Tamil Nadu 7th Standard Tamil Book Term 3 வயலும் வாழ்வும் Solution | Lesson 1.2

பாடம் 1.2. வயலும் வாழ்வும்

நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.

பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.

அந்நூலில் உள்ள உழவுத்தொழில் பற்றிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  1. குழி – நில அளவைப்பெயர்
  2. சீலை – புடவை
  3. சாண் – நீட்டல் அளவைப்பெயர்
  4. மடை – வயலுக்கு நீர் வரும் வழி
  5. மணி – முற்றிய நெல்
  6. கழலுதல் – உதிர்தல்
  7. சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உழவர் சேற்று வயலில் ________ நடுவர்

  1. செடி
  2. பயிர்
  3. மரம்
  4. நாற்று

விடை : நாற்று

2. வயலில் விளைந்த முற்றிய நெற்பயிர்களை ________ செய்வர்

  1. அறுவடை
  2. உழவு
  3. நடவு
  4. விற்பனை

விடை : அறுவடை

3. தேர்ந்தெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. தேர் + எடுத்து
  2. தேர்ந்து + தெடுத்து
  3. தேர்ந்தது + அடுத்து
  4. தேர்ந்து + எடுத்து

விடை : தேர்ந்து + எடுத்து

4. ஓடை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

  1. ஓடைஎல்லாம்
  2. ஓடையெல்லாம்
  3. ஓட்டையெல்லாம்
  4. ஓடெல்லாம்

விடை : ஓடையெல்லாம்

III. பொருத்துக.

1. நாற்றுஅ. பறித்தல்
2. நீர்ஆ. அறுத்தல்
3. கதிர்இ. நடுதல்
4. களைஈ. பாய்ச்சுதல்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

IV. வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை, எதுகைச் சொற்களை எழுதுக.

மோனைச் சொற்கள்

  • டை – டியோடி
  • டமன்னு – ண்குளிரத்
  • நாத்தெல்லாம் – நாலுநாலா
  • ணிபோல – னதையெல்லாம்
  • சும்மாடும் – சுறுசுறுப்பும்

எதுகைச் சொற்கள்

  • சாலுசாலத் – நாலுநாலா
  • ண்ணரைக் குழி – மண்குளிர
  • ண்டும் – தண்ணீர்பாய
  • லேலங்கடி – ஏலேலோ
  • சேத்துக்குள்ளே – நாத்தெல்லாம்
  • கிக்கத்தி – கலுதையா

V. பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக.

  1. போயி – போய்
  2. பிடிக்கிறாங்க – பிடிக்கிறார்கள்
  3. வளருது – வளர்கிறது
  4. இறங்குறாங்க – இறங்கிறார்கள்
  5. வாரான் – வரமாட்டான்

VI. குறுவினா

1. உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?

நாற்றுப் பறிக்கும்போது உழவர்கள் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர்

2. நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?

கிழகத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெற்கதிரிலிருந்து நெல்மணியைப் பிர்ப்பர்

VII. சிறுவினா

உழவுத் தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக

ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயிலின் மண் குளிருமாறு மடை வழியே நீர் பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.

பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்கு பணம் கொடுத்தனர்.

அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுக் கட்டுகளாக கட்டி தலைக்கு சும்மாடு வைத்து தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கிழகத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.

மாடுகள் மதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

கூடுதல் வினாக்கள்

I. பிரித்து எழுதுக

  1. தாண்டிப்போயி = தாண்டி + போயி
  2. ஒண்ணரைக்குழி = ஒண்ணரை + குழி
  3. சீலையெல்லாம் = சீலை + எல்லாம்
  4. நாத்தெல்லாம் = நாத்து + எல்லாம்
  5. நெற்கதிர் = நெல் + கதிர்
  6. மாடெல்லாம் = மாடம் + எல்லாம்
  7. வளருதம்மா = வளருது + அம்மா

II. வினாக்கள்

1. உலகின் முதன்மையான தொழில் எது?

உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பசி தீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும்.

2. உழவுத்தொழிலின் செயல்பாடுகள் எவை?

  • நிலத்தைத் தெரிவு செய்தல்
  • நாற்றுப் பறித்தல்
  • நாற்று நடுதல்
  • நீர் பாய்ச்சுதல்
  • அறுவடை செய்தல்
  • போரடித்தல்
  • நெல் பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும்.

3. போரடித்தல் என்றால் என்ன?

அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளை பிரிப்பதற்காக மாடுகளை கொண்டு மிதிக்கச்செய்வர். இதற்கு போரடித்தல் என்று பெயர்

4. நாட்டுப்புறப்பாட்டு என்றால் என்ன?

நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் என்படுகிறது

5. வாய்மொழி இலக்கியம் என்று எதனை கூறுவர்?

வாய்மொழி இலக்கியம் என்று நாட்டுப்புறப்பாடலினை கூறுவர்

6. கி.வா. ஜகந்நாதன் எவற்றை தம் நூலில் தொகுத்துள்ளார்?

பல்வேறு தொழில்கள் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.

7. போரடித்தல் என்றால் என்ன?

அறுவடை செய்த நெற்க திர்களைக் க ளத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

8. போரடித்தலின்போது பாடப்படும் பாடலின் சிலவரிகளை எழுதுக.

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது
செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை

(நாட்டுப்புறப்பாடல்)

சில பயனுள்ள பக்கங்கள்