பாடம் 3.4 ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை
- 40
- 42
- 44
- 46
விடை : 42
2. எழுதினான் என்பது
- பெயர்ப் பகுபதம்
- வினைப் பகுபதம்
- பெயர்ப் பகாப்பதம்
- வினைப் பகாப்பதம்
விடை : வினைப் பகுபதம்
3. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.
- நான்கு
- ஐந்து
- ஆறு
- ஏழு
விடை : ஆறு
4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
விடை : இடைநிலை
பொருத்துக
1. பெயர்ப் பகுபதம் | அ. வாழ்ந்தான் |
2. வினைப் பகுபதம் | ஆ. மன் |
3. இடைப் பகாப்பதம் | இ. நனி |
4. உரிப் பகாப்பதம் | ஈ. பெரியார் |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
சரியான பகுபத உறுப்பை எழுதுக.
1. போவாள் = போ + வ் + ஆள்
- போ – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி
2. நடக்கின்றான் – நட + க் + கின்று + ஆன்
- நட – பகுதி
- க் – சந்தி
- கின்று – நிகழ்கால இடைநிலை
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக.
1. பார்த்தான் = பார் + த் + த் + ஆன்
- பார் – பகுதி
- த் – சந்தி
- த் – நிகழ்கால இடைநிலை
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
2. பாடுவார் = பாடு + வ் + ஆர்
- பாடு – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஆர் – ஆண்பால் வினைமுற்று விகுதி
குறுவினா
1. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?
ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒரு மொழி என்பர்
2. பதத்தின் இருவகைகள் யாவை?
பகுபதம், பகாப்பதம் என இரு வகைப்படும்
3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்
சிறுவினா
1. விகுதி எவற்றைக் காட்டும்?
திணை, பால், முற்று, எச்சம் ஆகியவற்றை காட்டும்
2. விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
(எ.கா.)
வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் + அன் + அன்
- வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
- த் – சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அன் – சாரியை
- அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.
3. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும்
- பொருட் பெயர்ப்பகுபதம்
- இடப் பெயர்ப்பகுபதம்
- காலப் பெயர்ப்பகுபதம்
- சினைப் பெயர்ப்பகுபதம்
- பண்புப் பெயர்ப்பகுபதம்
- தொழில்பெயர்ப்பகுபதம்
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. பொருந்தா இணையை தேர்ந்தெடு
- கா- சோலை
- கூ- பூமி
- கை- இறந்துபோ
- கோ-அரசன்
விடை : கை- இறந்துபோ
2. பொருந்தா இணையை தேர்ந்தெடு
- சீ- இகழ்ச்சி
- சே- உயர்வு
- சோ- மதில்
- தா- நெருப்பு
விடை : தா- நெருப்பு
3. பொருந்தா இணையை தேர்ந்தெடு
- தூ- அன்பு
- தே- கடவுள்
- தை- தைத்தல்
- நா- நாவு
விடை : தூ- அன்பு
4. பொருந்தா இணையை தேர்ந்தெடு
- நை- இழிவு
- நோ- மாமரம்
- பா- பாடல்
- பூ- மலர்
விடை : நோ- மாமரம்
4. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்
- தொல்காப்பியர்
- பவணந்தி முனிவர்
- அகத்தியர்
- காளமேகப்புலவர்
விடை : பவணந்தி முனிவர்
5. வேலன் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- வேல் + லன்
- வேல் + அன்
- வேல் + அனன்
- வேல் + லனன்
விடை : வேல் + அன்
6. பெயர்ப்பகுபத்தினை ________ வகைப்படுத்துவர்.
- ஐந்து
- ஆறு
- நான்கு
- மூன்று
விடை : ஆறு
7. எதிர் கால இடைநிலைக்கு சான்று தருக
- இல்
- கின்று
- ஆல்
- கின்
விடை : கின்று
8. பகுபத உறுப்புகள் _______ வகைப்படும்.
- ஐந்து
- நான்கு
- ஆறு
- மூன்று
விடை : ஆறு
9. பகுதி ___________ அமையும்.
- வினாவாக
- விடையாக
- கட்டளையாகவே
- காலமாகவே
விடை : கட்டளையாகவே
9. பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம்
- இடைநிலை
- சந்தி
- சாரியை
- விகாரம்
விடை : விகாரம்
10. அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக அமைவது
- பகுபதம்
- இடைநிலை
- சந்தி
- பகாபதம்
விடை : பகாபதம்
11. உரிப் பகாப்பதத்தில் பொருந்தாது
- உறு
- நவ
- நனி
- கழி
விடை : நவ
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மீ என்னும் பொருள் தரும் சொல் _______
விடை : வான்
2. மை என்னும் பொருள் தரும் சொல் _______
விடை : அஞ்சனம்
3. வெள என்னும் பொருள் தரும் சொல் _______
விடை : கவர்
4. மூ என்னும் பொருள் தரும் சொல் _______
விடை : மூப்பு
5. யா என்னும் பொருள் தரும் சொல் _______
விடை : அகலம்
6. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது _______ ஆகும்.
விடை : இடைநிலை
7. பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம் பெறும் மெய்யெழுத்து _______ எனப்படும்.
விடை : சந்தி
8. இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம் பெறும் அசைச்சொல் _______ எனப்படும்.
விடை : சாரியை
பொருத்துக
1. ஆ | அ. இறைச்சி |
2. ஈ | ஆ. அம்பு |
3. ஊ | இ. தலைவன் |
4. ஏ | ஈ. பசு |
5. ஐ | உ. கொடு |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ |
சிறு வினா
1. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் யார்?
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் ஆவார்.
2. பகாப்பதம் என்றால் என்ன?
பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும். இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.
பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.
மொழியை ஆள்வோம்
அறிந்து பயன்படுத்துவோம். பொதுவாக ஒரு தொடர் மூன்று பகுதிகளாக அமையும். அவை 1. எழுவாய் 2. பயனிலை 3. செயப்படுபொருள் எழுவாய் ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய். (எ.கா.) நீலன் பாடத்தைப் படித்தான். இத்தொடர்களில் நீலன், பாரி, புலி ஆகியன எழுவாய்கள். பயனிலை ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை. (எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான். இத்தொடர்களில் கட்டினான், யார், மன்னன் ஆகியன பயனிலைகள். செயப்படுபொருள் யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள். (எ.கா.) நான் கவிதையைப் படித்தேன். இத்தொடர்களில் கவிதை, புத்தகம், நெல்லிக்கனி ஆகியன செயப்படு பொருள் |
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.
- வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
- பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
- கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.
- திருக்குறளை எழுதியவர் யார்?
- கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.
எழுவாய் | பயனிலை | செயப்படுபொருள் |
வீரர்கள் | நாட்டைக் | காத்தனர் |
பொதுமக்கள் | அந்நியத்துணிகளைத் | தீயிட்டு எரித்தனர் |
கொற்கைத் துறைமுகத்திலே | பாண்டியனுடைய மீனக்கொடி | பறந்தது |
திருக்குறளை | எழுதியவர் | யார்? |
கபிலர் | குறிஞ்சிப்பாட்டை | எழுதிய புலவர் |
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.
- கம்பர் இராமாயணத்தை எழுதினார்
- ராமு கவிதை எழுதினான்
- கீதா ஓவியம் வரைந்தாள்
- ஒளவையார் ஆத்திசூடி இயற்றினார்
- வீரர்கள் நாட்டைக் காத்தனர்
இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.
(எ.கா.) வீடு சென்றான்
- வீடு + கு + சென்றான் – வீட்டுக்குச் சென்றான்
1. மாடு புல் கொடுத்தார் = _______
- மாடு + கு + புல் கொடுத்தார் = மாடுக்குப் புல் கொடுத்தார்
2. பாட்டு பொருள் எழுது = _______
- பாட்டு + கு + பொருள் எழுது = பாட்டுக்குப் பொருள் எழுது
3. செடி பாய்ந்த நீர் = _______
- செடி + கு + பாய்ந்த நீர் = செடிக்குப் பாய்ந்த நீர்
4. முல்லை தேர் தந்தான் பாரி = _______
- முல்லை + கு + தேர் தந்தான் பாரி = முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
5. சுவர் சாந்து பூசினாள் = _______
- சுவர் + கு + சாந்து பூசினாள் = சுவர்க்குச் சாந்து பூசினாள்
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
கண் | அழகு |
மண் | |
விண் | உண்டு |
பண் |
|
|
அகம் என முடியும் சொற்களை எழுதுக.
நூலகம் | மருந்தகம் |
எழிலகம் | அலுவலகம் |
தலைமையகம் | செயலகம் |
கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.
1. திருக்குறள் _______ பால்களைக் கொண்டது.
விடை : ௩ (3)
2. எனது வயது _______
விடை : க௩ (13)
3. நான் படிக்கும் வகுப்பு _______
விடை : எ (7)
4. தமிழ் இலக்கணம் _______ வகைப்படும்.
விடை : ரு (5)
5. திருக்குறளில் _______ அதிகாரங்கள் உள்ளன.
விடை : க௩௩ (133)
6. இந்தியா _______ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
விடை : க௯௪எ (1947)
குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.
தி | ரு | ப் | பூ | ர் | கு | ம | ர | ன் |
ரு | தா | கா | ன் | க | க் | க | நா | லை |
வ | ந் | ம | யா | ர் | டு | ட் | க | ம |
ள் | ஜி | ரா | ஜா | யா | ர் | ட | ம் | ன |
ளி | ஜா | ச | ர | தி | யா | பொ | மை | ன் |
ய | ரா | ர் | னா | ர | ப | ம் | த | சி |
ம் | இ | டி | ண் | பா | ர | ம | மி | ற |
மை | வா | ஞ் | சி | நா | த | ன் | ழி | ப் |
ர் | யா | சி | ச் | நா | லு | வே | ல் | பு |
1. மூதறிஞர் _______
விடை : இராஜாஜி
2. வீரமங்கை _______
விடை : வேலுநாச்சியார்
3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் _______
விடை : கட்டபொம்மன்
4. வெள்ளையரை எதிர்த்த தீரன் _______
விடை : சின்னமலை
5. கொடிகாத்தவர் _______
விடை : திருப்பூர் குமரன்
6. எளிமையின் இலக்கணம் _______
விடை : கக்கன்
7. தில்லையாடியின் பெருமை _______
விடை : வள்ளியம்மை
8. கப்பலோட்டிய தமிழர் _______
விடை : சிதம்பரனார்
9. பாட்டுக்கொரு புலவன் _______
விடை : பாரதியார்
10. விருதுப்பட்டி வீரர் _______
விடை : காமராஜர்
11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி _______
விடை : நாகம்மை
12. மணியாட்சியின் தியாகி _______
விடை : வாஞ்சிநாதன்
நிற்கு அதற்குத் தக
கலைச்சொல் அறிவோம்.
- கதைப்பாடல் – Ballad
- பேச்சாற்றல் – Elocution
- துணிவு – Courage
- ஒற்றுமை – Unity
- தியாகம் – Sacrifice
- முழக்கம் – Slogan
- அரசியல் மேதை – Political Genius
- சமத்துவம் – Equality
சில பயனுள்ள பக்கங்கள்