8th Std Science Solution in Tamil | Lesson.8 தாவரங்கள் விலங்குகளை பாதுகாத்தல்

பாடம்.22 தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல்

8th-Std-Science-Book-Back-Answers in Tamil Lesson-22

பாடம்.22 தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் _______ என அழைக்கப்படுகின்றன

  1. விலங்கினங்கள்
  2. தாவர இனங்கள்
  3. உள்ளூர் இனம்
  4. அரிதானவை

விடை : உள்ளூர் இனம்

2. காடு அழிப்பு என்றால் _______

  1. காடுகளை அழித்தல்
  2. தாவரங்களை வளர்ப்பது
  3. தாவரங்களை கவனிப்பது
  4. இவை எதுவுமில்லை

விடை : காடுகளை அழித்தல்

3. சிவப்பு தரவு புத்தகம் _______ பற்றிய பட்டியலை வழங்குகிறது

  1. உள்ளூர் இனங்கள்
  2. அழிந்துபோன இனங்கள்
  3. இயற்கை இனங்கள்
  4. இவை எதுவுமில்லை

விடை : இவை எதுவுமில்லை

4.  உள்வாழிடப் பாதுகாப்பு என்பது உயிரினங்களை _______

  1. ஓரிடத்திற்குள் பாதுகாத்தல்
  2. ஓரிடத்திற்கு வெளியே பாதுகாத்தல்
  3. இரண்டும்
  4. இவை எதுவுமில்லை

விடை : ஓரிடத்திற்குள் பாதுகாத்தல்

5. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் _______ ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது 

  1. 1986
  2. 1972
  3. 1973
  4. 1971

விடை : 1972

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. WWF என்பது ________ ஐ குறிக்கிறது.

விடை : உலக வனவிலங்கு நிதியம்

2. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் ________ என அழைக்கப்படுகிறது.

விடை : உள்ளூர் இனங்கள்

3. சிவப்பு தரவுப் புத்தகம் ________ ஆல் பராமரிக்கப்படுகிறது.

விடை :  IUCN

4. முதுமலை வனவிலங்கு சரணாலயம் ________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

விடை : நீலகிரி

5. ________ நாள் உலக வனவிலங்கு தினமாக காெண்டாடப்படுகிறது

விடை : மார்ச் 3

III.பொருத்துக.

1. கிர் தேசிய பூங்கா –மத்திய பிரதேசம்
2. சுந்தரபன்ஸ் நேஷனல் பார்க்உத்தராங்கல்
3. இந்திரா காந்தி தேசிய பூங்காமேற்கு வங்கம்
4. கார்பெட் தேசிய பூங்காகுஜராத்
5. கன்ஹா தேசிய பூங்காதமிழநாடு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – ஆ,5 – அ

IV. சரியா அல்லது தவறா எனக்கூறு. தவறு எனில் தவறான கூற்றைத் திருத்துக.

1. நீர் பற்றாக்குறைக்கு காட்ழிப்பு ஒரு காரணம்.

விடை : சரி

2. கிரையாே வங்கி என்பது ஒரு விதை அல்லது கரு மிக அதிக வெப்பநிலையில் பாதுகாக்கப்படும் நுட்பமாகும்.

விடை : சரி

சரியான கூற்று : கிரையாே வங்கி என்பது ஒரு விதை அல்லது கரு மிக குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்படும் நுட்பமாகும்.

3. மன்னார் உயிர்க்காேளம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

விடை : சரி

4. ஆபத்தானை நிலையிலுள்ள தாவரங்கள் பூமியில் காணப்படவில்லை.

விடை : சரி

சரியான கூற்று : ஆபத்தானை நிலையிலுள்ள தாவரங்கள் பூமியில் காணப்படுகின்றன.

5. சிவப்பு தரவு புத்தகத்தில் அனைத்து வகையான தாவரங்கள் மற்றும்
விலங்குகளின பெயர் உள்ளது.

விடை : சரி

சரியான கூற்று : சிவப்பு தரவு புத்தகத்தில் அரிதான தாவரங்கள் மற்றும் விலங்குகளின பெயர் உள்ளது.

V. மிகச் சுருக்கமாக விடையளி.

1. புவி வெப்பமடைதல் என்றால் என்ன?

வளிமண்டலத்தில் சேரும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வெப்ப ஆற்றலை உடகவர்கின்றன. இது வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது புவி வெப்பமடைதல் என்று அழைக்கப்படுகிறது.

2. அழிந்து வரும் சிற்றினங்கள் என்றால்

பூமியிலிருந்து மறைந்து போய்விடக்கூடிய அபாயத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள் எனப்படுகின்றன.

3. அழிந்து போன உயிரினங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

பூமியின் மீதிருந்து முற்றிலுமாக மறைந்து போன உயிரினங்கள் அழிந்துபோன உயிரினங்கள் எனப்படுகின்றன.

எ.கா.

  • டைனோசர்
  • டுடோ

4. அழியும் தருவாயில் உள்ள இரண்டு விலங்குகளின் பெயர்களைக் கூறுக.

  • பனிச்சிறுத்தை
  • பெங்கால் புலிகள்

5. IUCN என்றால் என்ன?

IUCN – இயற்கை பாதுகாப்புக்கானை சர்வதேச ஒன்றியம்

இது இயற்கை பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டு துறையில் செயல்படும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.

VI. சுருக்கமாக விடையளி.

1. உயிர்க்கோளக் காப்பகம் என்றால் என்ன?

உயிர்க்கோளம் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். மனிதர்களும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளன. இந்த இடங்களின் பரப்பளவு சுமார் 5,000 ச.கி.மி உள்ளன. இவை சுற்றுச்சூழல் அமைப்பு, சிற்றினங்கள் மற்றும் மரபணு வளங்களை பாதுக்காக்கின்றன.

