8th Std Social Science Term 1 Solution | Lesson.10 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

பாடம்.10 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் - பாட விடைகள்

பாடம்.10 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன.

  1. தங்கம்
  2. வெள்ளி
  3. வெண்கலம்
  4. மேற்கூறிய அனைத்தும்

விடை : மேற்கூறிய அனைத்தும்

2. காகித பணத்தை அறிமுகப்படுத்தியது யார்?

  1. பிரிட்டிஸ்
  2. துருக்கியர்
  3. முகலாய பேரரசு
  4. மௌரியர்கள்

விடை : பிரிட்டிஸ்

3. பணத்தின் மதிப்பு

  1. அக பணமதிப்பு
  2. புற பண மதிப்பு
  3. அ மற்றும் ஆ
  4. எதுவுமில்லை

விடை : அ மற்றும் ஆ

4. வங்கி பணம் என்பது எது?

  1. காசோலை
  2. வரைவு
  3. கடன் மற்றும் பற்று அட்டைகள்
  4. மேற்கூறிய அனைத்தும்

விடை : காசோலை

5. தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்

  1. பங்கு வர்த்தகம்
  2. பத்திரங்கள்
  3. பரஸ்பர நிதி
  4. வரி செலுத்துவது

விடை :  வரி செலுத்துவது

6. பணவியல் மற்றும் நிதித்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்?

  1. நிதிக்குழு
  2. நிதியமைச்சகம்
  3. இந்திய ரிசர்வ் வங்கி
  4. இந்திய தணிக்கை மற்றும் தலைமை கணக்காயர் அலுவலர்

விடை : இந்திய ரிசர்வ் வங்கி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலாம்.

விடை : இணைய வங்கி

2. பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே _________.

விடை : பணம்

3. வங்கி என்ற சொல் _________ வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

விடை : ஜெர்மானிய

4. பணத்தின் மதிப்பு என்பது பணத்தால் _________.

விடை : பணம் மற்றும் பணிகளை வாங்கும் சக்தி

5. இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம் _________.

விடை : 1949

III.பொருத்துக

1. பண்டமாற்று முறைவரி ஏமாற்றுபவர்கள்
2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்மின்னணு பணம்
3. மின் – பணம்நுகர்வு தவிர்த்த வருமானம்
4. சேமிப்புபண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்
5. கருப்பு பணம்1935
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு ஓரிரு வார்த்தையில் விடையளி

1. ‘பணம்’ என்ற வார்த்தை எதன் மூலம் பெறப்பட்டது?

“மொனேட்டா ஜுனோ”

2. குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்கள் எந்த வங்கி வழங்குகிறது?

வணிக வங்கி

 

V சரியான கூற்றைதேர்ந்தெடுக்கவும்

1. பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன

I. இருமுகத்தேவை பொருத்தமின்மைII. செல்வத்தை சேமிக்க சிரமமில்லை
III. பொதுவான மதிப்பின் அளவுகோல்IV. பொருட்களின் பகுபடாமை
  1. I மற்றும் II சரி
  2. I மற்றும் IV சரி
  3. I, II மற்றும் IV சரி
  4. ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை : I, II மற்றும் IV சரி

VI. தவறான ஒன்றினை கண்டுபிடிக்க

1. பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்

அ) பற்று அட்டைஆ) பண்டமாற்று முறை
இ) கடன் அட்டைஈ) நிகழ் நிலை வங்கி

விடை : பண்டமாற்று முறை

2. பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்

அ) இரட்டை பொருளாதாரம்
ஆ) சமத்துவம் வலுவிழத்தல்
இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை
ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு

விடை :  உற்பத்தியில் விளைவுகள் இல்லை

VII  கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

1. பண்டமாற்று முறை என்றால் என்ன?

பண்டைய காலத்தில் பணம் பயன்படுத்தபடாமல் பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை பண்டமாற்று முறை என்றனர்.

2. அண்மை கால பணத்தின் வடிவங்கள் யாவை?

