Tamil Nadu 7th Standard Tamil Book Term 2 தமிழ் ஒளிர் இடங்கள் Solution | Lesson 3.4

பாடம் 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

மதிப்பீடு

நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால், சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?

சரசுவதி மகால் நூலகம்

இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருகின்றன. இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர்

செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம்
அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படடையில் தமிழக அரசால் கி.பி. (பொ.ஆ.) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது. வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது “ தமிழ்நாடு “ எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ள து . 5 புலங்களும் 25 துறைகளும் உள்ளன.

உ.வே.சா நூலகம் – சென்னை

கி.பி. (பொ.ஆ.) 1942 இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941
தமிழ் நூல்களும் உள்ளன.

வள்ளுவர் கோட்டம் – சென்னை

இது தான் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை. தமிழக அரசு இதனை நிறுவியது. வள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் உள்ளது. சிலையின் எடை 7000 டன் எடை கொண்டது. தமிழிரின் அடையாளம் இது.

சிற்பக் கலைக்கூடம் – பூம்புகார்

இது அதான் பூம்புகார் சிற்ப கலைக்கூடம் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் சோழர்களின் தலைநகரம். இக்கூடம் எழுநிலை மாடம் கொண்டது. கண்ணகியின் வரலாறை விளக்கும் 49 சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.

இப்படி பல சிறப்புகள் கொண்ட இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்வு செய்க

1. தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

  1. 1980
  2. 1981
  3. 1982
  4. 1983

விடை : 1981

2. உ.வே.சா நூலகம்  தொடங்கப்பட்ட ஆண்டு

  1. 1948
  2. 1941
  3. 1942
  4. 1939

விடை : 1942

3. உ.வே.சா நூலகத்தில் _______ ஓலைச்சுவடிகளும் _______ தமிழ் நூல்களும் உள்ளன.

  1. 2124, 2947
  2. 2425, 2945
  3. 2126, 2943
  4. 2128, 2941

விடை : 2128, 2941

4. வள்ளுவர் கோட்டத்தின் உயரம்

  1. 128
  2. 130
  3. 129
  4. 131

விடை : 128

5. கீழ்த்திசை நூலகம் _______ ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

  1. 1867
  2. 1868
  3. 1869
  4. 1866

விடை : 1869

6. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு _______ கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  1. 3,680
  2. 3,681
  3. 3,682
  4. 3,683

விடை : 3,681

7. மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் _______ குறிப்பிடுகிறது.

  1. மணிமேலை
  2. சீவகசிந்தாமணி
  3. குண்டலகேசி
  4. சிலப்பதிகாரம்

விடை : சிலப்பதிகாரம்

8. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் _______ முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன

  1. 1212
  2. 1122
  3. 2121
  4. 2211

விடை : 1122

9. கீழ்த்திசை நூலகம் தற்போது _______ இயங்கி வருகின்றது.

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
  2. உ.வே.சா நூலகத்தில்
  3. கன்னிமாரா நூலகத்தில்
  4. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில்

விடை : அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்

10. தமிழ்நாட்டின் மைய நூலகம் _______ ஆகும்.

  1. உ.வே.சா நூலகம்
  2. அண்ணா நூற்றாண்டு நூலகம்
  3. தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
  4. கன்னிமாரா நூலகம்

விடை : கன்னிமாரா நூலகம்

11. திருவள்ளுவர் சிலை _______ அன்று திறந்து வைக்கப்பட்டது

  1. 2001 ஜனவரி திங்கள் முதல் நாள்
  2. 1999 ஜனவரி திங்கள் முதல் நாள்
  3. 1998 ஜனவரி திங்கள் முதல் நாள்
  4. 2000 ஜனவரி திங்கள் முதல் நாள்

விடை : 2000 ஜனவரி திங்கள் முதல் நாள்

குறுவினா

1. உ.வே.சா நூலகம் குறிப்பெழுதுக

உ.வே.சா நூலகம் – சென்னை கி.பி. (பொ.ஆ.) 1942 இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

2. கீழ்த்திசை நூலகம் பற்றி குறிப்பு எழுதுக

இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1869ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன. கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் இடம்பெற்றுள்ளன. இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகின்றது.

3. கன்னிமாரா நூலகம் பற்றி குறிப்பு எழுதுக

கி.பி. (பொ.ஆ.) 1 896 இல் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகம் தமிழ் நாட்டின் மைய நூலகம் ஆகும். இஃது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நூலகத்தில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பாதுகாக்கப்படுகிறது. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகின்றது.

 

சில பயனுள்ள பக்கங்கள்