பாடம் 1.2 தேயிலைத் தோட்டப் பாட்டு
நூல்வெளி
மக்கள் இயல்பாகத் தங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களைப் பாடல்கள், கதைப்பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துகின்றனர். பல்வேறு பொருள்கள் பற்றிய இவ்வெளிப்பாடுகள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சிறுசிறு நூல்களாக வெளியிடப்பட்டன. வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள் என்று இந்நூல்கள் பலவாறாக அழைக்கப்பட்டன. பாரத மக்களின் பரிதாபச் சிந்து என்ற தேயிலைத் தோட்டப் பாட்டு என்னும் நூலில் இருந்து ஒரு பகுதி நமக்குப் பாமாகத் தரப்பட்டுள்ளது. |
சொல்லும் பொருளும்
- ராஜரீகம் – ஆட்சிமுறை
- ரட்சித்து – காப்பாற்றி
- பிராணி – விலங்கு
- பாக்கி – கடன்
- அருஞ்சேகரம் – அரிய சேமிப்பு
- தயவு – இரக்கம்
- லங்கைத்தீவு – இலங்கை
- கட்டுப்பாடு – உறுதி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மக்களுக்கு வருமானம் கொடுத்து அவர்களைக் காப்பாற்றியது
- பற்றுவரவு
- சிக்கனம்
- கைத்தொழில்
- கப்பல்
விடை: கைத்தொழில்
2. முற்காலத்தில் இந்திய மக்கள் துன்பப்பட்டதற்குக் காரணம் _______ இல்லாமை
- விளையாட்டு
- கல்வி
- கலைகள்
- முயற்சி
விடை: கல்வி
3. நாடெங்கும் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
- நா + டெங்கும்
- நாடு + டெங்கும்
- நா + எங்கும்
- நாடு + எங்கும்
விடை: நாடு + எங்கும்
4. குறை + எனவே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- குறையெனவே
- குறைஎனவே
- குறையனவே
- குறைவெனவே
விடை: குறையெனவே
குறுவினா
இந்திய நாடு எவற்றில் சிறந்து விளங்கியது?
இந்திய நாடு நாகரிகத்திலும் ஆட்சி முறையிலும் பிற நாடுகள் பாராட்டுமாறு அரிய சேமிப்பைப் போல அமைந்த செல்வங்கள் நிறையப்பெற்றுச் சிறந்து விளங்கியது.
சிறுவினா
1. மக்கள் விலங்குகளைப் போல வாழக் காரணம் என்ன?
|
2. மக்கள் குறையில்லாமல் வாழ, தேயிலைத் தோட்டப் பாட்டு கூறும் வழி யாது?
|
சிந்தனை வினா
கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் கூறும் வழிமுறைகள் யாவை?
|
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பஞ்சம் காரணமாகத் தமிழர்கள் ஆங்கியலேயர்களின் குடியேற்ற நாடுகளுக்கு பிழைக்க செனற காலம்
- 18 நூற்றாண்டு
- 19 நூற்றாண்டு
- 20 நூற்றாண்டு
- 17 நூற்றாண்டு
விடை: 19 நூற்றாண்டு
2. ரட்சித்து என்பதன் எதிர்ச்சொல்
- காப்பாற்றி
- பெருமை
- சிறுமை
- காப்பாற்றாமல்
விடை: காப்பாற்றாமல்
3. பாக்கி என்பதன் பொருள்
- கடன்
- மீதி
- தொகை
- சேமிப்பு
விடை: கடன்
சில பயனுள்ள பக்கங்கள்