8th Std Science Term 1 Solution in Tamil | Lesson.9 தகவல் தாெழில்நுட்பம் ஓர் அறிமுகம்

பாடம்.9 தகவல் தாெழில்நுட்பம் ஓர் அறிமுகம்

8ஆம் வகுப்பு அறிவியல். தகவல் தாெழில்நுட்பம் ஓர் அறிமுகம் Book Back Solution

பாடம்.9 தகவல் தாெழில்நுட்பம் ஓர் அறிமுகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

  1. மார்டின் லுதர் கிங்
  2. கிரகாம் பெல்
  3. சார்லி சாப்ளின்
  4. சார்லஸ் பாப்பேஜ்

விடை : சார்லஸ் பாப்பேஜ்

2. கீழ்கண்டவற்றில் வெளியீட்டுக் கருவி எது ?

  1. சுட்டி
  2. விசைப்பலகை
  3. ஒலிபெருக்கி
  4. விரலி

விடை : ஒலிபெருக்கி

3. கீழ்கண்டவற்றில் உள்ளிட்டுக் கருவி எது ?

  1. ஒலிபெருக்கி
  2. விசைப்பலகை
  3. அச்சுப் பொறி
  4. கணினித் திரை

விடை : விசைப்பலகை

4. விரலி என்பது ஒரு ————– கருவி

  1. உள்ளீட்டு
  2. வெளியீட்டு
  3. சேமிப்பகம்
  4. இணைப்பு வடம்

விடை : சேமிப்பகம்

5. ஐந்தாவது தலைமுறைக் கணினிக்கு ———— அறிவு உண்டு

விடை : செயற்கையான நுண்ணறிவு

II.பொருத்துக.

I சிதை மாற்றத்தின் உதாரணத்தைக் கொண்டு பொருத்துக.

1. விசைப்பலகைRAM
2. நான்காம் தலைமுறைக் கணினிஉள்ளீட்டுக் கருவி
3. வன்பொருள்ஒருங்கிணைந்த சுற்று
4. மூன்றாம் தலைமுறைக் கணினிவரைபடக் கருவிகள்
5. பயன்பாட்டு மென் பொருள்நுண்செயலிகள்
விடை : 1 – ஆ, 2 – உ, 3 – அ, 4 – இ, 5 – ஈ

III. குறுகிய விடையளி :

1. கணினி என்றால் என்ன?

கணினி என்பது தகவல்கள், சேமிப்பு மற்றும் செயல்முறைத் தரவுகளை ஏற்றுக் கொள்ளும் ஒரு மின்னணுக் கருவி ஆகும்.

2. கணினியின் பாகங்களைக் கூறுக

  • உள்ளீட்டு அலகு
  • மத்திய செயல்பாட்டு மையம்
  • வெளியீட்டு அலகு

3. வன்பொருள் மற்றும் மென்பொருள் என்றால் என்ன?

வன்பொருள்

வன்பாெருளானது நாம் தொடடுப் பார்த்து உணரக் கூடிய கணினியின ஒரு பாகமாகும். வன்பாெருளானது உள்ளீடு மற்றும் வெளியீட்டுக கருவிகளைக் கொண்டது. பேழை, வன் தட்டு, தாய்ப்பலகை, SMPS, மையச் செயலகம் (CPU ) நேரணுகு நினைவகம் (RAM), குறுவட்டு (CD) வரைகலை வன்பாெருள் (GRAPHICS CARD)

மென்பொருள்

மென்பாெருள் இல்லாவிட்டால் மென்பாெருள் செயலற்றுப் பாேகும். மென்பாெருளானது உள்ளீட்டுத் தகவல்களை செயல்முறைப்படுத்தும் குறியீடு மற்றும் நிரலாக்கம் செய்யப்பட்ட பயன்பாட்டு செயலி ஆகும்.

4. கணினிகளின் தலைமுறைகள் பற்றி எழுதுக

 தலைமுறை
காலகட்டம்உபயோகப் படுத்தப் பட்ட முக்கிய கூறுகள் 
1. முதலாம் தலைமுறை1942-1955வெற்றிடக் குழாய்
2. இரண்டாம் தலைமுறை1955-1964
3. மூன்றாம் தலைமுறை1964-1975ஒருங்கிணைந்த சுற்ற
4. நான்காம் தலைமுறை1975-1980நுண்செயலி
5. ஐந்தாம் தலைமுறை1980 – till dateசெயற்கையான நுண்ணறிவு

5. மையச் செயலகம் ( CPU) பாகங்களை விவரி

மையச் செயலகம் ( CPU)

CPU கணினியின் மூளைப் பகுதியாகும். இது உள்ளீடுகளைப் பெற்று (தரவு) தகவல்களாக மாற்றுகிறது. இதற்கு மூன்று பாகங்கள் உண்டு.

1. நினைவகம் (Memory Unit)

2. கணிதத் தருக்கச் செயலகம் (ALU – Arithmatic Logic Unit )

3. கட்டுப்பாட்டகம் (Control Unit)

கட்டுப்பாட்டகம் (Control Unit)

கட்டுப்பாட்டகம் கணினியின் எல்லா பணிகளையும் கட்டுப் படுத்துகிறது .

கணிதத் தருக்கச் செயலகம் (ALU – Arithmatic Logic Unit )

எல்லாவித எண் கணித செயல்பாடுகளும் கணித தருக்கச் செயலகத்தில் நடை பெறுகின்றன.

நினைவகம் (Memory Unit)

கணினி தனக்கு கொடுக்கப்படும் எல்லா செய்திகளையும், தகவல்களையும் தன்னகத்தே  ற்காலிகமாக சேமித்துக் கொள்ளும். இந்த நினைவகத்தை நாம் முதன்மை மற்றும் இரண்டாம் நினைவகம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். மேலும் கணினியின் நினைவகத்தை நாம் தற்காலிகமாக குறுவட்டு (compact disk) விரலி (pen drive) ஆகியவற்றைக் கொண்டு விரிவு படுத்தலாம்

பயனுள்ள பக்கங்கள்