8th Std Science Term 2 Solution in Tamil | Lesson.4 அணு அமைப்பு

பாடம்.4 அணு அமைப்பு

 8ஆம் வகுப்பு அறிவியல். அணு அமைப்பு Book Back Solution - 2021

பாடம்.4 அணு அமைப்பு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கேதாேடு கதிர்கள் _______________ ஆல் உருவாக்கப்பட்டவை

  1. மின் சுமையற்ற துகள்கள்
  2. நேர்மின்சுமை பெற்ற துகள்கள்
  3. எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்
  4. மேற்கண்ட எதுவுமில்லை

விடை : எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்

2. கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின நிறைவிகிதம் மாறாதிருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.

  1. தலைகீழ் விகித விதி
  2. மாறா விகித விதி
  3. பெருக்கல் விதி
  4. பொருண்மைஅழியா விதி

விடை : மாறா விகித விதி

3. நீரில், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியன __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.

  1. 1 : 8
  2. 8 : 1
  3. 2 : 3
  4. 1 : 3

விடை : 1 : 8

4. டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

  1. அணுவைப் பிளக்க முடியாது
  2. அணுக்கள் முழு எண்களின விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.
  3. தனிமங்கள் அணுக்களால் ஆனவை.
  4. ஒரு தனிமத்தின அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை

விடை : தனிமங்கள் அணுக்களால் ஆனவை.

5. ஒரு தனிமத்தின அனைத்து அணுக்களும்

  1. ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெற்றுள்ளன.
  2. ஒரே நிறை எண்ணையும், வேறுபட்ட அணு எண்ணையும் காெண்டுள்ளன.
  3. ஒரே அணு எண்ணையும், வேறுபட்ட நிறை எண்ணையும் காெண்டுள்ளன
  4. அணு எண் மற்றும் நிறை எண் ஆகிய இரண்டும் வேறுபடுகின்றன.

விடை : ஒரே அணு எண்ணையும், வேறுபட்ட நிறை எண்ணையும் காெண்டுள்ளன

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. _____________ என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள்.

விடை : அணு

2. ஒரு தனிமமானது _________________ மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது.

விடை : ஒரே

3. ஒரு அணுவானது ______________, ______________ மற்றும் _____________ ஆகிய துகள்களால் ஆனது.

விடை : புராேட்டான், எலக்டரான் மற்றும்  நியூட்ரான்

4. எதிர்மின்சுமை காெண்ட அயனி ____________ எனப்படும், நேர் மின்சுமை காெண்ட அயனி ___________ எனப்படும்.

விடை : எதிர் அயனி, நேர் அயனி

5. ____________ (எலக்டரான் / புராேட்டான்) ஒரு எதிர்மின்சுமை காெண்ட துகள்.

விடை : எலக்டரான்

6. புராேட்டான்கள் ______________ (நேர் /எதிர்) மின்சுமை காெண்ட தகட்டை நாேக்கி விலக்கமடைகின்றன.

விடை : எதிர்

III. பொருத்துக.

1. பொருண்மை அழியாவிதிசர் வில்லியம் குரூக்ஸ்
2. மறா விகித விதிஜேம்ஸ் சாட்விக்
3. கேதாேடு கதிர்கள்ஜாேசப் ப்ரெளஸ்ட
4. ஆனோடு கதிர்கள்லவாய்சியர்
5. நியூட்ரான்காேல்ட்ஸ்டீன்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – உ, 5 – ஆ

IV. சுருக்கமாக விடையளி.

1. பொருண்மை அழியாவிதி – வரையறு

ஒருவேதிவினை நிகழும் போத உருவாகும் வினைவிளை பொருள்களின் மொத்த நிறையானது வினைபடு பொருள்களின் மொத்த நிறைக்குச் சமம். மேலும் ஒரு வேதிவினையின் மூலம் நிறையை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது என்பத பொருண்மை அழியா விதி ஆகும்

2. மாறா விகித விதி – வரையறு

ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தல் ஒன்றினைந்த தூய சேர்மத்தை உருவாக்குகின்றன என்பத மாறா விகித விதி ஆகும்

3. ஆனோடு கதிர்களின் பண்புகளை எழுதுக.

  • ஆனோடு கதிர்கள் நேர் காேட்டில் செல்கின்றன.
  • ஆனோடு கதிர்கள் துகள்களால் ஆனவை.
  • ஆனோடு கதிர்கள் மின்புலம் மற்றும் காந்தப் புலத்தால் விலக்கம் அடைகின்றன. அவை நேர் மின்னூட்டம் காெண்டுள்ளதால் எதிர் மின்வாயை நாேக்கி விலக்கமடைகின்றன.
  • நேர் மின்வாய்க் கதிர்களின் பண்புகள் மின்னிறக்கக் குழாயினுள் இருக்கும் வாயுவின் தன்மையைச் சார்ந்து அமையும்.
  • துகளின் நிறை மின்னிறக்கக் குழாயிலுள்ள வாயுவின் அணு நிறைக்குச் சமமாக இருக்கும்.