  • நெகிழிப் பணம்
  • மின்னணு பணம்
  • நிகழ்நிலை வங்கி
  • மின் வங்கி

3. மின் – வங்கி மற்றும் மின் – பணம் – சிறு குறிப்பு வரைக.

மின் வங்கி

  • மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) என்றும் அழைக்கலாம்
  • காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு மின்னணு வழிமுறை பயன்படுகிறது.

மின்னனு பணம்

மின்னனுப் பணம் என்பது வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னனு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகும்.

4. உங்கள் வாழ்க்கையில் பணத்தின் அத்தியாவசியங்கள் யாவை?

  • பண்ட மற்றும் பணிகளை வாங்க பணம் அவசியம்
  • மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் சேவைகளை சேமித்து வைத்து எதிர்காலத்தில் செல்வத்தையும், வர்த்தகத்தையும் நாம் பெற முடியும்.

5. பணத்தின் மதிப்பு என்றால் என்ன?

  • பணத்தின் மதிப்பு என்பது பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும்.
  • ஆகையால், இது பண்ட பணிகளின் விலை அளவை சார்ந்திருக்கும்.

6. வணிக வங்கி என்றால் என்ன? மற்றும் வைப்புகளின் வகைகள் யாவை?

ஒருவருக்கு காசோலை வரைவதில் மூலம் தனது வைப்புகளை மீளப்பெறும் உரிமையினை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.

வைப்புகளின் வகைகள்

  • மாணவர் சேமிப்பு கணக்கு
  • சேமிப்பு வைப்பு
  • நடப்பு கணக்கு வைப்பு
  • நிரந்தர வைப்பு

7. சேமிப்பு மற்றும் முதலீடு என்றால் என்ன?

சேமிப்பு

வருவாயில் நடப்பு நுகர்வுக்கு பயன்படாத ஒரு பகுதி சேமிப்பு என வரையறுக்கப்படுகிறது .

முதலீடு

இலாப நோக்கோடு பணத்தை அல்லது செல்வத்தை ஏதேனும் ஒரு பொருளாதார செயல்பாட்டில் ஈடுபடுத்தவது முதலீடு ஆகும்

8. கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?

கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும்

9. பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை?

  1. இரட்டை பொருளாதாரம்
  2. உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது
  3. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு
  4. சமத்துவம் வலுவிழத்தல்
  5. பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல்
  6. ஆடம்பர நுகர்வு செலவு
  7.  உற்பத்தி முறையில் விலகல்
  8. பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல்
  9. சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளின் வீழ்ச்சிகள்
  10. உற்பத்தி மீதான விளைவுகள்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

1. பண்டமாற்று முறையிலுள்ள தீமைகள் யாவை?

  1. இருமுகத் தேவை பொருத்தமின்மை
  2. பொதுவான மதிப்பின் அளவுகோல்
  3. பொருட்களின் பகுபடாமை
  4. செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்

2. பணத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி எழுதுக.

  • காலம், இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாற பணம் பல நிலைகளில் உருவானது.
  • பணத்தின் பரிணாமம் பல நிலைகளை கடந்துள்ளது.
  • பண்டப் பணம், உலோகப் பணம், காகிதப் பணம், கடன் பணம், நிகர் பணம் போன்றவைகள் சமீப கால பணத்தின் வடிவங்கள் ஆகும்.
  • ஆரம்ப மற்றம் பழங்கால நிலைதான பண்டமாற்ற முறையாகும்.
  • மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தில் பண்ட பணம், உலோக பணமாக மாறியது.
  • காகித பணம் கண்டுபிடிப்பு பணத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிலையாக கருதப்படுகிறது.

3. பணத்தின் பணிகள் யாவை? அவற்றை விளக்குக.

முதன்மை அல்லது முக்கிய பணிகள்

பொருளாதாரத்தில் செயல்பட்டு அவை பிரதான பணிகளின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.

பரிமாற்ற கருவி அல்லது பண செலுத்துகை

பணம், பண்ட மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது.

