Tamil Nadu 7th Standard Tamil Book Term 2 ஆழ்கடலின் அடியில் Solution | Lesson 1.4

பாடம் 1.4. ஆழ்கடலின் அடியில்

7ஆம் வகுப்பு தமிழ், ஆழ்கடலின் அடியில் பாட விடைகள்- 2023

அறிவியல் ஆக்கம் > 1.4. ஆழ்கடலின் அடியில்

நூல்வெளி

அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்.

இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர்.

எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார்.

அவர் எழுதிய “ஆழ்கடலின் அடியில்” என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று.

அதன் மொழிபெயர்ப்பின் சுருக்கம் நமக்குப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மதீப்பிடு

‘ஆழ்கடலின் அடியில்’ கதையைச் சுருக்கி எழுதுக.

முன்னுரை

அறிவியல் புனைகதைகளின் தலைமகன் எனப் புகழ்ப்படுவர் ஜூல்ஸ் வெர்ன். அவர் எழுதிய “ஆழ்கடலின் அடியில்” என்ற புதினத்தின் கதையினைச் சுருக்கிக் காண்போம்.

விலங்கைத் தேடிய பயணம்

கடலில் உலோகத்தலால் ஆன் உடம்பு கொண்ட ஒரு விலங்கு கடலில் செல்வோரைத் தாக்கியது. அதனைக் கண்டுபிடித்து அழிக்க பியரி, ஃபராகட், நெட், கான்சீல் ஆகியோர் கொண்ட குழு நியூயார்க் நகரில் இருந்து போர்க்கப்பலில் செல்கின்றது. அமெரிக்கா முதல் ஜப்பான் வரை மூன்று மாதங்களாகத் தேடியும் அந்த விலங்கு கிடைக்கவில்லை. ஒரு நாள் அந்த விலங்கு இவர்களின் கப்பலைத் தாக்கியது. பீரங்கிக் குண்டுகளும், நெட்டின் ஈட்டியும் அந்த விலங்குகளை எதுவும் செய்ய முடியவில்லை. அது இவர்களைத் தூக்கி வீசியது.

நீர் மூழ்கிக் கப்பல்

அது விலங்கன்று, நீர் மூழ்கிக் கப்பல் என்பதை அவர்கள் அறிந்தனர். அவர்களை நீர் மூழ்கிக் கப்பல் வீரர்கள் சிறைபிடித்தனர். அந்த நீர் மூழ்கிக் கப்பல் பெயர் நாட்டிலஸ் என்றும், அதன் தலைவர் நெமோ என்பதையும், இக்கப்பலை விந்தையான விலங்கு என்று நம்ப வைத்ததையும் நேமோ கூறிவிட்டு, இச்செய்தி அறிநத உங்களை வெளியில் அனுப்ப முடியாது. எனக்கான இந்தத் தனி உலகத்தில் தான் நீங்களும் இருக்க வேண்டும் என்றார். அனைவரும் அச்சப்பட்டனர்.

கப்பலின் இயக்கம்

கப்பலுக்கு தேவையானவை எப்படி உங்களுக்கு கிடைக்கின்று என்று பியரி நெமோவிடம் கேட்டார். அதற்கு மின்சாரம் தயாரிக்க தேவையான கருவிகள் உள்ளன. கப்பலில் மிகப்பெரிய நீர் தொட்டி உள்ளது. அதனை நிரப்பும் போது கப்பல் கடல் அடியிலும் நீர் வெளியேறும் போது மேல் செல்கின்றது. சில நாட்களுக்கு ஒரு முறை கப்பல் மேலே வரும் பொழுது சுவாசிக்கத் தேவையான காற்றைப் புதுப்பித்துக் கொள்ளும், காற்றுச் சேகரிக்கும் நிறைய பைகளும் உள்ளன என்றார்.

மணல் திட்டில் சிக்கிய கப்பல்

ஒரு நாள் மணல் திட்டில் கப்பல் சிக்கி விட்டது. தூரத்தில் தெரிந்த தீவில் காய்கறி வாங்கிவர அவர்களை, நெமோ இசைவளித்தார். அவர்கள் காய்கறிகள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது அத்தீவில் உள்ளவர்கள் துரத்தினார்கள். அவர்களிடம் மாட்டாமல் கப்பல்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் கப்பலை முற்றுகையிட்டனர். கடலின் நீர்மட்டம் உயர கப்பல் மேலே வந்தது.  ஆறு நாள் பேராட்டத்திற்கு பிறகு கப்பல் பயணம் தொடர்ந்தது. கடலுக்கடியில் அவர்கள் செல்லும்போது முத்துக்குளித்துக் கொண்டிருந்த இந்தியர் ஒருவரை சுறாவிடம் இருந்து காப்பாற்றினர். கடலடியின் உன்னத காட்சிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்தனர்.

முடிவுரை

பெரும் கடல் சுழலில் கப்பல் மாட்டிக் கொண்டது மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மயக்க நிலையில் நார்வே நாட்டு மீனவர் குடிசையில் இருந்ததை விழித்து பார்த்தனர் நெமோபும் கப்பலும் என்ன ஆனது என்று தெரியவில்லை.

கூடுதல் வினாக்கள்

1. கடலுக்கு அடியில் கிடக்கும் புதுமைகள் யாவை?

பலவகையான தாவரங்கள், மீன்கள், விலங்குகள், பவளப்பாறைகள், எரிமலைகள்

2. ஜூல்ஸ் வெர்ன் எந் நாட்டைச் சேர்ந்தவர்?

ஜூல்ஸ் வெர்ன் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.

3. ஜூல்ஸ் வெர்ன் எவ்வாறு புகழப்படுகிறார்?

ஜூல்ஸ் வெர்ன் அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுகிறார்.

4. ஜூல்ஸ் வெர்ன் படைத்துள்ள புதினங்கள் யாவை?

  • எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி
  • பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்
  • ஆழ்கடலின் அடியில்

 

சில பயனுள்ள பக்கங்கள்