Tamil Nadu 7th Standard Tamil Book Term 3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி Solution | Lesson 1.3

பாடம் 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. திருநெல்வேலி_________ மன்னர்களோடு தொடர்பு உடையது.

 1. சேர
 2. சோழ
 3. பாண்டிய
 4. பல்லவ

விடை : பாண்டிய

2. இளங்கோவடிகள் _________ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.

 1. இமய
 2. கொல்லி
 3. பொதிகை
 4. விந்திய

விடை : பொதிகை

3. திருநெல்வேலி _________ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

 1. காவிரி
 2. வைகை
 3. தென்பெண்ணை
 4. தாமிரபரணி

விடை : தாமிரபரணி

II. பொருத்துக.

1. தண்பொருநைஅ. பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
2. அக்கசாலைஆ. குற்றாலம்
3. கொற்கைஇ. தாமிரபரணி
4. திரிகூடமலைஈ. முத்துக் குளித்தல்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

III. குறுவினா

1. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?

பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி

2. கொற்கை முத்து பற்றிக் கூறுக.

தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது

IV. சிறு வினா

1. திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக.

திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையகா பங்கு வகிப்பது உழவுத்தொழில்.

தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது.

குளத்து பாசனமும், கினற்றும் பாசனமும் கூட பயன்பாட்டில் உள்ளன. இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது

மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.

2. திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.

அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர்

சங்கப்புலவரான மாறோக்கத்து, நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக்கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்

அயல் நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி

3. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக

நெல்லையில் உள்ள தெருக்கள் அதன் பழமைக்குச் சான்றாக உள்ளது.

காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. அரசால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது

மேல வீதியை அடுத்து கூழைக்கடைத்தெரு உள்ளது. அதாவது தானியங்கள் விற்கும்  கடைத்தெரு ஆகும்

முற்காலத்தில் பொன் நாணயங்களை உருவாக்குபவர் வாழ்ந்த இடம் அக்கசாலைத் தெரு. பெரு வணிகம் நடைபெற்ற இடம் பேட்டை

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. குற்றாமலை இலக்கியங்களில் ___________ என வழங்கப்படுகிறது

விடை : திரிகூட மலை

2. தாமிரபரணி நதியினை __________ எனவும் அழைத்தனர்

விடை : தன்பொருநை நதி

3. __________ உற்பத்தியில் தமிழகத்தில் திருநெல்வேலி முதலிடம் வகிக்கின்றது

விடை : நெல்லிக்காய்

4. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் __________ என்னும் துறைமுகம் இருந்தது.

விடை : கொற்கை

5. ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வராய்ச்சியில் பழந்தமிழர்கள் பயன்படுத்திய _______________ கண்டெடுக்கப்பட்டன.

விடை : முதுமக்கள் தாழிகள்

6. வணிகம் நடைபெறும் பகுதியை _______________ என வழங்குதல் மரபு

விடை : பேட்டை

7. வீரராகவர் பெயரில் அமைந்த ஊர் _______________ என வழங்கப்பட்டது

விடை : வீரராகவபுரம்

8. மீனாட்சி அம்மையார் பெயரில் அமைந்த ஊர் _______________ என வழங்கப்பட்டது

விடை : மீனாட்சிபுரம்

II. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று _________ திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர்

 1. திருஞானசம்பந்தர்
 2. சேக்கிழார்
 3. குமரகுருபரர்
 4. திரிகூடராசப்ப கவிராயர்

விடை : திருஞானசம்பந்தர்

2. தண்பொருநைப் புனல் நாடு என்று, திருநெல்வேலியை போற்றியவர்

 1. திருஞானசம்பந்தர்
 2. குமரகுருபரர்
 3. திரிகூடராசப்ப கவிராயர்
 4. சேக்கிழார்

விடை : சேக்கிழார்

3. வேணுவனம் என்பதன் பொருள்

 1. யானைக்கூடம்
 2. நெற்களம்
 3. மூங்கில்காடு
 4. நெல்வயல்

விடை : மூங்கில்காடு

4. குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர்

 1. திருஞானசம்பந்தர்
 2. சேக்கிழார்
 3. குமரகுருபரர்
 4. திரிகூடராசப்ப கவிராயர்

விடை : திரிகூடராசப்ப கவிராயர்

5. தற்போது ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள இடம்

 1. கன்னியாகுமரி
 2. தூத்துக்குடி
 3. திருநெல்வேலி
 4. தென்காசி

விடை : தூத்துக்குடி

6. கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்த _________ விரும்பி வாங்கிச் சென்றனர்.

 1. தந்தங்களை
 2. முத்துக்களை
 3. பட்டாடைகளை
 4. அரிசியை

விடை : முத்துக்களை

7. __________ என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம்.

 1. காவற்புரைத் தெரு
 2. கூழைக்கடைத் தெரு
 3. மேலரத வீதி
 4. அக்கசாலை

விடை : அக்கசாலை

7. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு

 1. திருநெல்வேலி
 2. வல்லநாடு
 3. மேலப்பாளையம்
 4. பாளையங்கோட்டை

விடை : பாளையங்கோட்டை

II. வினாக்கள்

1. திருநெல்வேலி பெயர்க்காரணம் கூறு

திருநெல்வேலி நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி  போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர்  பெற்றது.

2. புலவர்கள் திருநெல்வேலியின் சிறப்பை எவ்வாறு போற்றுகின்றனர்?

“திக்கெல்லாம்  புகழுறும் திருநெல்வேலி” என்று திருஞானசம்பந்தரும், “தன்பொருநைப் புனல் நாடு” என்று சேக்கிழாரும் திருநெல்வேலியின் சிறப்பை போற்றியுள்ளனர்.

3. இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுவை எவை?

தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்கு கரையில் பாளையங்கோட்டை அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும்  இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன.

4. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எது? அவ்வாறு அழைக்கப்படக் காரணம் யாது?

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு பாளையங்கோட்டை

பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்

5. திருநெல்வேலியின் வரலாற்றை நினைவூட்டும் ஊர்கள் எவை?

சேரன்மகாதேவி, கங்கைகொண்டான், திருமலையப்பபுரம், வீரபாண்டியப்பட்டினம், குலசேகரப்பட்டினம்

6. திருநெல்வேலியில் உள்ள கோட்டைகள் சான்றுகள் எவை?

பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை, செங்கோட்டை

7. திருநெல்வேலிக்கு நெல்வேலி பெயர் வரக் காரணமாக கருதுவது என்ன?

முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில்காடு என்பது அதன் பொருளாகும். மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர்.

8. இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் மலை எது?

இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் குற்றாலமலை

9. சங்க இலக்கியங்கள் கொற்கையின் முத்து கூறும் வரிகள் யாவை?

கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

 • முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை (நற்றிணை 23:6)
 • கொற்கையில் பெருந்துறை முத்து (அகம் 27:9)

என்று சங்க இலக்கியங்கள் கொற்கையின் முத்துகளைக் கூறுகின்றன.

10. திங்கள்தோறும் திருநெல்வேலியில் திருவிழா நடைபெறும் என்பதை உரைக்கும் திருஞானசம்பந்தரின் வரிகளை கூறுக.

திங்கள்தோறும் திருநெல்வேலியில் திருவிழா நடைபெறும் என்பதை

திங்கள் நாள்விழா மல்கு திருநெல்
வேலியுறை செல்வர் தாமே

என்னும் திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.

11. பொதியமலை – குறிப்பெழுதக

திருநெல்வேலி மாவட்டம் மலை வளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டு உள்ளது.

பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு அறியாப் பழங்குடி

என்று இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்