Tamil Nadu 7th Standard Tamil Book Term 2 கவின்மிகு கப்பல் Solution | Lesson 1.2

பாடம் 1.2. கவின்மிகு கப்பல்

கவின்மிகு கப்பல் – பாடல்

உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்
மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய

– மருதன் இளநாகனார் (அகநானூறு)

நூல்வெளி

மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.

கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே.

மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.

இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.

இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  1. உரு – அழகு
  2. வங்கம் – கப்பல்
  3. போழ – பிளக்க
  4. எல் – பகல்
  5. வங்கூழ் – காற்று
  6. கோடு உயர் – கடை உயர்ந்த
  7. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
  8. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் _________.

  1. நிலம்
  2. நீர்
  3. காற்று
  4. நெருப்பு

விடை : காற்று

2. மக்கள் _________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

  1. கடலில்
  2. காற்றில்
  3. கழனியில்
  4. வங்கத்தில்

விடை : வங்கத்தில்

3. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது _____________.

  1. காற்று
  2. நாவாய்
  3. கடல்
  4. மணல்

விடை : கடல்

4. பெருங்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

  1. பெரு + கடல்
  2. பெருமை + கடல்
  3. பெரிய + கடல்
  4. பெருங் + கடல்

விடை : பெருமை + கடல்

5. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

  1. இன்றுஆகி
  2. இன்றிஆகி
  3. இன்றாகி
  4. இன்றாஆகி

விடை : இன்றாகி

6. எதுகை இடம்பெறாத இணை ____________.

  1. இரவு – இயற்கை
  2. வங்கம் – சங்கம்
  3. உலகு – புலவு
  4. அசைவு – இசைவு

விடை : இரவு – இயற்கை

III. பொருத்துக

1. வங்கம்அ. பகல்
2. நீகான்ஆ. கப்பல்
3. எல்இ. கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரிஈ. நாவாய் ஓட்டுபவன்
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

IV. குறு வினா

1. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?

நாவாயின் தோற்றம் உலகம் இடம்பெயர்ந்தது போன்று இருந்ததாக அகநானூறு கூறுகிறது

2. நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?

இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்து நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று துணைசெய்கிறது.

V. சிறுவினா

கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?

உலகம் இடம்பெயர்ந்தது போன்று அழகிய தோற்றமுடையது நாவாய்.

அது புலால் நாற்றம் உடைய கடலின் நீரைப் பிரிந்து பிளந்து கொண்டு செல்லும்.

இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.

உயர்ந்த தரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான் என கடலின் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு விளக்குகிறது. 

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் _________

விடை : அகநானூறு

2. அகநானூறு _________ நூல்களுள் ஒன்று

விடை : எட்டுத்தொகை

3. மருத்திணை பாடுவதில் வல்லவர் _________

விடை : மருதன் இளநாகனார்

4. கலங்கரை விளக்கம் என்னும் பொருள் தரும் சொல் _________

விடை : மாட ஒள்ளெரி

5. கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் _________

விடை : மருதன் இளநாகனார்

6. அகநானூறு _________ பாடல்களை கொண்டுள்ளது.

விடை : 400

7. அகநானூறு _________ என்றும் அழைப்பர்

விடை : நெடுந்தொகை

II. பிரித்து எழுதுக

  1. புலவுத்திரை = புலவு + திரை
  2. பெருங்கடல் =  பெருமை + கடல்
  3. அகநானூறு = அகம் + நானூறு
  4. புறநானூறு = புறம் + நானூறு

III. பொருத்துக

1. உருஅ. காற்று
2. போழஆ. கரை உயர்ந்த
3. வங்கூழ்இ. அழகு
4. கோடு உயர்ஈ. பிளக்க
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

IV. குறு வினா

1. புலால் நாற்றமுடையது எது?

அலை வீசும் பெரிய கடல் நீர் புலால் நாற்றமுடையது

2. கப்பல் என்பதற்கும் பாடலில் இடம் பெறும் வேறு சொல் எது?

கப்பல் என்பதற்கும் பாடலில் இடம் பெறும் வேறு சொல் – வங்கம்

3. மருதன் இளநாகனார் பெயர்க்காரணம் கூறு

மருத்த்திணை பாடுவதில் வல்வர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்

4. மருதன் இளநாகனார் பற்றி குறிப்பு எழுதுக?

  • மருதன் இளநாகனார் சங்காலப்புலவர்களுள் ஒருவர்
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களை பாடியவர்.
  • மருத்த்திணை பாடுவதில் வல்வர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

5. அகநானூறு பற்றி குறிப்பு எழுதுக?

  • அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது
  • நெடுந்தொகை எனவும் அழைக்கப்படுகிறது

6. எட்டுத்தொகை நூல்கள் யாவை?

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • பதிற்றுப்பத்து
  • பரிபாடல்
  • கலித்தொகை
  • அகநானூறு
  • புறநானூறு

 

சில பயனுள்ள பக்கங்கள்