மதிப்பின் அளவுகோல்

அனைத்து மதிப்பையும் பணத்தால் அளவிடலாம். பலவகையான பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு இடையில் பரிமாற்ற விகிதத்தை தீர்மானிப்பது எளிது.

இரண்டாம் நிலை பணிகள்

இரண்டாம் நிலை பணிகளில் முக்கிய மூன்று முக்கிய பணிகள்

(i) எதிர்கால செலுத்துகைக்கான நிலை மதிப்பு

  • எதிர்கால செலுத்துகைக்கு பணம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. இன்று ஒரு கடனாளி கடன் வாங்குகிறார்.
  • குறிப்பிட்ட தொகையை கூறிய படி குறிப்பிட்ட காலத்தில் செலுத்துவது கடமையாகும்.

(ii) மதிப்பின் நிலை கலன் அல்லது

  • வாங்கும் சக்தியின் நிலைகலன் சில பண்டங்கள் அழிந்து போகக்கூடியதால், பண்டமாற்று முறையில் சேமிப்பை ஊக்குவிப்பதில்லை.
  • பணத்தின் அறிமுகத்திற்கு பிறகு எதிர்காலத்திற்காகப் பணத்தை சேமித்தார்கள்.
  • அது அழிய கூடியதில்லை.

(iii) மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி

  • பணத்தால் தொலைதூர இடங்களுக்கும், வெளி நாட்டிற்கும் பண்டங்களை பரிமாற்றம் செய்ய முடியும்.
  • ஆகவே, வாங்கும் சக்தியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு அவசியம் என உணரப்பட்டது

4. வங்கி வைப்புகளின் வகைகளை விவரி.

மாணவர் சேமிப்பு கணக்கு

  • சில வங்கிகள் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிற மாணவர்களுக்கான சேமிப்பு கணக்குகள் துவக்கியுள்ளனர்.
  • இவை நெகிழ்வான விதிமுறைகளுடன் பூஜ்ஜிய இருப்புத் தொகையில் கொண்டது இதன் முக்கிய அம்சமாகும்.

சேமிப்பு வைப்பு

  • வாடிக்கையாளர்கள் தன்னுடைய நடப்பு வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க ஆரம்பிக்கும் கணக்கிற்கு சேமிப்பு கணக்கு எனப்படும்.
  • நுகர்வோர், பணம் தேவைப்படும் போது அவர்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
  • அந்த வைப்பு தொகைக்கு வங்கி பெயரளவு வட்டி அளிக்கிறது.

நடப்பு கணக்கு வைப்பு

  • நடப்பு கணக்குகள் பொதுவாக வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அதிகாரிகளால் ஆரம்பிக்கப்படுகிறது.
  • தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்பு கணக்கு உதவுகின்றது.

நிரந்தர வைப்பு

  • நிரந்தர வைப்பு கணக்கு என்பது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு பாதுகாப்பும், நிலையான வருவாயும், விரும்புவார்கள்.
  • நிரந்தர வைப்பை ‘காலவைப்பு’ எனவும் அழைக்கலாம்.
  • அவை குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக வங்கியில் இருக்கும்.

5. சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

ஒப்பீட்டின் அடிப்படைசேமிப்புமுதலீடு
பொருள்சேமிப்பு என்பது தனிநபர் வருமானத்தில் நுகர்விற்காக பயன்படுத்தப்படாத ஒரு பகுதியேயாகும்.முதலீடு என்பது மூலதன சொத்துக்களில் நிதி முதலீடு செய்யும் செயல்முறையை குறிக்கிறது.
நோக்கம்சேமிப்பு குறுகிய கால அல்லது அவசரகால தேவைகளை நிறைவேற்றும்மூலதன உருவாக்கத்திற்கும், வருவாய்க்கும் முதலீடு உதவுகிறது.
இடர்பாடுகுறைந்த அல்லது புறக்கணிக்கப்பட்ட அளவுமிக அதிகம்
வருவாய்இல்லை அல்லது குறைவுஒப்பீட்டளவில் அதிகம்
நீர்மை நன்மைஅதிக நீர்மைகுறைந்த நீர்மை

 

சில பயனுள்ள பக்கங்கள்