8th Std Social Science Solution | Lesson.5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

பாடம்.5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

8th Std Social Science Book Back Answers Lesson 5

பாடம்.5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

கலைச்சொற்கள்

பிறர் நலனுக்கு உழைப்பவர், கொடையாளி, நன்கொடையாளார்Philanthropistrefers to someone who makes donations to charities intended to increase human well being
இஸ்லாமிய கிரந்தங்கள்Haditha collection of traditions containing sayings of the prophet Muhammad with accounts of his daily practices
துறவிகள் வாழ்விடம்Hermitagerefers to the abode of a hermit
இஸ்லாமியச் சட்ட நிபுணர்Maulviexpounder of Muhammadan law, Muslim theologian
அறிவாளிSavantGenius
வலியுறுத்துதல்Reiteratedrestated
தள்ளுபடி செய்தல்Waivingrefraining from insisting on
இந்திய மொழிபெயர்ப்பாளர்Dubashan Indian translator or interpreter

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. வேதம் என்ற சொல்லிருந்து வந்தது.

  1. சமஸ்கிருதம்
  2. இலத்தீன
  3. பிராகிருதம்
  4. பாலி

விடை: சமஸ்கிருதம்

2. பின்வருனவற்றுள் எது பணண்டய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

  1. குருகுலம்
  2. விகாரங்கள்
  3. பள்ளிகள்
  4. இவையனைத்தும்

விடை: இவையனைத்தும்

3. இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

  1. உத்திரப்பிரதேசம்
  2. மகாராஷ்டிரம்
  3. பீகார்
  4. பஞ்சாப்

விடை: பீகார்

4. தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

  1. 1970
  2. 1975
  3. 1980
  4. 1985

விடை: 1980

5. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தாெடஙகிய முதல் ஐராேப்பிய நாடு எது?

  1. இங்கிலாந்து
  2. டென்மார்
  3. பிரான்சு
  4. போர்ச்சுக்கல்

விடை: போர்ச்சுக்கல்

6. இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதாேறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தாெகையை வழங்குவதற்கானை ஏற்பாட்டினை செய்த சாசன சட்டம் எது?

  1. 1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்
  2. 1833 ஆம் ஆண்டு சாசன சட்டம்
  3. 1853 ஆம் ஆண்டு சாசன சட்டம்
  4. 1858 ஆம் ஆண்டு சட்டம்

விடை : 1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்

7. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

  1. சார்ஜெண்ட் அறிக்கை, 1944
  2. இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948
  3. கோத்தாரி கல்விக்குழு, 1964
  4. தேசியக் கல்விக் கொள்கை, 1968

விடை: இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

8. இந்தியாவில் புதிய கல்விக் காெள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  1. 1992
  2. 2009
  3. 1986
  4. 1968

விடை: 1986

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வேதம் என்ற சொல்லின் பொருள் _______

விடை: அறிவு

2. தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் ________

விடை: அலெக்சாண்டர் கன்னிங்காம்

3. டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆடசியாளர் _______ ஆவார்.

விடை: இல்த்துமிஷ்

4. புதிய கல்விக் காெள்கை திருத்தப்பட்ட ஆண்டு _________.

விடை: 1992

5. 2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாய கல்வி சேட்டத்தின விதிகளை அமல்படுத்துகின்ற முதன்மையான அமைப்பு ________ ஆகும்.

விடை: RMSA

6. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுதப்பட்ட ஆண்டு ________

விடை: 1956

பொருத்துக

1. இட்சிங்சரஸ்வதி மகால்
2. பிரானசிஸ் சேவியர்இந்திய கல்வியின் மகா சாசனம்
3. உட்ஸ் கல்வி அறிக்கைமதராஸில் மேற்கத்திய கல்வி
4. இரண்டாம் சரபோஜிகாெச்சி பல்கலைக்கழம்
5. சர் தாமஸ் மன்றோசீன அறிஞர்
விடை: 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

சரியா? தவறா? எனக் குறிப்பிடு

1. சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியாேரின் குறிப்புகள் மருத்துவத்தை கற்றுக்காெள்ள ஆதாரங்களாக இருந்தன.

விடை: சரி

2. காேயில்கள் கற்றல் மையங்களாக திகழ்ந்ததாேடு அறிவைப் பெருக்கி காெள்ளும் இடமாகவும் இருந்தது.

விடை: சரி

3. கல்வியை ஊக்குவிப்பதில் அரசர்களும், சமூகமும் தீவிர அக்கறை காட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.

விடை: சரி

4. இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி நடைமுறையில் இல்லை

விடை: தவறு

5. RMSA திட்டமானது பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

விடை: தவறு

பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு

i) நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. (பொ.ஆ.) ஐந்தாம் நூற்றாண்டில்
தாேற்றுவிக்கப்பட்டது.

ii) பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அரசர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையானை சுயாட்சி காெண்டிருந்தனர்.

iii) பண்டைய  காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.

iv) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் சலை இருந்தது.

  1. i மற்றும் ii சரி
  2. ii மற்றும் iv சரி
  3. iii மற்றும் iv சரி
  4. i, ii மற்றும் iii சரி

விடை: i, ii மற்றும் iii சரி

சரியான இணையை கண்டுபிடி

  1. மக்தப்கள் – இடைநிலைப்பள்ளி
  2. 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக்கல்வி
  3. கரும்பலகைத் திட்டம் – இடைநிலைக் கல்வி குழு
  4. சாலபோகம் – கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்

விடை: 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக்கல்வி

ஓரிரு வாக்கியங்களில் விடையளி

1. குருகுலத்தின முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.

பண்டைய காலத்தில் மாணவர்கள் குருவின் விட்டில் குடும்ப உறுப்பினர் போல வந்து தங்கி கல்வி பயின்றனர். இதுவே குருகுலக் கல்வி முறை எனப்பட்டது

2. பண்டைய இந்தியாவில் உருவான மிகவும் குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகங்களின் பெயர்களை எழுதுக.

  • தட்சசீலம்
  • நாளந்தா
  • வல்லபி
  • விக்கிரமசீலா
  • ஓடண்டா
  • புரி
  • ஜகத்தாலயா

3. தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

  • பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது.
  • இதனை 1980இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.
  • இப்பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை தொல்பொரள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்தார்.

4. சோழர் காலத்தில் தழைத்தாேங்கிய கல்வி நிலையங்களை குறிப்பிடுக.

  • சதுர்வேதி மங்கலம் – வேதக்கல்லூரி
  • திருபுவனை – வேதக்கல்லூரி
  • திருவிடுைக்காளை- நூலகம்
  • திருவாடுதுறை – மருத்துவப்பள்ளி

5. SSA மற்றும் RMSA விரிவாக்கம் தருக.

  • SSA – அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan)
  • RMSA – அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan)

6. கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?

கல்வி பெறும் உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.

கீழ்க்கண்டவற்றிற்கு ஒரு பத்தி அளவில் விடையளி

1. சமண, பௌத்த மடாலயங்களில் கல்வியின் முக்கியக் கூறுகளைப் பற்றி விவாதிக்கவும்.

சமணம்:

  • மகாவீரரின் அறவுரைகள் ஓராயிரம் ஆண்டுகளாக அவருடைய சீடர்களால் வாய்மொழி மூலமாகவே மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்தன.
  • மகாவீரர் இயற்கை எய்திய 200 ஆண்டுகளுக்குப் பின்னர் சமண அறிஞர்கள் ஒரு பேரவையைக் கூட்டி தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர் (முதல் சமண பேரவைக் கூட்டம் – பாடலிபுத்திரம்).
  • கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வல்லபியில் கூட்டப்பட்ட இரண்டாம் பேரவை கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்றது. காலப்போக்கில் கற்றறிந்த பல சமணத் துறவிகள் (அதிக வயதும் ஆழமான ஞானமும் கொண்டவர்கள்) சமயம் சார்ந்த பல்வேறு தலைப்புகளிலான உரைகளைத் தொகுத்தனர்.
  • ஏறத்தாழ கி.பி. 500இல் சமண ஆச்சாரியார்கள் தாங்கள் அறிந்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த முடிவு செய்தனர். ஏனெனில் சமண இலக்கியங்களை மனனம் செய்வது மிகச் சிரமமானது என உணர்ந்தனர்.
  • சமண இலக்கியங்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1) ஆகம சூத்திரங்கள் 2) ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் (12 நூல்கள், 84 நூல்கள்).

பௌத்தம்:

  • புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்கு ஆசிரியர்களின் நினைவாற்றல் வழியாக சீடர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது.
  • ஏறத்தாழ கி.மு. 80ல் அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.
  • திரிபிடகா பௌத்த பொது விதிகள். அது மூன்று கூடைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • வினய பிடகா, சுத்த பிடகா, அபிதம்ம பிடகா ஆகியவை மூன்று பிரிவுகளாகும்.
  • ஜாதகங்கள் மற்றும் புத்த வம்சா ஆகியவை பொது விதிகளைப் பற்றிக் கூறுபவை. பாலி மொழியில் எழுதப்பட்ட பொது விதிகள் அல்லாத நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளது (மிலிந்த பன்கா, மகா வம்சம், தீபவம்சம், விசுத்திமக்கா (புத்தகோசா).

2. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட சமணம், பௌத்தம், சார்ந்த ஆதார எச்சங்களை விளக்கமாய் பட்டியலிடுக

சமணம் சார்ந்தது

  • சமணர்கள் கர்நாடகாவிலிருந்து கொங்குப் பகுதிக்கும், காவேரி கழிமுகப்பகுதிக்கும், புதுக்கோட்டைப் பகுதிக்கும், இறுதியில் பாண்டிய நாட்டுக்குள்ளும் இடம் பெயர்ந்தனர் என்பதற்குத் தெளிவான சான்று உள்ளது.
  • சித்தன்னவாசல் குகைக்கோவில் (நிலத்திலிருந்து 70 மீ உயரம், 17 சமணப்படுக்கைகள், தமிழ்-பிராமிக் கல்வெட்டு, சுவரோவியங்கள்).
  • காஞ்சிபுரம் – திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் (திருப்பருத்திக்குன்றம்), சந்திரபிரபாகோவில். (பல்லவர் கால கட்டடக் கலைப்பாணி, சுவரோவியங்கள், பல கிராமங்களில் சமணம் குறித்த தடயங்கள்)
  • கழுகுமலை சமண குடைவரைக் கோவில் (எட்டாம் நூற்றாண்டு, பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையன். பஞ்சவர் படுக்கை).
  • வேலூர், திருமலை மற்றும் மதுரை ஆகிய இடங்களிலும் சமணக் கோவில்கள் காணப்படுகின்றன.

பௌத்தம் சார்ந்தது

  • தமிழகத்தில் பௌத்தம் பரவியதற்குச் சான்றாக பாண்டிய நாட்டில் சில நினைவுச் சின்னங்கள் உள்ளன.
  • குகைகளில் காணப்படும் 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சின்னங்கள் பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது.
  • வீரசோழியம் (11 ஆம் நூற்றாண்டு இலக்கண நூல்), புத்தரின் செப்புச் சிலைகள் (13 ஆம் நூற்றாண்டு, நாகப்பட்டினம்) ஆகியவை பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன.
  • தியாகனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் (சேலம் மாவட்டம்) இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றன. சூடாமணி விகாரை நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டது.
  • மணிமேகமலை (சீத்தலை சாத்தனார்), மத்தவிலாச பிரகாசனம் (மகேந்திர வர்மன்) ஆகியவை ஆவணங்களாகும்.
  • பௌத்த விகாரை (காவிரிப்பூம்பட்டின அகழ்வாய்வு), 1.03 மீட்டர் உயர புத்தர் சிலை (பத்மாசனகோலம், திருநாட்டியட்டாங்குடி, திருவாரூர் மாவட்டம்) ஆகியவையும் பௌத்தம் சார்ந்த ஆதார எச்சங்கள்.

3. ஆசீவகத்தத்துவத்தின் சாரம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம் குறித்து விவாதிக்க.

ஆசீவகத் தத்துவம்:

  • ஆசீவகர்கள் வினைப்பயன், மறுபிறவி, முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தைக் கடைப்பிடித்தனர்.
  • அவர்களுடைய தத்துவம் வேதப்பாடல்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் பண்டைய சமஸ்கிருதத் தொகுப்புகள், சமண பௌத்த சமயங்களுக்கு முந்தைய கால ஆய்வுகள் முதலியவற்றில் காணக் கிடைக்கின்றது.

தமிழகத்தில் ஆசீவகம் தோன்றுதல்:

  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடஇந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. தென்னிந்தியாவில் பரவியிருந்தது.
  • தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட்டது.
  • பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆட்சிக்கால கிராம சமூகத்தினர் ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
  • இதுபோன்ற இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் பாலாற்றின் பகுதிகளில் (கர்நாடகா மற்றும் தமிழ்நாடு – வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்) 14ஆம் நூற்றாண்டு வரை ஆசீவகம் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது.

 

சில பயனுள்ள பக்கங்கள்