பாடம்.2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

பாடம்.2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
கலைச்சொற்கள்
| கூட்டமைப்பு | Confederacy | A league or alliance |
| திருச்சபை தொடர்பான | Ecclesiastical | Relating to the Christian church or its clergy |
| ஒப்படைப்பு | Entrust | Assign the responsibility |
| எதிர்ப்பு | Hostility | Opposition |
| பேச்சுவார்த்தை | Negotiation | Discussion aimed at reaching an agreement |
| தலையாய | Paramount | Supreme |
| மிகுந்த வலிமை | Predominant | The most powerful |
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
- சுஜா-உத்– தெளலா
- சிராஜ்- உத் – தெளலா
- மீர்காசிம்
- திப்பு சுல்தான்
விடை: சிராஜ்- உத் – தெளலா
2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
- 1757
- 1764
- 1765
- 1775
விடை: 1757
3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
- அலகாபாத் உடன்படிக்கை
- கர்நாடக உடன்படிக்கை
- அலிநகர் உடன்படிக்கை
- பாரிசு உடன்படிக்கை
விடை: அலகாபாத் உடன்படிக்கை
4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி __________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
- முதல்
- இரண்டாம்
- மூன்றாம்
- ஏதுமில்லை
விடை: இரண்டாம்
5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ________
- 1756
- 1761
- 1763
- 1764
விடை : 1761
6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது
- பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
- ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
- ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
- திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
விடை: ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _____
- இராபர் கிளைவ்
- வாரன் ஹேஸ்டிங்ஸ்
- காரன்வாலிஸ்
- வெல்லெஸ்லி
விடை: காரன்வாலிஸ்
8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் _______
- இரண்டாம் பாஜிராவ்
- தெளலத்ராவ் சிந்தியா
- ஷாம்பாஜி போன்ஸ்லே
- ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
விடை: இரண்டாம் பாஜிராவ்
9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா _______
- பாலாஜி விஸ்வநாத்
- இரண்டாம் பாஜிராவ்
- பாலாஜி பாஜிராவ்
- பாஜிராவ்
விடை: இரண்டாம் பாஜிராவ்
10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?
- அயோத்தி
- ஹைதராபாத்
- உதய்பூர்
- குவாலியர்
விடை: ஹைதராபாத்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு _______
விடை: 1757
2. சிராஜ் உத் – தெளலாவின் தலைமை படைத் தளபதி ________
விடை: மிர் ஜாபர்
3. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் _________
விடை:கர்நாடக மற்றும் ஹைதராபாத் வாரிசுரிமை பிரச்சனை
4. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் ______
விடை: டல்ஹெளசி பிரபு
5. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் ________
விடை: வெல்லெஸ்சி பிரபு
6. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் ________ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
விடை: மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
7. 1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் _______
விடை: வெல்லெஸ்சி பிரபு
பொருத்துக
| 1. அய் – லா – சப்பேல் உடன்படிக்கை | முதல் ஆங்கிலேய மைசூர் போர் |
| 2. சால்பை உடன்படிக்கை | முதல் கர்நாடகப் போர் |
| 3. பாரிசு உடன்படிக்கை | மூன்றாம் கர்நாடகப் போர் |
| 4. ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை | முதல் மராத்திய போர் |
| 5. மெட்ராஸ் உடன்படிக்கை | மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் |
| விடை: 1 – ஆ, 2 – ஈ, 3 – இ, 4 – உ, 5 – அ | |
சரியா, தவறா?
1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ்- உத் – தெளலா வங்காளத்தின் அரியணை ஏறினார்
விடை: சரி
2. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்
விடை: தவறு
3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.
விடை: தவறு
4. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
விடை: சரி
5. காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.
விடை: சரி
கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
- அடையாறு போர் – 1748
- ஆம்பூர் போர் – 1754
- வந்தவாசிப் போர் – 1760
- ஆற்காட்டுப் போர் – 1749
விடை: வந்தவாசிப் போர் – 1760
பின்வரும் வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வரிகளில் விடையளி.
1. இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.
- சிராஜ்-உத்-தெளலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்.
- மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 123 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். இது வரலாற்றில் ’இருட்டறை துயரச் சம்பவம்’ என்றழைக்கப்படுகிறது.
2. பிளாசிப் போருக்குபின் ஆங்கிலேயர்கள் பெற்ற சலுகைகள் யாவை?
பிளாசிப் போர் வெற்றி ஆங்கிலேயரது அரசியல் அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கிவைத்தது மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு அவர்களது ஆதிக்கத்தை நீடிக்கவும் செய்தது.
3. பக்சார் போருக்கான காரணங்களை குறிப்பிடுக
தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டார். ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட அவர் அயோத்திக்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்து அங்கு சுஜா-உத்-தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கி போரில் இறங்கினார்.
4. முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் யாவை?
- ஹைதர் அலியின் வளர்ச்சி, அவர் பிரெஞ்சுக்காரர்களிடம் கொண்டிருந்த நட்புறவு ஆகியன ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.
- ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள், ஹைதராபாத் நிசாம், ஆங்கிலேயர்கள் இணைந்து முக்கூட்டணியை ஏற்படுத்தினர்.
5. மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை?
- இப்போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது மற்றும் பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
- பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.
- தோற்கடிக்கப்பட்ட போன்ஸ்லே மற்றும் ஹோல்கரின், மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
- மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
6. துணைப்படைத் திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக
- ஹைதரபாத்
- தஞ்சாவூர்
- அயோத்தி
- பேஷ்வா
- போன்ஸ்லே
- குவாலியர்
- இந்தூர்
- ஜெய்பூர்
- உதய்பூர்
- ஜோத்பூர்
சில பயனுள்ள பக்கங்கள்