Tamil Nadu 7th Standard Tamil Book Term 2 இலக்கியவகைச் சொற்கள் Solution | Lesson 1.5

பாடம் 1.5. இலக்கியவகைச் சொற்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் _______.

  1. இயற்சொல்
  2. திரிசொல்
  3. திசைச்சொல்
  4. வடசொல்

விடை : இயற்சொல்

2. பலபொருள் தரும் ஒருசொல் என்பது _______.

  1. இயற்சொல்
  2. திரிசொல்
  3. திசைச்சொல்
  4. வடசொல்

விடை : திரிசொல்

3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி _______.

  1. மலையாளம்
  2. கன்னடம்
  3. சமஸ்கிருதம்
  4. தெலுங்கு

விடை : சமஸ்கிருதம்

II. பொருத்துக

1. இயற்சொல்அ. பெற்றம்
2. திரிசொல்ஆ. இரத்தம்
3. திசைச்சொல்இ. அழுவம்
4. வடசொல்ஈ. சோறு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

III. குறுவினா

1. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?

மண், பொன் என்பன பெயர் இயற்சொல்வகை சொற்கள் ஆகும்

2. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?

பெயர் இயற்சொல். வினை இயற்சொல். இடை இயற்சொல். உரி இயற்சொல்

3. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?

குங்குமம், கமலம் என்பன தற்சமம் வகை வடசொற்கள் ஆகும்

IV. சிறுவினா

1. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்

  • இயற்சொல்
  • திரிசொல்
  • திசைச்சொல்
  • வடசொல்

2. திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.

திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இரு வகைப்படுத்தலாம்.

3. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.

பண்டிகை, கேணி என்பன திசைச் சொற்கள் ஆகும்

தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்த சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. இலக்கண முறைப்படி சொற்கள் ______ வகைப்படும்

  1. 6
  2. 5
  3. 4
  4. 8

விடை: 4

2. சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களில் பொருந்தாதது

  1. மொழி
  2. பதம்
  3. கிளவி
  4. எழுத்து

விடை: எழுத்து

3. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் ________ எனப்படும்.

  1. திரிசொல்
  2. இயற்சொல்
  3. திசைச்சொல்
  4. வடசொல்

விடை: இயற்சொல்

4. கப்பலிற்கு வழங்கப்படும் திரிசொற்களில் பொருந்தாது

  1. வங்கூழ்
  2. வங்கம்
  3. அம்பி
  4. நாவாய்

விடை: வங்கூழ்

5. பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவையாகும்.

  1. இயற்சொல்
  2. திரிசொல்
  3. திசைச்சொல்
  4. வடசொல்

விடை: திசைச்சொல்

6. வடசொல்லிற்கு சான்று

  1. கமலம்
  2. பண்டிகை
  3. உறுபயன்
  4. கப்பல்

விடை: கமலம்

II. பொருத்துக

1. இயற்சொல்சக்கரம்
2. திரிசொல்சன்னல்
3. திசைச்சொல்வங்கூழ்
4. வடசொல்கப்பல்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

III. குறுவினா

1. மொழி என்றால் என்ன?

ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும்.

2. “சொல்” என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் எவை?

மொழி, பதம், கிளவி

3. திரிசொற்கள் என்றால் என்ன?

கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

4. திரிசொற்களுக்கு சான்று தருக

அழுவம், வங்கம்பெயர்த் திரிசொல்
இயம்பினான், பயின்றாள்வினைத் திரிசொல்
அன்ன, மானஇடைத் திரிசொல்
கூர், கழிஉரித் திரிசொல்

5. திசைச்சொற்கள் என்றால் என்ன?

வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.

6. வட சொற்கள் என்றால் என்ன?

வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.

7. தற்சமம் என்றால் என்ன?

கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.

8. தற்பவம் என்றால் என்ன?

லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைச் தற்பவம் என்பர்.

9. இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்?

இலக்கண முறைப்படி பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகைப்படும்

மொழியை ஆள்வோம்

I. கட்டங்களை நிரப்புக.

வேர்ச்சொல்இறந்தகாலம்நிகழ்காலம்எதிர்காலம்
நடநடந்தாள்நடக்கிறாள்நடப்பாள்
எழுதுஎழுதினாள்எழுதுகிறாள்எழுதுவாள்
ஓடுஓடினாள்ஓடுகிறாள்ஓடுவாள்
சிரிசிரித்தாள்சிரிக்கிறாள்சிரிப்பாள்
பிடிபிடித்தாள்பிடிக்கிறாள்பிடிப்பாள்
இறங்குஇறங்கினாள்இறங்குகிறாள்இறங்குவாள்

II. பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.

1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.

  • அமுதன் நேற்று விடுக்கு வந்தான்

2. கண்மணி நாளை பாடம் படித்தாள்.

  • கண்மணி நாளை பாடம் படிப்பாள்

3. மாடுகள் இப்பொழுது புல் மேயும்.

  • மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது

4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.

  • ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்

5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.

  • நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

மொழியோடு விளையாடு

I. குறுக்கெழுத்துப் புதிர்.

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்.

இடமிருந்து வலம்:-

1. அச்சன்

  • தந்தை

2. விஞ்ஞானம்

  • அறிவியல்

4. பரீட்சை

  • தேர்வு

10. லட்சியம்

  • இலக்கு

மேலிருந்து கீழ் :-

1. அதிபர்

  • தலைவர்

3. ஆச்சரியம்

  • வியப்பு

7. ஆரம்பம்

  • தொடக்கம்

12. சதம்

  • நூறு

வலமிருந்து இடம் :-

6. அபாயம்

  • இடர்

8. தேகம்

  • உடல்

13. சரித்திரம்

  • வரலாறு

14. சத்தம்

  • ஒலி

கீழிருந்து மேல் :-

5. ஆதி

  • முதல்

9. உத்தரவு

  • கட்டளை

11. தினம்

  • நாள்

15. சந்தோசம்

  • மகிழ்ச்சி

II. குறிப்புகள் மூலம் ‘மா’ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.

1. முக்கனிகளுள் ஒன்று.

விடை : மா

2. கதிரவன் மறையும் நேரம்.

விடை : மாலை

3. பெருந்திரளான மக்கள் கூடும் நிகழ்வு.

விடை : மாநாடு

4. எழுத்துகளை ஒலிக்க ஆகும் காலஅளவு.

விடை : மாத்திரை

5. அளவில் பெரிய நகரம்.

விடை : மாநகரம்

நிற்க அதற்குத் தக…

I. கலைச்சொல் அறிவோம்

  1. கலங்கரை விளக்கம் – Light house
  2. துறைமுகம் – Harbour
  3. பெருங்கடல் – Ocean
  4. புயல் – Storm
  5. கப்பல் தொழில்நுட்பம் – Marine technology
  6. மாலுமி – Sailor
  7. கடல்வாழ் உயிரினம் – Marine creature
  8. நங்கூரம் – Anchor
  9. நீர்மூழ்கிக்கப்பல் – Submarine
  10. கப்பல்தளம் – Shipyard

 

சில பயனுள்ள பக்கங்கள்