Tamil Nadu 7th Standard Tamil Book Term 3 பயணம் Solution | Lesson 3.4

பாடம் 3.4. பயணம்

நூல் வெளி

பாவண்ணன் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார்.

கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

பிரயாணம் என்னும் நூலில் உள்ள பயணம் என்னும் சிறுகதை இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

பயணம் கதையைச் சுருக்கி எழுதுக.

முன்னுரை

பிறருக்கு உதவி செய்து மகிந்த ஒருவரின் கதைககள் “பயணம்”. இக்கதையைப் “பிரயாணம்” என்னும் நூலில் பாவண்ணன் படைத்துள்ளார்.

மிதிவண்டி ஆசை

20 ஆண்டுகளுக்கு முன் நடந்து நிகழ்ச்சி இது. அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மிதிவண்டியின் மீது ஆசை வைத்துத் தனது மூன்றாவது மாதச் சம்பளத்தில் மிதிவண்டி ஒன்றை வாங்குகின்றார்.  மிதிவண்டியில் செல்வத தான் அவருக்குப் பொழுதுபோக்கு. தெரிந்த இடம் தெரியாத இம் எல்லாவற்றுக்கும் மிதிவண்டிதான். கிருஷ்ணராஜசாகர் அணை. மகாபலிபுர் ஆகிய இடங்களுக்கு எல்லாம் மிதிவண்டியிலே தான் பயணம்.

மிதிவண்டியில் பயணம்

ஹாசன் வழியாக மங்களூர் செல்ல வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை. இரண்டு நாட்கள் மதிவண்டி பயணத்தில் ஹாசனை அடைந்தார். ஒரே நாளில் வெப்பம், மழை, குளிர் மாறி மாறி வந்தது. மழைத் தூரலில் அடுத்த ஊர் சென்றனர். பெரிய இறக்கத்தில் இறங்கும்போது மிதிவண்டியில் காற்று இறங்கிவிட்டது. காற்றடிக்கும் கருவியும் இல்லை நீண்ட தூரம் நடந்தும் யாரையும் காணவில்லை.

குடிசை வீட்டுச் சிறுவன்

ஒரு குடிசை வீடு தெரிந்தது. அதில் ஒரு சிறுவனும் அவனது அம்மாவும் இருந்தனர். பெங்களூரில் இருந்து மிதிவண்டியில் வந்தைச் சொன்னதும் அந்தச் சிறுவனால் நம்ப முடியவில்லை. மனம் இருந்தால் எங்கு வேண்டும் என்றாலும் மிதிவண்டியில் செல்லலாம் என்றார். மிதிவண்டி ஆர்வத்தை சிறுவன் சொன்னான். அவனது மாமா வீட்டில் மிதிவண்டி உள்ளது. அவர் இல்லாத போது குரங்கு பெடல் போட்டு ஓட்டுவேன் என்றான். காலைப்பொழுது விடிந்ததும் பக்கத்து ஊரில் உள்ள சந்திரேகெளடா என்பவர் மதிவண்டியைச் சரி செய்து தருகின்றார். சிறுவனுக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார்.

பயணம் தொடர்கின்றது…

அம்மா அனுமதி பெற்று, அசிக்கெர என்ற இடத்தில் தன் மாமா வீட்டில் விடச் சொல்லி சிறுவன் கேட்டான். சிறுவனுடன் பயணம் தொாடர்ந்தது. அவரிடம் இருந்து மிதிவண்டியை வாங்கி சிறிது தூரம் ஓட்டினாள்.  மாமா வீடு நெருங்கும் சிறிது தூரத்திற்கு முன்னதில் இருந்து மிதிவண்டியை மீண்டும் சிறுவன் ஓட்டக் கேட்டான். சிறுவனின் மிதிவண்டி ஆர்வத்த்தைக் கண்டு ஓட்டக் கொடுத்தார். மிதிவண்டி சிறுவன் ஓட்டிக் கொண்டு இருக்கும் போது, அவனிடம் சொல்லாம் பேருந்தில் ஏறி செல்கின்றார்.

முடிவுரை

ஆசைபட்டு வாங்கிய மிதிவண்டியைத் தியாகம் செய்து, சிறுவனின் மனம் மகிழச் செய்த அவரின் கருணை உள்ளம் பராட்டுக்குரியது.

“கருணை உள்ளம் கடவுள் வாழும் இல்லம்”

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. பிரயாணம் என்னும் நூலின் ஆசிரியர் _________

விடை: பாவண்ணன்

2. தான் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ நினைப்பது __________ அன்று.

விடை: மனிதப்பண்பு

II. குறு வினா

1. மனிதப்பண்பு எனப்படுவது யாது?

தான் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ நினைப்பது மனிதப்பண்பு அன்று. பிறருக்கு உதவி செய்வதும் பிறரது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றி அவர்களது மகிழ்ச்சியைக் கண்டு இன்பம் அடைவதும் சிறந்த மனிதப்பண்பு ஆகும்.

2. பயணம் என்னும் சிறுகதை எந்த நூலில் இருந்து தரப்பட்டுள்ளது?

பிரயாணம் என்னும் நூலில் உள்ள பயணம் என்னும் சிறுகதை தரப்பட்டுள்ளது.

3. பாவண்ணன் எழுதிய நூல்களை கூறுக

வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம்

 

சில பயனுள்ள பக்கங்கள்