2. திசு வளர்ப்பு என்றால் என்ன?

தீங்குயிரிகள் அழிக்கப்பட்ட, ஊட்டச்சத்து மிக்க ஊடகத்தில் தாவர செல்கள், திசுக்கள், உறுப்புகள், விதைகள் அல்லது பிற தாவரப் பாகங்களை வளர்க்கம் ஒரு நுட்பமே திசு வளர்ப்பு எனப்படும்.

3. அழியும் தருவாயில் உள்ள இனங்கள் என்றால்
என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் உணவுச் சங்கிலியில் தனித்துவமான இடத்தை கொண்டிருந்து சுற்றுசூழலுக்குப் பங்களிக்கின்றன. ஆனால், அவை முக்கியமாக மனிதச் செயல்பாட்டின் காரணமாகவே அழியும் தருவாயில் உள்ளன.

எ.கா.

ராஜாளிப்பறைவை, மயில், வல்லூறு, கழுகு, பருந்து, புறா, வாத்து, புலி, சிங்கம், கலைமான், புல்வாய் மான், காண்டாமிருகம், யானை, நீலத்திமிங்கிலம், பறக்கும் அணில்

4. சிவப்பு தரவு புத்தகத்தின் நன்மைகளை எழுதுங்கள்.

  • இது ஒரு குறிப்பிட்ட இனத்தின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய உதவுகிறது.
  • இந்த புத்தகத்தில் காெடுக்கப்பட்டுள்ள தரவுகளை காெண்டு உலக அளவிலுள்ள இனங்கள் மதிப்பீடு செய்ய பயன்படுத்தலாம்.
  • உலகளவில் அழிந்துபோகும் ஒரு இனத்தின அபாயத்தை இந்த புத்தகத்தின் உதவியுடன மதிப்பிடலாம்.
  • ஆபத்தான நிலையிலுள்ள இனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான வழிகாடடுதல்களை இது வழங்குகிறது.

5. தமிழ்நாட்டில் உள்ள நான்கு வனவிலங்கு சரணாலயங்களையும் பட்டியலிடுஙகள்.

  • மேகமலை வனவிலங்கு சரணாலயம் – தேனி (2016)
  • வண்டலூர் வனவிலங்கு சரணாலயம் – சென்னை (1991)
  • களக்காடு வனவிலங்கு சரணாலயம் – திருநெல்வேலி (1976)
  • சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம் – விருதுநகர் (1988)
  • வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம் – காஞ்சிபுரம் (1936)

6. உயிர் உருப்பெருக்கம் என்ற  வார்த்தையால் நீஙகள் என்ன புரிந்து காெள்கிறீர்கள்?

  • ஆற்றல் கொண்ட வேதிச்சேர்மம் இயற்கை சூழ்நிலைக் காரணிகளுக்கு அப்பாற்பட்டு, சுற்றுப்புறத்தில் உள்ள அளவைக்காட்டிலும் பன்மடங்கு பெருகி அவை உயிர்களுக்குள் சர்வதேச உயிர்வழிப் பெருக்கமாகும்.
  • இவை பாதரசம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் மற்றும் பாலிக்குளோரினேட் பைபீனைல்கள் மற்றும் டி.டி.டி. போன்ற பூச்சிகொல்லிகளாக இருக்கலாம்.
  • இந்த பொருட்களை கீழ்நிலை உயிரினங்கள் உணவாக உட்கொள்ளும் பொழுது இந்த பாதிப்பு தொடங்குகிறது.
  • இந்த விலங்கை உயர்மட்ட விலங்குகள் உணவாக உட்கொள்ளும் பொழுது நச்சுத்தன்மை அந்த விலங்கினத்தையும் பாதிக்கிறது.

7. பிபிஆர் (PBR) என்றால் என்ன?

பிபிஆர் – மக்கள் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவேடு

மக்கள் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின நிலப்பரப்பு மற்றும் மக்கள்தாெகை உள்ளிட்ட உள்நாட்டில் கிடைக்கக்கூடிய உயிர் வேளங்கள் பற்றிய விரிவானை உருவாக்கம் காெண்ட ஒரு ஆவணமாகும்.

8. புளுகிராஸ் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

  • ப்ளூ கிராஸ் என்பது யுனைடெட் கிங்டமில் பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தாெண்டு ஆகும்,
  • இது 1897 இல் ‘எங்கள் ஊமை நண்பர்கள் லீக்’ எனறு நிறுவப்பட்டது.
  • ஆராேக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இதன் நாேக்கமாகும்.
  • கேப்டன் வி. சுந்தரம் 1959 ஆம் ஆண்டில் சென்னையில் ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பானை புளூ கிராஸ ஆஃப் இந்தியாவை நிறுவினார்.
  • அவர் ஒரு இந்திய விமானி மற்றும் விலங்கு நல ஆர்வலர் ஆவார்.
  • இப்போது,  இந்தியாவின ப்ளூ கிராஸ் நாட்டின மிகப்பெரிய விலங்கு நலன் புரியும் நிறுவனங்கள் ஆகும்.

VII. விரிவாக விடையளி.

1. காட்ழிப்பின் முக்கியத்துவத்தை எழுதுங்கள்.

காடழிப்பு இயற்கையால் ஏற்படலாம் அல்லது அது மனித நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம். தீ மற்றும் வெள்ளம் போன்றவை காட்ழிப்புக்கானை இயற்கை காரணங்கள். காடழிப்புக்கு காரணமான மனித நடவடிக்கைகளான விவசாய விரிவாக்கம், கால்நடை வளர்ப்பு, சட்டவிராேத மரம் வெட்டுதல், சுரங்கம், எண்ணெய் பிரித்தெடுத்தல், அணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை அடங்கும்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment