திடல்
  6. விளையாட்டு + போட்டி = விளையாட்டுப்போட்டி
  7. தயிர் + கூடு = தயிரக்கூடு
  8. தயிர் + சோறு = தயிர்ச்சோறு
  9. கொய்யா + காய் = கொய்யாக்காய்
  10. கொய்யா + பழம் = கொய்யாப்பழம்
  11. அவரை +காய் = அவரைக்காய்
  12. பாட்டு + போட்டி = பாட்டுப்போட்டி
  13. பறவை + கூடு = பறைவக்கூடு
  14. பறவை + கூட்டம் = பறவைக்கூட்டம்

விடுகதைகளுக்கு விடை எழுதுக.

1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல. வளைந்த வாலுண்டு; புலி அல்ல. கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல. முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?

விடை : அணில்

2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது. முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்?

விடை : குதிரை

3. வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல. மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?

விடை : கொக்கு

நிற்க அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்.

  1. உவமை – Parable
  2. இயற்கை வளம் – Natural Resource
  3. வனவியல் – Forestry
  4. வனப் பாதுகாவலர் – Forest Conservator
  5. தீவு – Island
  6. காடு – Jungle
  7. வன விலங்குகள் – Wild Animals
  8. பல்லுயிர் மண்டலம் – Bio Diversity

சில பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment