8th Std Social Science Solution | Lesson.17 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது

பாடம்.17 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது

8th Std Social Science Book Back Answers Lesson 17

பாடம்.17 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது

கலைச்சொற்கள்

தொகுதிConstituencyThe body of voters who elect a representative for their area
அதிகார வரம்புJurisdictionPower or authority to interpret and apply the law
சட்டமன்றம்LegislatureAn organized body having the authority to make laws for a political unit
பிரகடனம்PromulgateAnnounce widely known
தள்ளிவைProroguesTo suspend or end a legislative session

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?

  1. குடியரசுத் தலைவர்
  2. துணைக் குடியரசுத் தலைவர்
  3. பிரதம மந்திரி
  4. முதலமைச்சர்

விடை: குடியரசுத் தலைவர்

2. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்

  1. ஆளுநர்
  2. முதலமைச்சர்
  3. சபாநாயகர்
  4. உள்துறை அமைச்சர்

விடை: முதலமைச்சர்

3. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்

  1. உள்துறை அமைச்சர்
  2. குடியரசுத் தலைவர்
  3. சபாநாயகர்
  4. ஆளுநர்

விடை: ஆளுநர்

4. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?

  1. ஆளுநர்
  2. முதலமைச்சர்
  3. உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
  4. குடியரசுத் தலைவர்

விடை: முதலமைச்சர்

5. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது

  1. 62
  2. 64
  3. 65
  4. 58

விடை: 62

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை ________ ஆகும்.

விடை: 28

2. ஆளுநரின் பதவிக்காலம் ________ ஆண்டுகள் ஆகும்.

விடை: 5

3. மாவட்ட நீதிபதிகள் ________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.

விடை: ஆளுநர்

4. ஆளுநர் ஒரு மாநிலத்தின் __________ ஆவார்.

விடை: நிர்வாகத் தலைவர்

5. ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக _______ வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

விடை: 25

பொருத்துக

1. ஆளுநர்கீழவை
2. முதலமைச்சர்பெயரளவுத் தலைவர்
3. சட்டமன்ற பேரவைமேலவை
4. சட்டமன்ற மேலவைஉண்மையான தலைவர்
விடை: 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்.

i. குடியரசுத் தலைவர்ii. துணை குடியரசுத் தலைவர்
iii. ராஜ்ய சபை உறுப்பினர்கள்iv. சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
  1. i, ii & iii சரி
  2. i மற்றும் iii சரி
  3. i, iii மற்றும் iv சரி
  4. i, ii, iii மற்றும் iv சரி

விடை: i, iii மற்றும் iv சரி

சரியா, தவறா?

1. முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.

விடை: சரி

2. ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.

விடை: தவறு

3. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை.

விடை: சரி

கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

1. மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.

  • மேலவை – சட்டமன்ற மேலவை
  • கீழவை – சட்ட மன்ற பேரவை

2. மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?

  • இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்
  • 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்

3. முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?

ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.

4. மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

முதலமைச்சர் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.

கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

1. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?

  • முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
  • மாநில முதலமைச்சர், அமைச்சரவையை, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
  • முதலமைச்சரின் ஆலோசனையின்பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
  • பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குகிறார். மேலும் அவர் பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
  • மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியாக இருக்கும்.
  • மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

2. மாநில சட்ட மன்றத்தின் பணிகளை விவரி?

  • மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்ட மன்றத்தின் முக்கிய பணி ஆகும்.
  • மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுபாட்டினை செலுத்துகிறது.
  • சட்ட மன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசாங்கம் வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலக்கி கொள்வோ முடியாது
  • அரசியலமைப்பு திருத்தும் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்க வகிக்கின்றது.

3. உயர்நீதி மன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும் எழுது?

  • அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நீதிப் பேராணைகளை பிறப்பிக்கின்றன.
  • ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
  • உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்