4. ஹைட்ரஜனைப் பொறுத்து இணை திறனைக் கணக்கிடும் முறையைக் கூறுக.

  • ஹைட்ரஜன் தனது இணைதிறன் கூட்டில் உள்ள எலக்ட்ரானை இழப்பதால் அதன் இணைதிறன் ஒன்று ஆகும்.
  • இதனை அடிப்படையாக கொண்டு பிற தனிமங்களின் இணைதிறன் கணக்கிடப்படுகிறது.
  • ஒரு தனிமத்தின் ஒரு அணுவுடன் இணையக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையே அத்தனிமத்தின் இணைதிறன் எனப்படும்.

உதாரணமாக

  • ஹைட்ரஜன் குளோரைடு மூலக்கூறில் ஒரு ஹைட்ரஜன் அணு ஒரு குளோரின் அணுவுடன் இணைகிறது. எனவே குளோரின் இணைதிறன்
  • அதேபோல் நீர் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்சிஜன் அணுவுடன்  இணைகிறது. எனவே ஆக்சிஜனின் இணைதிறன் 2.

5. அயனி, அயனித் தாெகுப்பு –வரையறு.

அயனி

ஒரு அணு எலக்ட்ரானை ஏற்பதால், எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரித்து எதிர்மின்சுமை பெற்று எதிர் அயனி எனவும்., ஒரு அணு எலக்ட்ரானை இழப்பதால், புரோட்ரான்களின் எண்ணிக்கை அதிகரித்து எதிர்மின்சுமை பெற்று நேர் அயனி எனவும் அழைக்கப்படுகிறது.

அயனித் தொகுப்பு

சில நேரங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒன்றாக இணைந்து எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது ஏற்றோ முறையே நேர் மின்சுமையுடைய அல்லது எதிர் மின்சுமையுடைய அயனித் தொகுப்பு உருபுகளாக மாறுகின்றன.

6. வேதிச்சமன்பாடு என்றால் என்ன?

வேதிச்சமன்பாடு என்பது ஒரு வேதிவினையை குறியீடுகள் மற்றும் வாய்ப்பாடுகள் வடிவத்தில் எடுத்தக்கூறு் குறியீட்டு முறைகளாகும். வேதி வினையில் ஈடுபடக்கூடிய பொருள்கள் வினைபடு பொருள்கள் எனவும் அதில் உருவாகக்கூடிய பொருள்கள் வினை விளை பொருள்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

7. கீழ்காணும் சேர்மங்களின் பெயர்களை எழுதுக.

அ) CO

  • கார்பன் மோனாக்ஸைடு

ஆ) N2O

  • நைட்ரஸ் ஆக்சைடு

இ) NO

  • நைட்ரஜன் ஆக்சைடு

ஈ) PCl2

  • பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு

V. விரிவான விடையளி.

1. அடிக்காேடிடப்பட்ட தனிமங்களின் இணைதிறனைக் காண்க.

அ) NaCl

  • Na – 1

ஆ) CO2

  • C – 4

இ) AlPO2

  • Al – 3

ஈ) Ba(NO3)2

  • Ba – 2

உ) CaCl2

  • Ca – 2

2. கீழ்க்காண்பவற்றின் வேதி வாய்ப்பாட்டினை எழுதுக.

அ. அலுமினியம் சல்பேட்

  • Al2 (SO4)3

ஆ. பேரியம் குளாேரைடு

  • BaCl2

இ. சில்வர் நைட்ரேட்

  • AgNO3

ஈ. மெக்னீசியம் ஆக்ஸைடு

  • MgO

3. கீழ்க்கண்ட வினைகளுக்கான முற்றுப்பெறா வாய்பாட்டினை எழுதி அதனை சமன் செய்க.

அ. கார்பன் + ஆக்சிஜன் → கார்பன் டை ஆக்ஸைடு

C  +  O2   CO2

ஆ. பாஸ்பரஸ் + குளாேரின → பாஸ்பரஸ் பென்டா குளாேரைடு

P +  Cl2 →   PCl5

இ. சல்பர் + ஆக்சிஜன → சல்பர் டை ஆக்ஸைடு

S  +  O2  SO2

ஈ. மெக்னீசியம் + ஹைட்ரஜன் குளாேரைடு → மெக்னீசியம் குளாேரைடு + ஹைட்ரஜன்

Mg + 2HCl  →   MgCl2 + H2

4. கீழ்க்காணும் சமன்பாடுகளைச் சமன் செய்க.

a) Na + O2 → Na2O

  • 4Na + O22Na2O

b) Ca + N2 → Ca3N2

  • 3Ca + N2 → Ca3N2

c) N2 + H2 →NH3

  • N2 + 3H2 → 2NH3

d) CaCO3 +HCl → CaCl2 + CO2 +H2O

  • CaCO3 + 2HCl → CaCl2 + CO2 +H2O

e) Pb(NO3)2 → PbO + NO2 + O2

2Pb(NO3)2 2PbO + NO2 + O

 

பயனுள்ள பக்கங்கள்