Tamil Nadu 7th Standard Tamil Book Term 3 திருக்குறள் Solution | Lesson 2.6

பாடம் 2.6. திருக்குறள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. __________ ஒரு நாட்டின் அரணன்று.

  1. காடு
  2. வயல்
  3. மலை
  4. தெளிந்த நீர்

விடை : வயல்

2. மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்.

  1. பிறப்பால்
  2. நிறத்தால்
  3. குணத்தால்
  4. பணத்தால்

விடை : பிறப்பால்

3. நாடென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________.

  1. நான் + என்ப
  2. நா + டென்ப
  3. நாடு + என்ப
  4. நாடு + டென்ப

விடை : நாடு + என்ப

4. கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

  1. கணிஇல்லது
  2. கணில்லது
  3. கண்ணில்லாது
  4. கண்ணில்லது

விடை : கண்ணில்லது

II. உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.

2. வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
    யானையால் யானையாத் தற்று.

3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்.

விடை :

வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

III. படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.

IV. குறுவினா

1. ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

  • பொருள்
  • கருவில
  • காலம்
  • செயலின் தன்மை
  • உரிய இடம் ஆகிய ஐந்து ஆராய்ந்து அறிந்து ஒரு செயலை செய்ய வேண்டும்.

2. ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?

  • தெளிந்த நீர்
  • நிலம்
  • மலை
  • நிழல் உடைய காடு – ஆகிய நான்கும் ஒரு நாட்டிற்கு அரணாக அமையும்

3. சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

மிக்க பசி, ஓயாத நோய், அழிவு செய்யும் பகை சேராமல் நல்வகையில் நடைபெறுவதே நாடு ஆகும். பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடு ஆகும்.

கூடுதல் வினாக்கள்

I. பிரித்து எழுதுக

  1. நாடென்ப = நாடு + என்ப
  2. நாடல்ல = நாடு + அல்ல
  3. பிறப்பொக்கும் = பிறப்பு + ஒக்கும்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ஒரு செயலைச் செய்யும் போது மற்றொரு செயலைச் செய்வதற்கு வள்ளுவர் கூறிய உவமை _________

விடை : யானை

2. பிணி என்னும் சொல்லின் பொருள் ________

விடை : நோய்

3. பிறப்பொக்கும் _________ உயிர்க்கும்

விடை : எல்லா

4. மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே ________

விடை : நாடாகும்

5.  ________ மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே.

விடை : பிறப்பால்

III. வினாக்கள்

1. செயலை எப்படிச் செய்ய வேண்டும்?

ஒரு யானையைக்கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர். அது போல ஒரு செயலைச் செய்யும்போதே அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் வேண்டும்.

2. கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்டுபவர் யார்?

தாம் கற்றவற்றைக் கற்றவர்முன் தெளிவாகச் சொல்ல வல்லவர், கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்.

3. கற்றவர் முன் எவற்றை மனதில் பதியும்படி சொல்ல வேண்டும்? எவற்றை கேட்டு அறிந்து காெள்ள வேண்டும்?

கற்றவர் முன் தான் கற்றவற்றை மனத்தில் பதியும்படி சொல்லி, அவர்கள் கற்றவற்றையும் கேட்டு, அறிந்து கொள்ள வேண்டும்.

4. எது பயனில்லாதது என வள்ளூவர் குறிப்பிடுகிறார்?

அரண் எவ்வளவு பெருமையுடையதாக இருந்தாலும், செயல் சிறப்பு இல்லாதவரிடத்தில் அது பயனில்லாதது ஆகும்.

5. எவை சிறப்பியல்களால் ஒத்திருப்பதில்லை?

பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை, தீமையாகியச் செயல்களால் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.

6. யார் அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்?

உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்.

 

சில பயனுள்ள பக்கங்கள்